ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 9-நீயே நீயென்று என் கனா

Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்.
#AVP9
Priyadharshini S அவைகளின் எழுத்தில் அதிரடியாக ஒரு கதை 🥰
கிரிக்கெட் பிடித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும் ஏனென்றால் கிரிக்கெட் பிடிக்காத எனக்கே படிக்க படிக்க அவ்வளவு பிடித்தது 🥰
"நீயே நீயென்று என் கனா"
ஒரு பெரிய கூட்டு குடும்பம்.
அதில் மூத்த தலைமுறையாக வேங்கடம்.. பாவை..
வீட்டு கணக்கு வழக்கு அனைத்தும் அவரிடம் தான்.
இளைய தலைமுறையான பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் கூட தாங்கள் சாக்லேட்டிற்காக செலவு செய்த பணத்தை பற்றிய கணக்கை தாத்தனிடம் கொடுத்து விட வேண்டும். அப்படி குடும்பத்தை ஒன்றிணைத்து கட்டி காப்பவருக்கு பிடிக்காத ஒரே விஷயம் கிரிக்கெட். அந்த பெயரை கேட்டாலே ருத்ர தாண்டவம் ஆடி விடுகிறார் அது ஏன் என்பது கதையில்.
இவருக்கு பிடிக்காத விளையாட்டை தன் உயிராக கருதி ஒருவன் மேல் கொண்ட அதீத பாசத்தால் அவனுக்காக அவனுக்கு பிடித்ததை தனக்கானதாக எடுத்துக் கொள்கிறாள்
ஆராத்யா.. தாத்தாவிற்கு தெரியாமல் கிரிக்கெட் விளையாடும் இவளுக்கு வீட்டில் சிலரின் ஆதரவு கிடைக்கிறது. அதைக் கொண்டு பல வருஷமாக தன் கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவள் கையும் களவுமாக தாத்தாவிடம் மாட்டிக் கொள்கிறாள். அதற்கு பரிசாக கிடைத்தது அடியும் திடீர் திருமணமும். அதிலிருந்து தப்பித்து எப்படி தன் கனவை நோக்கி அடி எடுத்து வைத்தாள் என்பதும் கதையில்.
கல்லூரியில் ப்ரொபசராக பணியில் இருக்கிறான் அபய் அதிருபன். கிரிக்கெட் இவனின் உயிர் மூச்சாக இருக்கிறது. இந்தியாவிற்காக வேர்ல்ட் கப்பில் கலக்கும் இவன் அதற்குப்பின் அந்த விளையாட்டிற்கு முக்கிய தேவையான கிரிக்கெட் பேட்டை தொட முடியாத நிலைக்கு செல்கிறான். அது ஏன் என்பது கதையில்.
துவண்டு விடும் இவனுக்கு எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஒரு குரல். அவன் மாமன் மகளின் ஐந்து வயது மழலை குரல்.
கிரிக்கெட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் இவனின் நிலை மாமன் மகளின் வரவால் எப்படி சரியானது என்பதும் கதையில்.
பார்க்காமலேயே எப்போது எந்நேரத்தில் அத்தை மகனின் மீது காதல் வந்தது என்பது தெரியாமலேயே அவனின் கனவை தன் கனவாக சுமந்து அதை அவனுக்கு பரிசாக கொடுத்திட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்காக மட்டுமே அவனின் கனவை துரத்தி ஓடி அதில் வெற்றியும் பெறுகிறாள் ஆராத்யா. இவனின் காதல் அவ்வளவு அழகு 🥰❤️
நெப்போலியன் ஜானகி அருமையான கதாபாத்திரங்கள் 🥰
மகனுக்காக மட்டுமே வாழும் இவர்களின் பாசம் அருமை 🥰❤️
துவாரகேஷ், வெங்கட், திவ்யா, தாரணி ராணி தேவி ராகவேந்திரன் வேல மூர்த்தி கோசலை என பெரிய குடும்பம். அன்பால் நிறைந்த குடும்பம் 🥰
அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே ஒருவர்
வேங்கட மூர்த்தி.
இவருக்கு பிடிக்காத கிரிக்கெட்டை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகவே வருகிறான் அதிருபவன். அவரின் மனம் கவர்ந்தவளுக்காக. 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
🥰
Good luck 🥰 ❤️
 
#நீயே_நீயென்று_என்_கனா
#கௌரிஸ்ரிவ்யூ

கிரிக்கெட்+ காதல் கதை🤩🤩🤩🤩🤩….

இந்த ஸ்போர்ட்ஸ் பத்தி வர கதைகளம் பெருசா படிக்க மாட்டேன்….

ஏன்னா எனக்கு அதை பத்தி ஒன்னுமே தெரியாது….அதனால தான்….

ஆன இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சது….

அதுக்கு ரைட்டர் ஓட எழுத்து தான் காரணம்👏👏👏👏👏👏….

அபய்…கிரிக்கெட்லா ஜெயிக்கணும்னு போராட..அந்த போராட்டமும் அவனுக்கு வெற்றியை தருது♥️♥️♥️♥️♥️….

ஆன அந்த சந்தோஷம் நிலைக்கறதுகுள்ள அவனின் கனவு முடிவுக்கு வருது 😔😔😔😔😔….

சின்ன கவன குறைவு…அவன் பாதையை மாற்றி அமைக்குது…..

இனி வாழ்வில் கிரிக்கெட் இல்லைனு சேர்ந்து இருக்க விடாம அவனின் கல்வி அவனுக்கு கை கொடுத்து நல்ல நிலையில் வைக்க….

அப்பவும் அவனின் மனதில் வலி இருந்துட்டே இருக்கு….

அவன் கனவுகளை, ஆசைகளை தனதா தாங்கி வரா ஆரா🥰🥰🥰🥰🥰…..

ஆனால் அவளின் கிரிக்கெட் கனவுக்கு பெரும் எதிர்ப்பு அவள் வீட்டில் இருந்தே…..

அதை எல்லாம் தாண்டி, அவனின் கனவுகளை தனதாக்கி எப்படி ஆரா வின் பண்ற அப்படிக்கறது தான் மீதி கதை🫰🫰🫰🫰🫰…..

அபய்…..உடைந்து போகும் தருணத்தில் எல்லாம் இவனை காக்கறது அப்பா நெப்போலியனும் & ஆராவின் நினைவுகளும் தான்…

இவனின் சொல்லாத காதலும், அதை சொல்லும் கண்களும், கண்ணியமும், அவள் கனவை நிறைவேத்த இவன் செய்யும் செயல்கள் எல்லாமே ரொம்ப cute 🥰 🥰 🥰 🥰 🥰…..

இவன் கேரக்டரே ரொம்ப ரொம்ப cute🥰 🥰 🥰 🥰 🥰……

ஆரா…சரியான அருந்த வாலு 🤣🤣🤣🤣ஆனாலும் ஏஞ்சலு 🫰🫰🫰🫰🫰….

அபய் மேல வைத்த பாசத்துக்காக…அவன் கனவை தனதாக்கி…அதை தக்க வைக்க போராட…

குடும்பமே எதிர்த்து நிக்குது…..

எல்லாத்தையும் தாண்டி நின்ன பிடிவாதம்🔥🔥🔥🔥🔥

நல்ல கனவை அடைய பிடிவாதம் பிடிக்கலாம்…..தப்பில்ல🤷🤷🤷🤷….

நெப்போலியன்….ஒரு தந்தை எப்படி இருக்கணும்னு சிறந்த எடுத்துக்காட்டு♥️♥️♥️♥️♥️

ஜானு….நெப்போலியனுக்கு ஏத்த மனைவி…. அபய் ஓட பெஸ்ட் அம்மா🫰🫰🫰🫰

வேங்கடம்….வில்லன் …அன்னைக்கு அபய்க்கு….இன்னைக்கு ஆராக்கு🤭🤭🤭🤭🤭🤭…..

அவரின் நியாயம் புரிந்ததும்…. ப்பா..நல்ல மனுஷன் தான் போலவேனு தோனமா இல்ல….

அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்…..

துவா, வெங்கட், திவ்யா, தாரணி, பிரகாஷ், பாவை பாட்டி எல்லாமே சூப்பர்🥰🥰🥰🥰🥰

கதை ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ரைட்டரே 🫰🫰🫰🫰🫰….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
நீயே நீயேன்று என் கனா
is an inspiring story that beautifully blends love, family, and cricket.
The protagonist அபய் dreams of representing India in cricket from a young age. But when an unexpected eye and hand condition stops him from playing, he faces immense emotional pressure. Guided by his parents, he turns to coaching, where he unexpectedly reunites with his childhood love, ஆரத்யா.
The story explores whether Abhi, with dedication and guidance, can still achieve his cricketing dreams while navigating love and relationships. Told in a warm, family-oriented setting, the narrative strikes a perfect balance between emotion, romance, and sports, making it an uplifting and heartfelt read✨❤️🤌🏻
 
பிரியதர்ஷினியின்

நீயே நீயென்று என் கனா



அபய் அதிரூபன் ஆராதியா


படிப்பு தான் முக்கியமென கூறும் தன் தந்தையை எதிர்த்து தன் மகனின் கனவுக்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் அபய் பெற்றோர்.



தான் உயிரை மதிக்கும் மண்ணை விட்டு ,உறவுகளை பிரிநது தன் கனவுக்காக தன்னுடைய பெற்றோர்கள் துணை நின்றனரோ,அந்த கனவை இலட்சியத்தை தொடர இயலாமல் முடியாமல் போக,தனக்குள்ளே உடைந்து சிதைந்து போகிறான் அபய்.



ஆனால் அப்படியே இருக்க முடியாமல் தாய் தந்தை வதங்கி கஞங்கிய முகம் காட்டி கொடுக்க,முயன்று வெளி வந்து தன்னை வேறொரு துறையில் ஒருவாரு நிலை பழகி கொள்கிறான்,




தன்னை மட்டுமே ஒருத்தி நினைத்தி உருகி கரைந்து, தன் கனவுக்காகவே தன்னையே உருக்கி,கனவிலும் நனவிலும் இவனது கனவே தனதாக மாற்றி இவனுக்காக ஒருத்தி ,அதுவும் அவனது அத்தை மகள் இருக்கிறாள் என தெரியயாமல்.




பல தடைகளை கடந்து அபயை சந்திக்கும் ஆராதியா,அவள் வெளிபடுத்தி கொள்ளமல் இருக்க, ஏதோ ஒரு உந்துதலில் அவளை பற்றிய அறியும் அவாவில் அவனளவளை அறிந்து கொள்கிறான்.




அறிந்ததை அவளை பற்றிய தனது உள்ளகிடக்கையும் அவளிடம் கூறாமல்,தனக்கு எல்லாமான தாயிடம் கூற, அவரோ அவனை இவன் என்ன ரகம் என பார்த்து வைக்கிறார்.



பிடித்தத்தை பிடித்த பெண்ணிடம் கூறாமல் ,பெற்றவளிடம் கூறினால் அவரும் என்ன தான் செய்வர்,பின்னே பல வருடங்களுக்கு முன்பே காதல் மனம் புரிந்தவர்கள அவர்கள், அவர் மகன் இப்படி இருந்தால், ஆனால் அவனோ அவனுக்கு அவனே ஒரு காரணத்தை கர்ப்பித்து கொண்டு சொல்லாமல் வளம் வர, நயகிக்கு மட்டுமல்ல, நமக்கும் போடா என சொல்ல சொல் வருகிறது.




பெண்ணவளோ பிடிதத்தை வாய்விட்டு கூறிட, அவனோ கண்கள் ஆயிரம் கதை கூறினாலும் ,வாயை திறந்தால்,இப்ப சொல்ல தோணால என்ற ஒன்றை மட்டுமே ஜபமாக சொல்கிறான்‌,அமுக்கினி மகாராசன்…




பய புள்ள வாய திறந்திட்டா ,கட்டுபாடு எல்லாம் கட்டவிழுததுகிட்டு ஓடிடும் பயந்துகிட்டு பம்மிடுச்சு.


குடும்பமே துணையாக நின்ற அபயினாலே தன் கனவு பயணத்தை தொடர முடியாமல் போக ,ஆராதியாவினால் முடிந்தததா என்ன???



பேர் ஆர்வமும் பெரும் உழைப்பும் இருந்தும் ஏன் அபயினால் தன் கனவினால் தொடர முடியவில்லை???



சிறு வயதிலே பிரிந்த தன் மாமன் மகனை ஆராதியா எப்படி கண்டுபிடிக்கிறாள்..


எப்படி சந்திக்கிறாள்..



படிப்பை தவிற மற்றவற்றிற்கு முக்கியத்துவம் தராத குடும்பத்தில் பிறந்தவள் ,தன் அகம் சுமந்த அகம் கொண்டவனின் கனவை நிறைவேற்ற, அவள் சந்தித்த போராட்டங்களையும் தடைகளையும் ஈப்படி கடந்தாள்.



பிரிந்த குடும்பங்கள் எப்படி சேர்ந்தது.



அபயின் தத்தா முழு மூச்சாக படிப்பை தவிற மற்றவற்கு தடை சொல்ல காரணம் தான் என்ன?



மேலும் அழகான கூட்டு குடும்ப ஒற்றுமையும்,அதில் கோலுச்சி நிற்கும் பெரியவரின் ஆளுமையையும், அறிய

வாசித்திடுங்கள்



நீயே நீயென்று என் கனா….காதல் பாதரசம்



வாழ்த்துகள் ரைட்டரிஜீ


💖💖💖💖
 
Top