ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

TINN கதைக்கான முன்னோட்டம்

Status
Not open for further replies.

Riyathi

Member
Wonderland writer
இந்தத் திரியில் கதைக்கான முன்னோட்டங்கள் பதிவிடப்படும்😊
 
TINN💞

முன்னோட்டம்-1

"பதில்ல்..‌‌...."

அவனுடைய அழுத்தமான வார்த்தைகளில் அவளுடைய உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.

தனக்கு பதில் கூறாது இன்னும் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தவளின் மேல் எரிச்சல் உண்டாக மீண்டும் அதே அழுத்தத்துடன் "பதில்ல்ல்....." என்றிருந்தான்.

நடுங்கும் தன் உடலையும் இதழ்களையும் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டவளாக,

"அ....அது..வந்து..உங்க...உங்ககிட்ட..பே...பேச .....வேண்...." என்று அவள் முடிக்கும் முன்பே,

"ஓஓ...எப்போவும் என்ன பாத்ததும் பட்டிமன்ற பேச்சாளர் போல அப்புடியே வார்த்தைய அருவியா கொட்ற பாரு" என்று நக்கல் செய்தவனைக் கண்டு சிறிது தைரியத்தை வரவழைத்தவள்,

"இல்ல..உங்கள...விட்டு.. தள்ளிளி...."

"இப்ப தள்ளி தான இருக்க" என்று இடைமறித்தவனிடம்,

"அது வந்து அப்படி இல்லங்க கொஞ்சம் விலகி இருக்குறது தான் நல்லதுனு..." என்று ஒரே இழுவையாக இழுத்துக் கொண்டிருந்தவளை,

"யாருக்கு நல்லது.?? என்ன விலகி..?? ஏற்கனவே ரெண்டு அடி விலகி தான உக்காந்திருக்க" என்று சற்று கடுப்பாக உரைத்தவனிடம்,

"ஹான்.. ரெண்டு எல்லாம் பத்தாது பத்து பதனஞ்சு அடியாச்சும் தள்ளி இருக்கனும்" என்று அவசரமாக விழி விரித்தவளைக் கண்டு வந்த கோவம் கூட மறைந்து போக, அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.

அதை சாமர்த்தியமாக அவளிடம் இருந்து மறைந்தவன்,

"இப்போ என்னடி எப்பவும் என்ன விலகாம இப்படியேவா இருக்க??" என்றவாறே அவள் கரத்தினை பற்றி இழுக்க, திடீரென அவனிடம் இருந்து இப்படியான செயலை எதிர்பாரா மெல்லியவளோ காளையவன் நெஞ்சமதில் மோதி தன் கரங்களால் அவன் தோளை அழுந்தப் பற்றியவாறே நிமிர்ந்து அவனை அதிர்ந்து பார்த்தாள்...

😍😍😍😍😍

ஹாய் செல்லாஸ், கதையின் முன்னோட்டம் பதிந்துள்ளேன் எப்படி இருக்குன்னு கொஞ்சம் ஒரே வரியாகக் கூட உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.:giggle:
கூடிய விரைவில் அத்தியாயங்களுடன் உங்களை சந்திக்க வருகிறேன் 🙏

Last edited:
TINN 💞

முன்னோட்டம்-1

"பதில்ல்..‌‌...."

அவனுடைய அழுத்தமான வார்த்தைகளில் அவளுடைய உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.

தனக்கு பதில் கூறாது இன்னும் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தவளின் மேல் எரிச்சல் உண்டாக மீண்டும் அதே அழுத்தத்துடன் "ப
தில்ல்ல்....." என்றிருந்தான்.

நடுங்கும் தன் உடலையும் இதழ்களையும் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டவளாக,

"அ....அது..வந்து..உங்க...உங்ககிட்ட..பே...பேச .....வேண்...." என்று அவள் முடிக்கும் முன்பே,

"ஓஓ...எப்போவும் என்ன பாத்ததும் பட்டிமன்ற பேச்சாளர் போல அப்புடியே வார்த்தைய அருவியா கொட்ற பாரு" என்று நக்கல் செய்தவனைக் கண்டு சிறிது தைரியத்தை வரவழைத்தவள்,

"இல்ல..உங்கள...விட்டு.. தள்ளிளி...."

"இப்ப தள்ளி தான இருக்க" என்று இடைமறித்தவனிடம்,

"அது வந்து அப்படி இல்லங்க கொஞ்சம் விலகி இருக்குறது தான் நல்லதுனு..." என்று ஒரே இழுவையாக இழுத்துக் கொண்டிருந்தவளை,

"யாருக்கு நல்லது.?? என்ன விலகி..?? ஏற்கனவே ரெண்டு அடி விலகி தான உக்காந்திருக்க" என்று சற்று கடுப்பாக உரைத்தவனிடம்,

"ஹான்.. ரெண்டு எல்லாம் பத்தாது பத்து பதனஞ்சு அடியாச்சும் தள்ளி இருக்கனும்" என்று அவசரமாக விழி விரித்தவளைக் கண்டு வந்த கோவம் கூட மறைந்து போக, அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.

அதை சாமர்த்தியமாக அவளிடம் இருந்து மறைந்தவன்,

"இப்போ என்னடி எப்பவும் என்ன விலகாம இப்படியேவா இருக்க??" என்றவாறே அவள் கரத்தினை பற்றி இழுக்க, திடீரென அவனிடம் இருந்து இப்படியான செயலை எதிர்பாரா மெல்லியவளோ காளையவன் நெஞ்சமதில் மோதி தன் கரங்களால் அவன் தோளை அழுந்தப் பற்றியவாறே நிமிர்ந்து அவனை அதிர்ந்து பார்த்தாள்...

😍😍😍😍😍

ஹாய் செல்லாஸ், கதையின் முன்னோட்டம் பதிந்துள்ளேன் எப்படி இருக்குன்னு கொஞ்சம் ஒரே வரியாகக் கூட உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.:giggle:
கூடிய விரைவில் அத்தியாயங்களுடன் உங்களை சந்திக்க வருகிறேன் 🙏

Teaser nalla irukku dear.... font size konjam perusaa vaingga da... padikka easy ah irukkum. All the best.
 
முன்னோட்டம் - 2

"ஹனி"

"ம்ம்"

"ஹனினி"

"ம்ம்ம்"

"அடியேய்ய் ஹனிஇஇஇ..."

"அய்யோ ஆத்தா .....அடச்ச்ச.... இப்போ எதுக்கு மினி காதுக்குள்ள வந்து கத்துற??"

"கூப்பிட்டே இருக்கேன் அப்படி என்ன மும்முரமா யோசிச்சுட்டு இருக்க??"

"ப்ச்ச்.....அது ஒன்னுமில்ல மினி...நீ எதுக்கு கூப்ட??"

"அது வந்து ஹனினி......"

ஏற்கனவே இன்று லெமன் ரைஸ்கு தன் அத்தை ஷைட் டிஸ்ஸாக வைத்த உருளை வறுவல் நன்றாக இருந்ததா?? இல்லை எண்ணெய் கத்தரிக்காய் நன்றாக இருந்ததா??? என்ற தன் தீவிர சிந்தனையைக் கலைத்த தோழியின் மேல் காண்டாக இருந்த ஹனி,

"அடியேய்....ராகம் பாடாம ஒழுங்கா சொல்லலஅஅ ......இந்த ஹனி சனியா மாறிடுவா பாத்துக்கோ" என்றிருந்தாள்.

"சரி..சரி...சொல்லிடறேன், நேத்து மேன்லியா ஒரு மேன பாத்தோமே.."

"என்னாது......... பாத்தோமாஆஆ???? எங்கடி பாத்த?? எப்போ பாத்த?? என்ன விட்டு நீ மட்டும் எப்படி பாக்கலாம்.." என்று எகிறிக் கொண்டு வந்தாள் ஹனி.

"ஸ்ஸ்..ஷப்பா.. நீயும் தான்டி பாத்த லூசு"

"நானுமா??.....இருக்காதே.... கனவுல கூட அப்படி மேன்லியா யாரும் வரதில்லயே.....இவ யார சொல்றா??" எனத் தன் போக்கில் முனங்கிக் கொண்டிருந்த ஹனியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட மினி,

"கனவுல இல்லடி நெஜத்துல...நேத்து உங்க வீட்டு பக்கத்துல...பேரு கூட ஏதோ... ஸ்க..ஸ்கந்..." என்று மினி தடுமாற,

"ஸ்கந்தகுமரன்" என்று கூறி அதை முடித்து வைத்தாள் ஹனி.

"எஸ் எஸ்... அவரேதான்" என்ற மினியிடம், "அவங்களுக்கு என்ன இப்போ??" என்றிருந்தாள் ஹனி.

"அது வந்துடி...வந்துது..."

"ப்ச்ச்...மேலஅஅ..மேல சொல்லு" என்றவளை புரியாமல் பார்த்த மினி,

"இல்லடி இருக்கட்டும்... நான் கீழ பாத்தே சொல்றேன்" என்றிருந்தாள்.

இப்போது தலையிலடித்துக் கொள்வது ஹனியின் முறையானது.
 
Last edited:
Status
Not open for further replies.
Top