ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கண்ணாளா… எனை ஆளவா… கதைத்திரி

Status
Not open for further replies.

Madhusha

Well-known member
Wonderland writer
_e850afa6-109e-415e-abe5-939d9f124984.jpeg



கண்ணாளா… எனை ஆளவா…

அத்தியாயம் 1

காவேரி கருத்தரித்தல் மையம்

என்ற பெயர் பலகையை தாங்கியிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர் பார்த்தீபனும், பிருந்தாவும்..

ஏற்கனவே அப்பாயின்ட்மெண்ட் வாங்கிவிட்டதால், நீண்ட வரிசையில் அவர்களையும் அமர வைத்தனர் அங்கிருந்த சிற்றுழியர்கள்.

பிருந்தாவிற்கு அங்கு வரவே இஷ்டமில்லை. கணவனின் கட்டாயத்தில் வந்து அமர்ந்திருக்கிறாள்..

பார்த்தீபனோ, எந்தவித சலனமும் இல்லாமல்.. அங்குமிங்கும் நடப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

பிருந்தா தன்னைச் சுற்றியிருந்த பெண்களை பார்த்தாள்..

ஒரு சிலர் தன் கணவர்களுடன் வந்திருந்தனர்.. ஒரு சிலர் தன் தாயுடன் வந்திருந்தனர்.. ஒரு சிலர் தன் மாமியாருடன் வந்திருந்தினர் போலும்.. சற்று முகத்தை அழுகையுடன் வைத்திருந்தனர்..

அழுகையை தாண்டி அத்தனை பேர் கண்களிலும் ஒரு வித ஏக்கம்..

குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல..

வலி.. குழந்தை வயிற்றில் உருவான நாளில் வாந்தி, மயக்கம், தலைசுற்றல்.. விரும்பியதை சாப்பிட முடியாமல் போவது என எத்தனையோ உபாதைகளை பெண்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது..

அது மட்டுமா? பிள்ளைப் பிறப்பு.. வலியின் உச்சம்.. உடல் எலும்புகள் சிறிது நகர்ந்தால் தாங்க முடியாத ஆண்களுக்கு, அவன் ஆண்மகன் என பறைசாற்ற பெண்கள் தாங்கிக் கொள்ளும் பெரும் தியாகம் தான் பிள்ளைப் பேறு..

வலிக்கும் என தெரிந்தே பிள்ளையை தாங்கிக் கொள்வது என்பது சாதாரணமல்லவா..

அந்த வலியை தாங்கிக் கொள்ள தயாராக வந்துள்ள பெண்களைப் பார்த்த பிருந்தாவிற்கும் கண்கள் கலங்கியது..

இதில் எத்தனை பேர் ஏக்கமாய் வந்திருப்பர்.. எத்தனை பேர் அவமானப்பட்டு வந்திருப்பார்கள் என நினைத்த பிருந்தாவின் இதழ்ககள் விரக்தியாக வளைந்தது..

அவர்களைப் பார்த்த பிருந்தாவிற்குள் சுளீரென்ற வலி வந்துப் போனது..

அவளும் கணவனுடன் தான் வந்திருக்கிறாள்.. ஆனால்.. என அவள் மனம் பழையதை எண்ணப் போகும் வேளையில்..

“மிஸ்ஸஸ்.பிருந்தா பார்த்தீபன்..” என்றழைப்பில் சட்டென்று மீண்டு விட்டாள் பிருந்தா..

அழைத்ததும் தான் தாமதம் வேகமாக எழுந்து நின்றான் பார்த்தீபன்.. இன்னும் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பிருந்தாவின் கைச்சந்தை அழுந்தப் பற்றியவன், சட்டென்று அவளை எழுப்பி நிற்க வைத்தான்..

“வா பிருந்தா.. டாக்டர் கூப்பிடுறாங்க..” என விறுவிறுவென அவளை இழுக்காத குறையாக இழுத்துச் சென்ற பார்த்தீபனை பார்க்கவே ஏனோ வெறுப்பாக இருந்தது அவளுக்கு..

ஒரு வருடத்திற்கு முன்பாக காதலித்த பார்த்தீபன் இப்பொழுது கசந்து போய் நிற்கிறான்.

டாக்டரின் அறையில் அமர்ந்திருந்தனர் இருவரும்..

“உங்க பேரு..” என டாக்டர் பிருந்தாவை பார்த்து கேட்டார்..

“பிருந்தா டாக்டர்” என பதில் சொன்னது என்னவோ பார்த்தீபன் தான்..

“சொல்லுங்க ம்மா.. உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆகிருச்சி..” என டாக்டர் கேட்டு முடிக்கவில்லை..

“எங்களுக்கு குழந்தை பிறக்காது டாக்டர்.. எங்களுக்கு ஒரு ஸ்பெர்ம் டோனர் தான் வேணும்.. அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்..” என்ற பார்த்தீபனை அழுத்தமாக பார்த்தார் டாக்டர்..

அவனை அழுத்தமாக பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவைப் பார்க்க, அவள் முகத்தில் எந்த வித சலனமும் இன்றி முகமோ நிர்முலமாக இருந்தது..

ஒரு வேளை கணவன் கொடுமையோ? என அவள் கண்களை உற்றுப் பார்க்க.. அழுததற்கான எந்த வித அடையாளமும் அவள் கண்களில் இல்லை..

“சார் இதுக்கு முன்னாடி ஏதாவது ஹாஸ்பிட்டல் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கீங்களா?.. ரிப்போர்ட் இருந்தா கொடுங்க சார்..” என டாக்டர் பார்த்தீபனை நோக்கி கை நீட்டினார்..

பிருந்தா தான் வந்ததில் இருந்து வாயே பேசவில்லையே..

“இல்லை மேம். நாங்க இதுவரைக்கு எந்த ஹாஸ்பிட்டலும் போனதில்லை.. எந்த செக்கப்பும் பண்ணதில்லை..” என்றவனை அதிர்ந்து பார்த்தார் டாக்டர்..

“வாட்ட்ட்.. எந்த செக்கப்பும் பண்ணதில்லையா?.. என்ன விளையாடுறீங்களா?.. செக்கப் பண்ணாம எப்படி சார் குழந்தை பிறக்காதுன்னு சொல்லுறீங்க?” என சற்று காட்டமாக கேட்டார் டாக்டர்

“அவருக்கு ஆண்மை கிடையாது.. இது அதுக்கான ரிப்போர்ட்..” என தான் கொண்டு வந்த கைப்பையினுள் இருந்து ரிப்போர்ட்டை எடுத்து, டாக்டரிடம் நீட்டினாள் பிருந்தா..

தன்னருகில் அமர்ந்திருந்தவளை எரிப்பது போல் பார்த்தான் பார்த்தீபன்..

“இதை எதுக்கு நீ எடுத்துட்டு வந்தே?..” என பிருந்தாவின் தோள் அருகே சாய்ந்து, பற்களைக் கடித்துக் கொண்டு கேட்ட பார்த்தீபனை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தாள்.

“நீ சொன்னால் நான் கேட்க வேண்டுமா?.” என்ற பார்வை தான் அது..

“ஓகே சார் உங்க ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன்.. நீங்க சொன்ன மாதிரி.. ஸ்பெர்ம் டோனர்க்கு நாங்க ஏற்பாடு பண்ணிடுறோம்.. அதுக்கு பில் மட்டும் பே பண்ணிடுங்க..” என்ற டாக்டருக்கு தலையாட்டி விட்டு இருவரும் வெளியே வந்தனர்..

ஏழு மாதங்களுக்குப் பிறகு..

கண்ணாடி முன்பாக தன் ஏழு மாத வயிற்றை வருடிக் கொண்டிருந்தாள் பிருந்தா..

பிருந்தாவனத்தில் பிறந்த ராதையோ இவள் எனும் அளவிற்கு பொலிவான தோற்றம் அவளுடையது..

அவளின் தோளில் கை வைத்த கணவனின் மார்பில், பின்னோக்கி சரிந்தவளின் இமைகளில் கண்ணீர்த் துளிகள்..

“என்னாச்சி பிருந்தா?.. ஏதாவது வலிக்குதா?..” என்றவனை நோக்கி திரும்பியவள்.. அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்..

“எத்தனை நாள் வலி பார்த்தீபா இது?.. நானும் இந்த தருணத்தை அனுபவிப்பேன்னு கனவுல கூட நினைக்கலை.. நீங்க குழந்தை நார்மலா பெத்துக்கலாம்னு சொல்லும் போது கூட வலியை நினைச்சு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?.. ஆனா இப்போ” என்றவளின் கண்கள், அவளையும் மீறி கண்ணீரில் கசிந்தது..

“இது நம்ம குழந்தை பிருந்தா.. இதுக்கப்புறம் உன் கண்ணுல கண்ணீர் வரவே கூடாது.. இந்த குழந்தையால நம்மளுக்கு ராஜ யோகம் அடிச்சிருக்கு.. இனி நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையே சொர்க்கம் தான்” என்றபடி அவளின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் சேலையின் மடிப்பை நீவிவிட்டான்..

தன் கணவனின் அளவற்ற அன்பில் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள் பிருந்தா..

இந்த ஏழு மாதங்களாய் அவன் காட்டிய அன்பு அளப்பரியது அல்லவா..

அவளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் எதுவுமே வரவில்லை..

முதல் 5 மாதத்தில் ஸ்கேன் ரிப்போர்ட்டில், ஒரு ஜீவன் தன் வயிற்றில் இருப்பதை அவள் உணரவேயில்லை.

சிறு துடிப்பு, சிறு பாரம் என எந்த வித மாற்றமும் தன் வயிற்றில் இருப்பதை போன்று அவள் உணரவில்லை..

ஒரு வேளை தான் கர்ப்பமாக இல்லையா? என கவலைக்கூட சில நேரம் பட்டிருக்கிறாள்..

ஆனால் அத்தனைக்கும் வடிகாலாக ஆறாம் மாத தொடக்கத்தில் வேலை விஷயமாக பேங்க் சென்றவளுக்கு நீண்ட நேரம் பசி, தாகம் ரெண்டும் கலந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில், குழந்தை விட்டது ஒரு உதை..

வயிற்றுக்குள் திடீரென தோன்றும் மாற்றத்தை உணர்ந்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது..

தன் குழந்தை உதைக்கிறது.. தன்னை உதைத்து தள்ளுகிறது என சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது..

அவளின் கண்ணீரை பேங்க்கிற்கு வருவோர், போவோர் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்..

ஆனால் அவளுக்கு முதல் முதலாக தன் குழந்தையின் துடிப்பை உணர்ந்த தருணம், வாழ்வின் மறக்க முடியாத பொக்கிஷமான நிமிடங்களாக மாறியது..

அதன் பின் தான் இந்த லக்ஷரி அப்பார்ட்மெண்டை வாங்கினார்கள் பார்த்தீபனும், பிருந்தாவும்..

பார்த்தீபனுக்கு தாய் மட்டுமே.. பிருந்தாவிற்கு அதுவும் கிடையாது.

அதனால் அவள் அனாதையெல்லாம் இல்லை..

கொஞ்சம் பணக்கார அனாதை..

தந்தைக்கும், தாய்க்கும் ஒத்து வரவில்லை..

விவாகரத்து வாங்கி, புதிய வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள்..

அவர்களின் புதிய வாழ்க்கையில் பிருந்தாவிற்கு இடமே இருந்ததேயில்லை..

பணம் மட்டும் மாதாமாதம், அவளுக்கென்று தொடங்கியிருக்கும் அக்கவுண்டிற்கு தவறாமல் வந்து சேரும்..

அந்தப் பணத்தை செலவு பண்ணும் வேளையில் அவளின் இதழ்களில் என்றுமே விரக்தியான புன்னகை தான்..

தாயின் அன்பு தரமுடியாததையா அந்த பணம் அவளுக்கு கொடுத்து விடும்..

தந்தையின் பாதுகாப்பை அந்த பணத்தினால் கொடுத்திட முடியுமா என்ன?..

அவள் ஒரு வருடம் காதலித்து கைப்பிடித்த கணவன் தான் பார்த்தீபன்..

தன் முன்னால் மண்டியிட்டவனின் உச்சிமுடியை கோதி விட்டவாறே, அவன் தலையில் முத்தம் பதிக்க செல்ல..

“பார்த்தீபா.. உன் கம்பெனி முதலாளி வந்திருக்காரு பாரு..” என்றதும்.. அதுவரை இருந்த மோனநிலை அறுந்து.. சட்டென்று எழுந்து நின்றான் பார்த்தீபன்..

அதுவரை ஆசுவாசமாக இருந்த பார்த்தீபன் சற்று பரபரப்பானது போன்ற தோற்றம் வந்தது பிருந்தாவிற்கு..

“யாரு வந்திருக்கா பார்த்தீபா.. உன் முதலாளியா? நம்ம பங்க்சனுக்கா? அவரை ஏன் இன்வைட் பண்ண?.. உன்னோட வேலை செய்யுறவங்களை கூட நீ அழைக்கலை தானே..” என்றவளின் தோளில் கைப்போட்டவாறே, வெளியே அழைத்துச் சென்றான்..

அங்கு பிருந்தாவின் வளைகாப்பிற்கான அத்தனை ஏற்பாடுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தது..

அதைப் பார்க்கும் பொழுதே மனதில் ஒரு வித நெகிழ்வு.. எத்தனை நாள் கனவு இது?.. எத்தனை நாள் அழுதிருப்பாள்.. எத்தனை நாள் ஏங்கி தவித்திருப்பாள்..

“பார்த்தீபா..” என அவனுடன் சேர்ந்து அங்கிருந்த நீள் சோபாவில் சென்று அமர்ந்தாள்..

பார்த்தீபனின் பார்வை அங்கு நின்று, அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அவ்வியக்தனின் மேல் தான் நிலைக்குத்தி இருந்தது..

அவனின் பார்வையோ, அங்கு சேரில் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்த பிருந்தாவின் மேல் தான் அழுத்தமாக பதிந்தது.

ஆரம்பித்தது பிருந்தாவின் வளைகாப்பு வைபவம்..

சீரோடும், சிறப்புமாக நடந்த வளைகாப்பின் முடிவில் சோர்வின் உச்சத்தில் இருந்தாள் பிருந்தா..

புதிதாக குடியேறியிருந்ததால் அந்த அப்பார்ட்மெண்டில் அனைவரையும் அழைத்திருந்தனர் பார்த்தீபனும், பிருந்தாவும்..

அத்தனை சடங்குகள் நடந்துக் கொண்டிருந்த வேளையிலும் அவ்வியக்தன் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை..

அவளையே தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனின் பார்வையில் கண்களை சுருக்கினாள் பிருந்தா.. ஆனால் அவள் இருக்கும் நிலைமையில் எதுவும் கேட்க முடியாதே..

“பிருந்தா..”

“அத்தை..”

“நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடும்மா..” என்றதும், தன் பெரிய வயிற்றைப் தூக்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல தன் அறைக்குச் சென்றாள் பிருந்தா..

அதுவரை கசகசவென இருந்த தன் புடவையை அவிழ்த்து கட்டிலில் போட்டாள்.. கதவை திறந்து ஒருவர் உள்ளே வரும் ஓசை கேட்டது.. பார்த்தீபன் தான் வருகிறான் என நினைத்தவள்..

“பார்த்தீபா.. ரொம்ப டயர்டா இருக்கு.. இடுப்பெல்லாம் ரொம்ப வலிக்குது..” என திரும்பியவள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..

கதவை மூடி அதன் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்..

அவனைப் பார்த்த அடுத்த கணமே, தன் உடலின் மேல் சேலை என்பதை உணர்ந்தவள்.. சட்டென்று கட்டிலில் போட்ட சேலையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்..

“ஏய்ய்ய்.. இங்கே என்ன பண்ற நீ?.. வெளியே போடாஆஆஆ..” என கர்ஜித்தவளுக்கு, சத்தமாக கத்தக் கூட முடியவில்லை..

அப்பொழுதும் அவன் அமைதியாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

“பார்த்தீபா..” என தன்னையும் மீறி சத்தமாக அழைத்தாள்..

ஆனால் பார்த்தீபன் வரும் வழியை தான் காணவில்லை..

“அவன் வரமாட்டான்..” என எஃகு போன்ற உறுதியான குரலில் சொன்னவனை முறைத்துக் கொண்டு நின்றாள் பிருந்தா்..

“அவன் ஏன் வரமாட்டான்?.. நீ முதல்ல வெளியே போ..” என்றவள் வேகமாக அவனை அறையில் இருந்து பிடித்துத் தள்ள முயன்றிட, வேகமாக நடந்து வந்தவள், தரையில் போடப்பட்டிருந்த மேட்டில் கால் வழுக்கிட, சட்டென்று குப்புற விழப் போனவளை, ஓடிவந்து தாங்கிக் கொண்டான் அவ்வியக்தன்..

அவள் விழும் வேகத்தில் சேலை நழுவி விழ, அவ்வியக்தன் கைகள் பதிந்தது என்னவோ அவளின் வயிற்றில் தான்..

அவள் வயிற்றில் அவன் கரம் பட்ட அடுத்த நொடி குழந்தை மறுபடியும் உதைத்தது..
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 2

சட்டென்று பிருந்தாவின் கண்கள் விரிந்தது..

அன்று பேங்கில் வைத்து உதைத்த குழந்தை இன்று தான் உதைக்கிறது..

ஏன்?.. என்ற கேள்வி அந்த நிமிடம் உதைத்தாலும், சூழ்நிலை அதைக் கருத்தில் பதிய விடவில்லை..

சட்டென்று அவன் கைகளுக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், விட்டாள் ஒரு அறை..

“உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா? அடுத்தவன் பொண்டாட்டி ரூம்க்குள்ள நுழைஞ்சிருப்ப?..” என எரிக்கும் பார்வையில் முறைத்துக் கொண்டே கேட்டாள்..

கன்னக்கதுப்பு சிவந்து, முகம் இறுகி நின்றிருந்தவனின் முகத்தில் அவ்வளவு ரெளத்திரம்..

சிவந்த விழிகளுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தவனின் விழிகள் அவனையும் மீறி, ஒரு நிமிடம் அவளின் மணிவயிற்றில் பதிந்தது..

“என் குழந்தையை மட்டும் நீ சுமக்காம இருந்திருந்தா, உன்னை இந்நேரம் கொன்னுப் போட்டுருப்பேன்.. டி” என கர்ஜித்தவனை அதிர்ந்து பார்த்தாள் பிருந்தா..

“உன் குழந்தையா?.” என அதிர்ந்து நின்றது ஒரு கணம் தான்..

“என்ன உளறிட்டு இருக்க?.. இது என் குழந்தை.. எனக்கு மட்டுமே சொந்தமான குழந்தை.. குழந்தையை சொந்தம் கொண்டாட நீ யாரு?” என்றவளின் உள்ளம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது..

“இது ஒன்னும் உன் குழந்தை இல்லை என் குழந்தை.. திஸ் இஸ் மை பேபி.. மை பிரின்சஸஸ்..” என ஓரெட்டு எடுத்து வைத்தவனின் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள் பிருந்தா..

“இங்கே பாரு, குழந்தையை சொந்தம் கொண்டாடுற வேலையெல்லாம் வச்சிக்காதே… வெளியே போஓஓ..” என்றவளின் குரலில் அவ்வளவு கம்பீரம், அழுத்தம் ரெண்டும் கலந்து இருந்தது..

“லிசன்.. நான் சொல்லுறதை முதல்ல கேளு..” என்றவனை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்களில் ரெளத்திரம் தான் தெரிந்தது..

“நீ யாருடா எனக்கு?.. நீ சொல்லுறதை நான் கேட்கணுமா?.. ஹான் வெளியே போடாஆஆஆ நாயே…” என்றவள், விறுவிறுவென அவனை தாண்டி வெளியே சென்றாள்..

“பார்த்தீபா.. பார்த்தீபா..” என அழைத்துக் கொண்டே கீழே இறங்கியவளின் காதில் தெளிவாக விழுந்தது பார்த்தீபனும், அவன் தாயும் பேசிக் கொண்டிருந்த வார்த்தை.

சுடுதண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்றினாற் போன்று கொதித்து போனாள் பிருந்தா.

பிருந்தா தன்னறைக்குச் செல்லவும், அவ்வியக்தன் நேராக வந்து நின்றது என்னவோ பார்த்தீபன் முன்பாகத் தான்..

“சார்..” என அவன் இழுக்க,

“எனக்கு என்னோட குழந்தையை பீல் பண்ணணும்.. நீ போய் அவளை அழைச்சிட்டு வா..” என்ற அவ்வியக்தனின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றான் பார்த்தீபன்..

அவன் குழந்தையை பீல் பண்ண வேண்டுமென்றால், பிருந்தாவை நெருங்க வேண்டுமே?.. முடியுமா அவளை நெருங்க..

நெருப்பாய் தகிக்கும் தனல் அல்லவா அவள்.. யார் அவளை அத்துமீறி நெருங்கினாலும், சுட்டுப் பொசுக்கும் குணம் அவளுடையது..

பணம் இருக்கிறதே என்றே கட்டுக்கடங்காமல் திரியும் குணம் அவளிடம் துளியும் கிடையாது..

பணம் தனக்கு தேவை என்ற எண்ணம் தான் அவளுக்கு.. அதை தாண்டி நிறைய மனிதர்களை, பாசத்தை நேசத்தை, நண்பர்களை தான் சம்பாதித்து வைத்திருக்கிறாள் பிருந்தா..

“சார் அதெப்படி முடியும்?..” என சற்று தாழ்ந்த குரலில் பார்த்தீபன் கேட்க,

“ஏன் முடியாது.. அது என்னோட குழந்தை, வெறும் வாடைகத்தாய் தான் உன் பொண்டாட்டி..” என்றவனைக் கண்டு எச்சில் விழுங்கினான் பார்த்தீபன்..

ஆம்.. பிருந்தா, அவ்வியக்தன் இருவரையும் தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான் பார்த்தீபன்.

அவ்வியக்தனிடம் இருந்த பெரும் பணம் அவனின் ஆசைக்கு தூண்டில் போட்டது..

அந்தப் பணத்தைப் பறிப்பதற்காக அவன் போட்ட தூண்டில் தான் பிருந்தா…

இது அவளுக்கே தெரியாதது தான் அந்தோ பரிதாபம்..

பிருந்தாவிடம், ஸ்பெர்ம் டோனர் மூலமாக தனக்கு குழந்தை வரப்போகிறது என நம்ப வைத்திருக்கிறான்..

அவ்வியக்தனிடம் தன் மனைவி வாடகைத்தாயாய், உங்களுக்கு குழந்தை பெற்றுத் தருவாள் என ஏமாற்றி, அவனிடம் இருந்து பெரும் பணம் வாங்கி, அதில் லக்சரி அப்பார்ட்மெண்டையும் வாங்கிப் போட்டு விட்டான்..

அந்தப் பணத்தை பிருந்தாவின் அக்கவுண்ட்டுக்கு தான் மாற்றுவேன் என அவ்வியக்தன் சொல்லிவிட, அதை எடுப்பதற்காகத் தான் பேங்கிற்கு வந்திருந்தாள் பிருந்தா..

அந்த வேளையில் தான் குழந்தை தன் துடிப்பை உணர்த்தியது.. குழந்தை மட்டுமில்லாது, அவ்வியக்தனும் அன்று தான் பிருந்தாவை பார்த்தான்..

பிருந்தாவின் அழகில் மெய் மறந்து நின்றது ஒரு கணம்..

மாசுமருவற்ற தேகம்.. பால் போன்ற நிறத்தில், கருநிற கார்கூந்தல்.. அடர்த்தியான இரு புருவங்களுக்கிடையே கருப்பு நிற பொட்டு அவளின் அழகை இன்னும் கூட்டியது..

அடிக்கடி தன் இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டிருந்த உலர்ந்த நாக்கு கூட அவனை ரசிக்க வைத்தது..

தன் குழந்தையின் தாய் எப்படி இருக்க வேண்டுமென்று அவ்வியக்தன் விரும்பினானோ, அப்படியே வந்து நின்றாள் பிருந்தா..

அவளையும் அறியாமல், பேங்கில் அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவளை சுற்றி சுற்றி வந்தான் அவன்..

“சார் சொன்னா கேளுங்க சார், குழந்தை பிறந்ததும் உங்கக்கிட்ட நாங்க கொடுத்திடுறோம் சார்..” என கெஞ்சிய பார்த்தீபனை எரிச்சலுடன் பார்த்தான்..

ஏனோ பிருந்தாவை சர்வ அலங்காரத்தில் கைகள் நிறைய கண்ணாடி வளையல்கள் பூட்டி, கன்னத்தில் சந்தனம் பூசி, முகமெங்கும் பொலிவுடன் அமர்ந்திருந்தவளை பார்க்க, பார்க்க, தன் குழந்தையின் ஸ்பரீசத்தை உணர வேண்டுமென்ற பேரவா ஏற்பட்டது..

“ப்ச்ச்ச.. நான் அவக்கிட்டேயே பேசிக்கிறேன்..” என விறுவிறுவென மாடியேறிச் சென்றவன், வேகமாக கதவை திறந்தான்.

சத்தியமாக அவளை அரைகுறையில் பார்க்க வேண்டுமென்ற ஆசையெல்லாம் அவனுக்கில்லை..

அவள் புடவை அவிழ்த்தும் போது, தெரிந்த மணிவயிறு மட்டுமே அவன் கண்ணுக்கு தெரிந்தது..

தன் குழந்தை அங்கு தானே இருக்கிறது.. பத்திரமாக இருக்கிறது என்ற தந்தையின் பாசத்தில் தான் கதவின் நிலையில் சாய்ந்து அப்படியே நின்றிருந்தான்..

ஆனால் பிருந்தாவிற்கு அவன் வேற்றாள் தானே..

அவனை தன்னறையில் பார்த்ததுமே சற்று படபடத்து விட்டாள்..

இதை பார்த்தீபனிடம் சொல்லி, அவனை அடித்து வெளியேற்ற வேண்டும் என வேகமாக பார்த்தீபனை தேடிச் சென்றவளின் தலையில் இடியை தான் இறக்கினான் பார்த்தீபன்..

“என்னடா சொல்லுற?” என அதிர்ச்சியாக பார்த்தீபன் தாயின் குரல் கேட்டதுமே அங்கேயே நின்று விட்டாள் பிருந்தா..

“ஆமா ம்மா.. இப்போ நாம இருக்கிற லக்சரி அப்பார்ட்மெண்ட், அவர் கொடுத்த 3 கோடி காசுல தான் வாங்குனேன்.. அது மட்டுமில்லாம பிருந்தாவுக்கே தெரியாத உண்மை.. பிருந்தா அவ வயித்துல வளர்ற குழந்தையை தன் குழந்தைன்னு நினைச்சிட்டு இருக்கா? அது தான் இல்லை.. அது சாரோட குழந்தை.. அந்தக் குழந்தைக்கு அவ வெறும் வாடகைத் தாய் மட்டும் தான்” என்ற பார்த்தீபனை அறுவெறுப்பாக பார்த்தாள் பிருந்தா..

“என்னடா புதுசு, புதுசா ஏதோதோ பேசுற?. ஏதோ கேரள லாட்டரி டிக்கெட்ல பரிசு விழுந்திச்சி.. அதை வச்சித் தான் இந்த வீடு வாங்குனேன்னு அன்னைக்கு சொன்ன?..” என கேட்டார்..

“அதெல்லாம் நான் பிருந்தாவை நம்ப வைக்கிறதுக்காக சொன்ன பொய் ம்மா?.. இந்த வீடு நம்ம வீடு தான்..”

“ஏன்டா பேசாம, பிருந்தாவை வச்சி.. இன்னும் ரெண்டு மூணு குழந்தைகளை பெத்துக்க வைப்போம்.. அதுல இந்த மாதிரி ரெண்டு மூணு அப்பார்ட்மெண்ட் வாங்கிப்போட்டுரலாம் டா..” என சொன்ன பார்த்தீபனின் தாயை அதிர்ந்து பார்த்தாள் பிருந்தா..

தன் மகன் செய்வது தவறு என தெரிந்தும் அதற்கு துணைப் போகிறாரா?. என்ன மாதிரி பெண் இவர்? என நினைக்கும் போதே ச்சீ என்றானது பிருந்தாவிற்கு..

“எனக்கு அந்த யோசனை இருக்கு ம்மா?. இப்போ எல்லாம் நிறைய செலிபிரிட்டி குழந்தையை வாடகைத்தாய் மூலமா தான் பெத்துக்கிறாங்க.. அந்த மாதிரி ஆட்களுக்கு மட்டும் பிருந்தா குழந்தை பெத்துக் கொடுத்தா? அவ்வளவு தான் நம்மளுக்கு நிறைய காசு கிடைக்கும்.. இந்த அப்பார்ட்மெண்ட் தான் பிருந்தா பேர்ல இருக்கு.. இனி மேல் வர்ற காசெல்லாம் நம்ம பேர்ல மாத்திக்கணும் மா” என்ற பார்த்தீபனைக் கண்டு நெஞ்சம் விம்மிப் போனது அவளுக்கு..

எவ்வளவு பெரிய துரோகம்.. அதை செய்யவும் இருவரும் தயங்கவில்லையே..

“ஏன்டா இவ்வளவு பெரிய வீட்டை அவ பேருக்கு வாங்குனேன்.. அந்த விடியாமூஞ்சி தான் உனக்குக் கிடைச்சாளா?.. அழகா என் பேர்ல பத்திரம் போட்டிருக்கலாம் தானே..” என்றவரை அப்படியே நொறுக்கி விடும் வேகம் தான் எழுந்தது பிருந்தாவிற்கு..

“அம்மா.. என் முதலாளி தான் அவ பேர்ல எழுதி வைப்பேன்னு சொல்லிட்டாரு.. இல்லைன்னா நான் ஏன் அவ பேர்ல எழுதப் போறேன்.. அவ சரியான நச ம்மா.. நாம என்ன சொன்னாலும் நம்புவா?.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுங்கிற மாதிரி.. அவக்கிட்ட ஆத்திரம் மட்டுந்தான் இருக்கும்.. புத்தி வேலையே செய்யாது” என பார்த்தீபன் தன் குரூர புத்தியை பிருந்தாவிற்கு மெல்ல மெல்ல சாயம் வெளுத்துக் கொண்டிருந்தான்..

“அப்போ புள்ளை பொறந்ததும் உன் முதலாளி தூக்கிட்டுப் போயிடுவானோ குழந்தையை?..” என்றவரின் வார்த்தையில், சட்டென்று பிருந்தாவின் கைகள் அழுத்தமாக வயிற்றைப் பற்றிக் கொண்டது..

‘இது என் குழந்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்’ என்பதை போல்..

“ஆமா.. 3 கோடி காசு கொடுத்தவன், பிள்ளையை நம்மக்கிட்ட தந்துட்டா போவான்..”

“அப்போ இவ குழந்தை எங்கேன்னு கேட்டா என்ன டா பண்ணுவ?..”

“குழந்தை பிறந்ததும், இறந்துட்டுன்னு சொல்லுறதுக்கு ஹாஸ்பிட்டல் ஆள் ரெடி பண்ணிட்டேன்..” என்றதும் தான் தாமதம் சட்டென்று கதவை திறந்தாள் பிருந்தா..

திடீரென்று கதவை திறக்கும் ஓசையில் தாய், மகன் இருவரும் அதிர்ந்து நின்றனார்..

“ச்சீ.. த்தூ..” என அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தாள்..

“நீங்க ரெண்டு பேரும் மனுசங்க தானா?.. என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சி, அவன்கிட்ட கொடுப்பீயா டா?” என விட்டாள் ஒரு அறை பார்த்தீபனுக்கு..

“ஏன்டி நீயெல்லாம் ஒரு பொண்ணா?.. என் குழந்தையை பிரிப்பேன்னு உன் பையன் சொன்னா?.. அதுக்கு மண்டையாட்டிட்டு நிக்கிற?.. உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சு, இத்தனை நாள் அத்தை, அத்தைன்னு உருகுனேன்.. என் புத்தியை நானே அடிச்சிக்கணும்..” என்றவள் பாரபட்சமின்றி போட்டாள் ஒரு அடி பார்த்தீபனின் தாய்க்கு..

ஏனோ சற்று முன்பாக இருந்த சோர்வு, வலி எங்கே போனதென்றே தெரியவில்லை.. இவர்களின் துரோகத்திற்கு முன்பாக அது ஒரு பொருட்டாக தெரியவில்லையோ..

இன்னும் ஏதோ ஒன்று நெருடிக் கொண்டிருந்தது அவள் மனதில்..

வேகமாக தன்னறைக்குச் செல்ல, அங்கு மாடிப்படிக்கட்டில் நின்று அங்கு நடப்பதை மூன்றாம் நபராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்..

அவனையும் முறைத்துக் கொண்டே மாடியேறினாள் பிருந்தா..

வேகமாக பீரோலை திறந்து தன் சேலைகளுக்கு நடுவில் இருந்த பொருளை தேடினாள்..

எங்கும் காணவில்லை.. அறையையே இரண்டாக்கினாள்.. அவள் தேடிய பொருள் மட்டும் கிடைக்கவில்லை..

“பார்த்தீபாஆஆஆ..” என மறுபடியும் இறைந்தாள்..

பலத்த சத்தம் கொடுத்தவளின் தொண்டை விக்க, தண்ணீருக்கு தவித்தவளின் முன்பாக தண்ணீரை ஒரு கரம் நீட்டியது.. வேகமாக தண்ணீரை வாங்கிப் பருகிக் கொண்டே, கண்களின் கருவிழிகளை மட்டும் திருப்பி பார்த்தாள்..

அங்கு தண்ணீர் பாட்டிலை நீட்டியது என்னவோ அவ்வியக்தன்..

பார்த்தீபன் அறையின் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் மூன்றாம் மனிதனைப் போன்று..

“பார்த்தீபா.. என்னோட ரிப்போர்ட் எல்லாம் எங்கே?..” என்றவளின் குரலில் அவ்வளவு கடுமை..

“அது.. அது.. வந்து.. பிருந்தா..” என்றவனை நோக்கி வேகமாக வந்தவள், நொடியும் தாமதிக்காமல் விட்டாள் ஒரு அறை..

அவனை அறைந்த அறையில் அவ்வியக்தன் கன்னத்தைப் பொத்திக் கொண்டான்..

“புருஷன்னு நம்பி தானே டா உன் கூட வந்தேன்.. ஆனா என்னை நீ..” என்றவளின் வார்த்தைகள் தடுமாறி அவ்வியக்தனை அழுத்தமாக பார்த்தது..

‘இன்னும் நீ போய்த் தொலையலையா?..’ என்பது தான் அந்தப் பார்வையின் அர்த்தம்..

அவளின் அர்த்தத்தை உணர்ந்தாற் போன்று வேகமாக வெளியேறினான் அவ்வியக்தன்..

“நாளைக்கு பார்க்கலாம்..” என பிருந்தாவிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினான்..

“என்ன பார்த்தீபா?.. இதெல்லாம்.. என்னை என்னன்னு சொல்லி ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போன?..”

“இல்லை பிருந்தா.. ஒரு குழந்தை போனா போகுது பிருந்தா.. நாம அடுத்தக் குழந்தை..” என்றவனின் தலையைப் பிடித்து அப்படியே சுவற்றில் அடிதது விட்டாள்..

“என்னடா சொன்ன?.. இன்னொரு குழந்தையா?.. நீ கொடுப்பீயா?.. ஹான் உன்னால முடியுமா ஒரு குழந்தை கொடுக்க?.. பொ**பய தானே நீ..” என்றவளுக்கு துரோகத்தின் வலி உயிர் வரை சென்று தாக்கியது..

பார்த்தீபனை பார்க்க, பார்க்க, அப்படியே கொன்று விடலாமா? என்கின்ற அளவிற்கு வெறியே வந்தது..

“நீ ஹாஸ்பிட்டல் வா..” என பார்த்தீபன் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டே வெளியே அழைத்து வந்தாள்..

அப்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் அத்தனை பேரும் அவளை தான் பார்த்தனர்..

ஆனால் யாருக்கும் நின்னு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை..

அவளுக்கு அவள் வாழ்க்கையை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது..

ஹாஸ்பிட்டலில் கூறிய உண்மையில் பார்த்தீபன் செருப்படி வாங்கியது தான் மிச்சம்..








 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3

வரமாட்டேன் என்று சொன்ன பார்த்தீபனை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிட்டலுக்கு இழுத்துச் சென்றாள் பிருந்தா..

அங்கு அவள் சந்தித்த டாக்டரை பார்த்தாள்.. எப்பொழுதும் வழக்கமாக அவர் தான் அவளுக்கு செக்கப் செய்து ட்ரீட்மெண்ட் கொடுத்தது..

“வாங்க மிஸ்ஸஸ்.பிருந்தா.. பேபி எப்படியிருக்கு?..” என நலம் விசாரித்த டாக்டரை அழுத்தமாக பார்த்தாள் பிருந்தா..

அவள் கண்களோ கோபத்தில் சிவந்திருந்தது.. மூச்சுக்காற்றுக் கூட கோபத்தில் விரைத்தது..

“எனக்கு எப்படி டாக்டர் குழந்தை உருவாகிச்சு?..” என்றவளை புரியா பார்வை பார்த்தார் டாக்டர்..

“என்ன பிருந்தா பேசுறீங்க?.. எனக்கு புரியலை..”

“எனக்கு எப்படி குழந்தை உருவாகிச்சு.. நீங்க தானே எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தது.” என்றவளை அதிர்ந்து பார்த்தார் டாக்டர்..

“வாட் நான் ட்ரீட்மெண்ட் கொடுத்தேனா?.. என்ன உளறுறீங்க பிருந்தா?.. உங்களுக்கு எங்க ஹாஸ்பிட்டல்ல எந்த ட்ரீட்மெண்ட்டும் கொடுக்கலை..” என்ற டாக்டரை கண்கள் விரித்துப் பார்த்தாள்..

“ட்ரீட்மெண்ட் எதுவும் நடக்கலன்னா, அப்போ நான் எப்படி?.. குழந்தை..” என்றவள், அதுவரை அருகில் அமர்ந்திருந்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்..

அவனைக் கொன்று கூறு போடும் பார்வை அது..

“எப்படி எனக்கு குழந்தை உருவாகிச்சு?..” என பார்த்தீபனை பார்த்து அழுத்தமாக கேட்டாள் பிருந்தா..

“அது.. அது.. நான்.. நான்..” என இழுத்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் கன்னத்தில் இடியாய் இறங்கியது அவள் கரம்..

“எப்படி டா? நான் குழந்தை உண்டானேன்.. இப்போ சொல்லப் போறீயா?.. இல்லை உன்னை வெட்டிப் போட்டுட்டு நான் ஜெயிலுக்குப் போகவா?..” என கேட்டவளை பயப்பார்வை பார்த்துக் கொண்டே,

“நான்.. நீ.. அது.. வந்து.. ஹோட்டல்.. முதலாளி..” என திக்கித் திணறிக் கொண்டிருந்தவனின் கழுத்தில் அசராமல் வைத்திருந்தாள் ஆப்ரேஷன் செய்யும் கத்தியை..

“இங்கே பாரு, உன் உசிரு உனக்கு வேணும்னா, எப்படி குழந்தை வந்திச்சுன்னு சொல்லு.. இல்லைன்னு வச்சிக்கோ..” என பார்த்தீபனின் கழுத்தில் சற்று கத்தியை அழுத்தமாக பதிக்க..

“இல்லை.. இல்லை நான் சொல்லிடுறேன். நான் சொல்லிடுறேன்..” என பயத்தில் உளற கொட்ட ஆரம்பித்தான் உண்மையை..

ஸ்பெர்ம் டோனர்க்கு பதிவு செய்து விட்டு வந்த ஒரே வாரத்தில், ஸ்பெர்ம் டோனர் கிடைத்து விட்டார் என பார்த்தீபன் கூறி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தான்..

அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பிருந்தா சிறிது நேரத்திற்கு தலைசுற்றி அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள்..

அவள் மயங்கி விழுந்த கணமே, வேகமாக வெளியே அழைத்துச் சென்று காரில் ஏற்றினான் பார்த்தீபன்..

மயக்கத்தில் இருந்த பிருந்தாவிற்கு எதுவுமே தெரியவில்லை..

அவளை அழைத்துக் கொண்டு சென்றது ஒரு கெஸ்ட் ஹவுசிற்கு தான்..

அங்கும் அவளை ஒரு பெட்ரூமில் படுக்க வைத்தான்..

அவள் அருகில் ஏற்கனவே போதையில் உழன்றுக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்..

“சார்..” என பார்த்தீபன் அழைக்க,

“ஹான். பார்த்தீபா. எனக்கு என்னமோ பண்ணுது.. கொஞ்சம் என்னை வீட்டுல விடுறீயா?..” என்றான் பார்த்தீபன்..

“உன்னை வீட்டுல விடுறதுக்கா? நீ குடிக்கிற கூல்ட்ரீங்க்ஸ்ல நான் வயாகரா மாத்திரையை கலந்தேன்..” என்றவன் அவன் கைகளில் மாட்டியிருந்த வாட்சை தான் பார்த்தான்..

எத்தனையோ நாட்கள் அதை ஆசையாக பார்த்துள்ளான்..

பிரேத்தியகமான வாட்ச் அது.. ஐம்பது லட்சத்தை தாண்டும்.. அதன் மேல் எப்பொழுதும் ஒரு வித ஈர்ப்பு பார்த்தீபனுக்கு..

அவ்வியக்தன் முழுப்போதையில் தன்னை மறந்த நிலையில் இருக்கும் நேரம் வாட்சை கழற்றி விட்டான் பார்த்தீபன்..

அதை எடுத்துக் கொண்டு அறையை சாத்தி விட்டு வெளியேறி விட்டான்..

அவன் அறையை விட்டு வெளியேறவும், போதையின் பிடியில் உடல் முறுக்கேறி நின்றது அவ்வியக்தனுக்கு..

“வேண்டாம் அவ்வியக்தா.. போ.. போய்டு..” என வேகமாக வெளியேற முயன்றவன், தடுமாறி விழுந்தது என்னவோ பெண் என்னும் பொக்கிஷம் பிருந்தாவின் மீது தான்..

ஏற்கனவே போதையின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்தவன், பெண்ணுடல் அருகில் இருந்தால் சும்மா இருப்பானா?.. அவளை அறிய துடித்த உடலை அடக்குவது பெரும்பாடாகிப் போனது அவனுக்கு..

தன்னருகில் வேறொருவன் வந்து படுத்திருப்பதைக் கூட அறிய முடியாதளவிற்கு மயக்கத்தில் இருந்தாள் பிருந்தா..

ஆடைகள் அவள் உடலுக்கு விடை கொடுக்க, அதை தடுக்க அவள் கைகள் வேலை செய்யவில்லை..

முத்தமிட்டான்.. அழுத்தமான முத்தங்கள்..

முத்தங்களின் சுவையை அறிய பெண்ணவளின் தேகத்தின் உணர்வுகள் மறித்துப் போயிருந்தது..

தன் மேல் படரும் ஆடவனை தள்ளி விட முடியவில்லை..

அவள் தான் உணர்வுகள் மறித்துப் போயிருக்கிறாளே..

படர்ந்தான்.. பூஜித்தான்.. கொண்டாடினான் பெண்ணவளை.. மொத்தமாக உள்வாங்கிக் கொண்டான்..

ஒன்றில் அடங்கி விடுமா? அவன் கொண்ட தாபம்.. அவனுக்குள் இருக்கும் போதை

மீண்டும் மீண்டும் அவளை நாடினான்.. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவளை விட்டு பிரிந்தான்.

தனக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை அறியாத பேதையாக மயக்கத்தில் இருந்தாள் பிருந்தா..

ஐந்து மணி நேரம் கழித்து முதலில் கண் விழித்தது என்னவோ அவ்வியக்தன் தான்..

அவன் கண் விழிக்கும் நேரம், அறையில் யாருமே இல்லை..

அவனுக்கு நடந்ததும் அனைத்தும் மங்கலாக நினைவில் இருந்தது..

தான் ஒரு பெண்ணிடம் கலவி கொண்டது மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.. அது யார்? என்பது அவன் நினைவில் சுத்தமாக இல்லை..

வேகமாக வெளியே வர, அவனை எதிர்க்கொண்டது என்னவோ பார்த்தீபன் தான்..

பார்த்தீபனைக் கண்டு முழுதாக ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் அவ்வியக்தன்..

“நீ.. நீ.. இங்கே?..” என தடுமாறிக் கொண்டிருந்த உற்றுப் பார்த்தான் பார்த்தீபன்..

“என்னாச்சி சார்?.. இப்படி தடுமாறுறீங்க?..”

“அது.. இங்கே நான்.. ஒரு பொண்ணு?..”

“ஆமா சார் ஒரு பொண்ணு வந்திச்சு.. அது அப்பவே போயிருச்சி சார்?..”

“போயிருச்சா?.. யார் அது? என்ன நடந்தது?.. எனக்கு எதுவுமே ஞாபகத்துல இல்லை பார்த்தீபா..” என தடுமாறிக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்..

“என்ன சார் இதுக்கெல்லாம் பயப்படுறீங்க?.. நீங்க தான் போதையில கால் கேர்ள் க்கு கால் பண்ணி வர சொன்னீங்க?.. அப்புறம் ரெண்டு பேரும் ரூம்க்குள்ள போனீங்க?..” என்றவனின் வார்த்தையில் தான் சற்று நிம்மதியடைந்தான் அவ்வியக்தன்..

“ஓஹ்.. கால் கேர்ளா?.. நான் ரொம்ப பயந்துட்டேன்.. ஏதோ தப்பு பண்ணிட்டேனோன்னு..” என படபடத்த விழிகளுடன், குற்றவுணர்வில் இன்னும் தவித்துக் கொண்டிருந்தவனை ஆழமாகப் பார்த்தான் பார்த்தீபன்..

“ஏன் சார்?.. ஒரு வேளை கால் கேர்ளா இல்லாம.. வேற ஏதாவது நல்லப் பொண்ணா இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க சார்?..” என பார்த்தீபன் வேண்டுமென்றே கேட்டான்..

“கண்டிப்பா அந்தப் பொண்ணு எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துப்பேன்..” என்ற அவ்வியக்தனை பார்த்து சிரித்தான் பார்த்தீபன்..

“சும்மா பொய் சொல்லாதிங்க சார்.. அது எப்படி சார்? எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க முடியும்.. ஒரு வேளை போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்திட்டா..”

“கண்டிப்பா தண்டனை அனுபவிப்பேன்..” என உறுதியான குரலில் சொன்ன அவ்வியக்தனை திகைத்துப் பார்த்தான் பார்த்தீபன்..

“என்ன சார் சொல்லுறீங்க?.. ஜெயிலுக்குப் போவீங்களா?..”

“கண்டிப்பா பார்த்தீபா?. ஒரு பொண்ணோட விருப்பமில்லாம நான் அவளை தொட்டிருந்தேனா, கண்டிப்பா நானே போலீஸ்ல போய் சரணடைஞ்சிருவேன்..” என்றவனை ஏகத்துக்கும் அதிர்ந்து பார்த்தான் பார்த்தீபன்..

‘இப்படி ஒரு இளிச்சவாயனா?.’ என்பது தான் அவன் எண்ணம்..

மற்றபடி அவ்வியக்தனின் மேல் அன்போ, தனிப்பட்ட பாசமோ எதுவுமே இல்லை..

அவன் நினைத்ததை நடத்தி முடித்து விட்டான். இனி ஹாஸ்பிட்டலுக்கு செல்ல வேண்டுமென்று புறப்பட்டான்..

“சரி சார்.. நான் உங்களுக்கு தலைவலின்னு நினைச்சித் தான் பார்க்க வந்தேன்.. என் ஒய்ஃப் வெளியில வெய்ட் பண்றா.. நான் போயிட்டு வர்றேன் சார்..” என்றவன் வேகமாக வெளியேறினான்..

அவ்வியக்தன் இருந்த மனநிலையில் எதையும் யோசிக்க வில்லை..

நீயும், நானும் தானே ஆபீசில் இருந்து வந்தோம்?.. உன் மனைவி எப்பொழுது இங்கே வந்தாள்?..

அவளுக்கு எப்படி இந்த அட்ரெஸ் தெரியும்?. என எந்தக் கேள்வியும் அவனுக்கு வரவில்லை..

காருக்குள் வந்த பார்த்தீபனின் விழிகள் வன்மத்துடன் வளைந்தது..

அந்தக் காரில் தான் யாருமேயில்லை..

அவ்வியக்தனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவன் சொன்ன பொய் தான் அது..

பிருந்தாவிற்கு கொடுத்த மயக்க மருந்தின் நேரம் அவனுக்குத் தெரியும்..

அதைப் பொறுத்தே பிருந்தா மயக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம் கதவை தட்ட ஆரம்பித்தான்..

ஆழ் மயக்கத்தில் இருந்த அவ்வியக்தன் செவிக்கு கதவு தட்டும் ஓசை கேட்கவேயில்லை..

அரை மயக்கத்தில் இருந்த பிருந்தாவிற்கு நன்றாக கதவு தட்டும் ஓசை கேட்டது.

எழுந்தவளுக்கு தன் உடலில் ஆடை இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது..

அரைகுறையாக தன் ஆடையை அணிவித்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு, பார்த்தீபன் தான் கண்ணில் பட்டான்…

“பார்த்தீபாஆஆ..” என குழறலாக சொன்னவளின் மூக்கில் மீண்டும் மயக்க மருந்தை வைத்து அழுத்தினான்..

அவள் மீண்டும் மயங்கி விழவும், வேகமாக அவளை காரில் ஏற்றினான்..

வேகமாக ஹாஸ்பிட்டலுக்கு சென்றான்..

அவனுக்கு உதவுவதற்காக ஒரு நர்ஸிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்தான்..

அவர் பிருந்தாவை அங்கிருந்த பெட் ஒன்றில் அட்மிட் பண்ணியிருந்தார்..

மயக்கத்தில் இருந்து எழுந்த பிருந்தாவிற்கு உடல் அடித்துப் போட்டாற் போன்று வலிக்க ஆரம்பித்தது..

“ஆஹ்..” என வலித்த உடலை அசைக்க முடியாமல் தடுமாறி எழ முயன்றவளை சிரித்த முகத்துடன் வந்து தாங்கிக் கொண்டான் பார்த்தீபன்..

இந்த அன்பு தானே அவளுக்கு வேண்டும்.. அதனால் தானே அவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிந்தாலும், அவனுடன் வாழ சம்மதித்திருக்கிறாள்..

“பார்த்தீபா.. ரொம்ப வலிக்குது..” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு கூறியவளுக்கு அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டிய நிலை..

பாத்ரூமிற்கு அவளை அழைத்துச் சென்றான் பார்த்தீபன்..

உள்ளே சென்ற சில நிமிடங்களில் தன் உடலின் மாற்றங்களை உணர்ந்துக் கொண்டாள் பிருந்தா..

இயற்கையாக தனக்குள் நடந்த மாற்றங்களை உணர்ந்தவள், அது செயற்கையாக மருத்துவத்தின் உதவியில் நடந்தேறி விட்டது என நினைத்துக் கொண்டாள் பிருந்தா.

இதையெல்லாம் சொல்லி முடித்த பார்த்தீபன் பிருந்தாவை ஏறிட்டுப் பார்க்க.. அவளின் முகமோ செந்தணலை அள்ளிக் கொட்டினாற் போன்று தகைத்துக் கொண்டிருந்தது..

அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

துரோகம்.. பச்சைத் துரோம்.. கணவன் என நம்பியவன், கயவனாய் மாறியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

“ஏன் இப்படி பண்ண பார்த்தீபா?..” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள் பிருந்தா..

அவளின் மனதில் காயங்கள் ரணமாகி வலித்துக் கொண்டேயிருந்தது..

காலையில் அவள் இருந்த வலி என்ன?.. இப்பொழுது அவள் இருக்கும் நிலை என்ன?.

கோபம்.. அத்தனையும் கோபம்..

தன் கால்களில் போட்டிருந்த செருப்பை கழட்டியவள், ஹாஸ்பிட்டல் என பார்க்காமல் அடிக்க ஆரம்பித்தாள்..

கண்மண் தெரியாமல் அடித்தாள்.. கை ஓயும் அளவிற்கு அடித்து முடித்தவள், அவ்வளவு நேரம் அடித்த செருப்பை வேகமாக தூக்கி எறிந்தாள்..

அனல் கக்க எதிரில் இருப்பவனை பார்த்தவள், “உன்னை புருஷன்னு நம்பித் தானடா கூட வந்தேன்.. ஆனா நீ..” என்றவள் அவன் முகத்திலேயே காறி உமிழ்ந்து விட்டாள்..

“பிருந்தா.. பிருந்தா..” என அவளின் கைப் பிடித்த பார்த்தீபனை மீண்டும் அடித்தாள்..

“இன்னொரு முறை என் மூஞ்சியிலேயே முழிக்காதே.. உன்னைத் தேடி டிவோர்ஸ் நோட்டீஸ் வரும்..” என ஹாஸ்பிட்டல் வாசலில் இருந்த ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டாள்..

ஹாஸ்பிட்டலில் இருந்த அத்தனை பேரும் அவர்களை தான் பார்த்தனர்..

அவள் அடிப்பதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் தங்கள் சுயநலத்திற்கு இறையாக்கின..

 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4

ஹாஸ்பிட்டலில் இருந்து ஆட்டோ பிடித்து வந்திறங்கியது என்னவோ, பிருந்தாவின் தோழி நிரோஷா வீட்டிற்குத் தான்..

காலிங் பெல்லை அழுத்தியபடி நின்றாள் பிருந்தா..

மனம் ஏனோ அதிகமாக வலித்தது..

துரோகத்தை விட நம்பிக்கை துரோகம் அவ்வளவு வலித்தது..

கணவன் என்ற நம்பிக்கையில் தானே அவன் ஆண்மையில்லாதவன் என அறிந்தே அவள் வாழ ஆரம்பித்தது.. அவனுக்காக அவள் செய்த தியாகம் எவ்வளவு அளப்பரியது.

அதை தவறாக பயன்படுத்திய பார்த்தீபனை மன்னிக்கவே முடியவில்லை அவளால்..

மன்னிப்பு என்ற வார்த்தைக்கு கூட தகுதியில்லாதவன் அவன் என மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கும் வேளையில், சட்டென்று கதவு திறந்தது..

கலங்கி வந்து தன் வாசலில் நின்றிருந்த பிருந்தாவை பார்த்த நிரோஷாவின் கைகள் தானாக கதவை பெரிதாக திறந்தது..

அவளுடன் சேர்ந்தவாறே உள்ளே நுழைந்தாள் பிருந்தா..

அவளின் சோர்ந்த விழிகளில் என்ன கண்டாளோ, “உட்காரு டி.. நான் இப்போ வர்றேன்..” என அடுப்படிக்கு சென்றவள், ப்ரிட்ஜில் வைத்திருந்த ஆப்பிள் ஜூஸை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினாள்..

அவள் கொடுத்த ஜூஸை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் பிருந்தா..

அவளுக்குத் தானே பிரச்சினை? அதற்கு குழந்தை பட்டினியாக இருக்க வேண்டுமா என்பது தான் அவளின் எண்ணம்..

ஜில்லென்று குளுமையுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய குளிர்பானத்தில் உடல் சிறிது தெம்பு பெற்றாற் போன்று உணர்ந்தாள் பிருந்தா..

“இப்போ சொல்லு என்னாச்சி?.. ஏன் இப்படியொரு கோலத்துல வந்திருக்க?..” என்ற பின்பு தான் தன்னை கீழே குனிந்து பார்த்தாள்..

கிட்டத்தட்ட பைத்தியக்காரியின் தோற்றம் அவளுடையது.. சேலை பின் குத்தாமல் அப்படியே தூக்கிப் போட்டிருந்தாள் தோளில்.. பார்த்தீபனை அடிப்பதற்கு வாகாக, சேலையை இடுப்பில் சொருகியிருந்தவளின் நிலை சற்று பரிதாபமாகத் தான் இருந்தது..

தனக்கு பார்த்தீபன் இழைத்த அநீதியை ஒன்று விடாமல் கூறி அழுத பிருந்தாவை அப்படியே வாரியணைத்துக் கொண்டாள் நிரோஷா..

“விடு பிருந்தா அந்த அயோக்கியனை பத்தி இப்பவாது புரிஞ்சிக்கிட்டீயே?..” என்ற நிரோஷாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்..

“ரொம்ப பயமா இருக்கு நிரோ. அவனை எவ்வளவு நம்புனேன் தெரியுமா?..” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தவளின் தலையை வருடிவிட்ட நிரோஷா..

“பிருந்தா அதான் பிரிஞ்சு வந்துட்டீயே?.. அப்புறமும் ஏன் அழுதுட்டு இருக்க?..”

“என்னால தாங்க முடியலை..” என கண்களில் கண்ணீர் மல்க தன் தோழியை ஏறிட்டுப் பார்த்தாள்..

“அந்த ராஸ்கலை அப்படியே விட்டுட்டு வந்துட்டீயா நீ?..”

“ம்ம்.. அப்படியே விடுவேனா நான்.. நல்லா செருப்பால அடிச்சிட்டுத் தான் வந்திருக்கேன்..” என்றதும் நிரோஷாவின் இதழ்களில் சிறு புன்னகை..

“இப்படித்தான்டி இருக்கணும். பொண்ணுன்னா இழிச்சவாயின்னு நினைப்பு இவனுங்களுக்கெல்லாம் *****” என பல கெட்ட வார்த்தைகளால் பார்த்தீபனை அர்ச்சித்து முடித்தாள் நிரோஷா..

“சரி விடு அந்த தருதலையை பத்தி நமக்கு என்ன?.. எங்கேயாவது வெளியில போகலாமா?..” என்ற நிரோஷாவை பார்த்து, ‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்டினாள் பிருந்தா..

“ரொம்ப டயர்டா இருக்கு நிரோ.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.. எங்கே போறதுன்னு தெரியாம..” என தயங்கி வார்த்தைகளை மென்று முழுங்கியவளை, முறைத்துப் பார்த்தாள் நிரோ..

“என்னடி ரொம்ப தயங்குற?.. இது என் வீடு மட்டுமில்லை.. நம்ம வீடு.. இதுக்கு நீ பாதிக்கு பாதி பணம் கொடுத்திருக்க.. அதுவாது ஞாபகத்துல இருக்கா? இல்லையா?.. என்னமோ தயங்குற?.. உன்னோட ரூம்ல நீ ரெஸ்ட் எடு..” என பிருந்தாவை வழியனுப்பி வைத்தவள், செய்த முதல் காரியம் பார்த்தீபனின் பல வழக்குகளை தொடுத்து, விவாகரத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது தான்..

நிரோஷா M.A, B.L.,

பிருந்தாவின் நெருங்கிய தோழி..

பிருந்தா I.T, கம்பெனியில் T.L (Team Leader) ஆக வேலை பார்க்கிறாள்.. நிரோஷாவிற்கும் யாரும் கிடையாது..

அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. பிருந்தா அடிக்கடிச் செல்லும் ஆசிரமத்தில் தான் நிரோஷாவை சந்தித்தாள்..

அன்றில் இருந்து அவர்களின் நட்பு நெருக்கமாக ஆரம்பித்திருந்தது.. நிரோஷா படித்தது என்னவோ ஸ்காலர்ஷிப்பில் தான்.. ஆனால் அதற்கு உதவியது என்னவோ பிருந்தா தான்..

தன் பெற்றோர்களின் பெயரை பயன்படுத்தி நிரோஷாவிற்கு நல்ல படிப்பைக் கொடுத்தது அவள் தான்..

ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் ஒற்றை வீடு தான் இது.. அந்த தெருவில் பெரிதாக வீடுகள் என்பது கிடையாது..

இப்பொழுது தான் டெவலப்பாகிக் கொண்டிருக்கும் ஏரியா அது.. சற்று மலிவான விலைக்கு வந்த வீட்டை எப்படி வாங்குவது என அறியாமல் தவித்துக் கொண்டிருந்த நிரோஷாவிற்கு, தன் சேமிப்புப் பணத்தையும் பேங்கில் லோன் வாங்கிக் கொடுத்ததும் பிருந்தா தான்..

அந்த லோனைக் கூட இருவரும் சேர்ந்தே தான் அடைத்தனர்..

ஆனால் பிருந்தா ஒரு நாள் கூட இதைப் பற்றி வெளியில் சொன்னது கூட கிடையாது..

தன் தோழியின் வாழ்க்கையை சீரழித்தவனை சும்மா விடுவதற்கு நிரோஷாவால் முடியவில்லை..

பூ போன்ற மனம் கொண்ட பிருந்தாவை சிதைத்துப் போட்டு விட்டானே என்கின்ற ஆதங்கம் அவளுக்கு இருந்துக் கொண்டேயிருந்தது..

தன் வக்கீல் என்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்த்தீபன் மேல் பெண் கொடுமை வழக்கு போட்டாள்..

தன் வீட்டில் வைத்திருந்த நவீன ரக பாரில் அமர்ந்துக் குடித்துக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்.. அவனின் தோழன் மிதுன் அருகில் இருந்தான்..

ஏனோ காலையில் தன் குழந்தையைப் பார்க்கப் போகிறோம் என மகிழ்வுடன் புறப்பட்டவனுக்கு, அங்கு நடந்த கூத்து ஒரு வித எரிச்சலை தான் கொடுத்தது..

தன்னை பார்த்தீபன் ஏமாற்றியிருக்கிறான் என்பது மட்டும் நன்றாக புரிந்தது..

“என்ன அவ்வி? எப்பவும் இவ்வளவு குடிக்க மாட்டீயா?..” என்ற மிதுனை நிமிர்ந்துப் பார்த்தவனின் கண்களோ குடிபோதையில் அதிகமாக சிவந்திருந்தது..

“என்னை ஏமாத்திட்டாண்டா.. அந்த பா***********” என்றவன், பார்த்தீபன் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் தன் நண்பனிடம்..

“என்னடா சொல்லுற?.. அந்த பார்த்தீபனை சும்மாவா விட்ட?..” என கோபத்தில் மூக்கு விடைக்க கேட்டவனைக் கண்டு, நக்கல் புன்னகை அவ்வியக்தன் உதட்டில்..

நான் அவனை ஏதாவது பண்றதுக்கு அவன் இந்நேரம் உசிரோட இருந்தாத் தானே..” என கேலியாக உதட்டை வளைத்து சொன்னவனைக் கண்டு அதிர்ந்து பார்த்தான் மிதுன்..

“என்னடா கொன்னுட்டீயா?..” என்றதும் மறுப்பாக தலையசைத்தான் அவ்வியக்தன்..

“நான் அவனை ஒன்னுமே பண்ணலை டா.. என் சுண்டு விரல் கூட அவன் மேல படலை.. ஆனா அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா மச்சான்.. ஷப்பாஆஆஆ.. டேய்ய்ய்… அவன் பொண்டாட்டி இருக்காளே, அவ பேர் என்ன?..” என தலையை தட்டி ஏதோ யோசித்தவனுக்கு, அவள் பேர் தெரிந்தால் தானே..

“ப்ச்ச். அவ பேர் என்னவா இருந்தா நமக்கென்ன?.. விட்டா பாரு ஒரு அறை புருஷனுக்கு.. எனக்கே பக்குன்னு இருந்திச்சி டா.. என்னா.. அடி.. பொண்ணுன்னா அவ தான் டா.. புருஷன் தப்பு பண்ணான்னு தெரிஞ்சதும், அடிச்சி துவம்சம் பண்ணிட்டா” என்ற நண்பனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்ததான் மிதுன்..

“என்னடா அந்தப் பொண்ணை பத்தி இவ்வளவு பேசுற?..”

“தெரியலை மச்சான்.. அவ கண்ணைப் பார்க்கப் போகும் போதே, ஏதோ ஒரு தடுமாற்றம் எனக்குள்ள..” என ரசனை கலந்த குரலில் போதையில் சொன்னவன், தள்ளாடியபடி எழுந்தான்.. இருவரும் அந்த பாரை விட்டு எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தனர்..

வீட்டின் ஹாலில் வந்து அமர்ந்தனர் இருவரும்.. அந்த வீட்டில் அவர்களுக்கென்றே வடிவமைத்திருக்கும் பார் தான் அது..

அதில் தான் அவர்கள் எப்பொழுதும் குடிப்பது..

“ஏன் மச்சான்?.. ஒரு வேளை அந்தப் பொண்ணு உன் குழந்தையை கொடுக்கமாட்டேன்னு சொன்னா என்னடா பண்ணுவ?..” என்ற மிதுனை அதிர்ந்து பார்த்தான் அவ்வியக்தன்..

“என்னடா சொல்லுற?.. அவ ஏன் என் குழந்தையை கொடுக்கமாட்டேன்னு சொல்லப் போறா.. இப்போ அவ புருஷன் கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெளிஞ்சிருப்பா.. கண்டிப்பா அவ என் குழந்தையைப் பெத்துக் கொடுத்துடுவா..” என சொன்னவனுக்கே, அந்த வார்த்தைகளில் உறுதி இல்லை..

“இது என் குழந்தை.. எனக்கு மட்டுமே சொந்தமான குழந்தை..” என மீண்டும் மீண்டும் சொன்ன பிருந்தாவின் வார்த்தைகள் அவனை அலைக்கழித்தது..

“என் குழந்தையை என்கிட்ட கொடுக்க மாட்டாளா டா?..” என ஒரு வித தவிப்புடன் கேட்ட அவ்வியக்தனை பார்க்கவே பாவமாக இருந்தது மிதுனுக்கு..

குழந்தைக்காகத் தானே அந்த பார்த்தீபன் சொன்னவற்றிற்கு எல்லாம் இவன் மண்டையாட்டி வைத்தான்..

இல்லையென்றால், அவனெல்லாம் ஒரு ஆளா? என மிதுனே பார்த்தீபனை சற்று மட்டமாகத் தான் நினைத்திருக்கிறான்…

அவள் குழந்தையை கொடுக்க மறுத்தாலும், தன் நண்பனுக்காக குழந்தையைப் பறித்து எடுத்து விட வேண்டும் என குறுக்கு வழியில் யோசித்தான் மிதுன்..

“அவ்வி..”

“மிதுன்.. குழந்தை.. என் குழந்தை” என உளறிக் கொண்டிருந்தவனை, கை வாக்கில் அணைத்தபடி அறையில் சென்று படுக்க வைத்தான்..

இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கியிருக்கின்றனர்..

இருவருமே பால்யகால நண்பர்கள்..

அவ்வியக்தன் கம்பெனியில் ஒன் ஆ ஃப் த பார்ட்னர் தான் மிதுனும்..

இருவரும் அடையாரில் இருக்கும் ஒரு வீட்டில் தான் தங்கியிருக்கின்றனர்..

“குழந்தை.. என் குழந்தை.. அந்தப் பொண்ணு.. பார்த்தீபா.. உன்னை சும்மா விடமாட்டேன் டா” என புலம்பிக் கொண்டே தூங்கினான் அவ்வியக்தன்..

அடுத்த நாள் காலை சற்று உடல் நிலை தேறி எழுந்தாள் பிருந்தா..

உடலின் அசதி, அவளை எழவே விடவில்லை.

இரவு சாப்பாடுக் கூட நிரோஷா தான் ஊட்டிவிட்டாள்..

“என்ன பிருந்தா? அடுத்து என்ன?..” என கேட்ட தோழியை அழுத்தமாகப் பார்த்தவள், “டிவோர்ஸ் பண்ணணும் பிருந்தா.. அவன் மேல கேஸ் கொடுக்கணும்..” என்ற தோழியை பார்த்து மென் புன்னகை புரிந்தாள் நிரோ..

“இதை நான் நேத்தே பண்ணிட்டேன். இப்போ உன்னோட எதிரி பார்த்தீபன் ஜெயிலுக்குள்ள.. நான் கேட்டது இதையில்ல.. உன்னோட வயிற்றுல இருக்கிற குழந்தையைப் பத்தி..” என்றவளை கசந்த புன்னகையுடன் பார்த்தாள் பிருந்தா..

“குழந்தையை எனக்கு அந்தப் பணக்காரன் கிட்ட கொடுக்க மனசில்லை பிருந்தா.. இது என்னோட குழந்தை.. கெட்டதிலையும் நல்லதா, அந்த பார்த்தீபன் தெரிஞ்சே பண்ண தப்புல.. எனக்கு வாழ்க்கையோட ஆதாரமா இந்தக் குழந்தை கிடைச்சிருக்கு.. அது போதும் எனக்கு.. நான் வாழ்ந்திடுவேன்..” என்றவளை சற்று அதிருப்தியாக பார்த்தாள் நிரோ..

“உனக்கென்ன தலையெழுத்தா பிருந்தா?.. இப்படியே வாழ்ந்திருவேன்னு சொல்லுற?.. நீ குழந்தையை கொடுக்க மாட்டேன்னு சொன்னதுல எனக்கு சந்தோஷம் தான்.. ஆனா இப்படியே இருந்துருவேன்னு மட்டும் சொல்லாதே.. உனக்கான வாழ்க்கை இனிமேல் தான் இருக்குன்னு நினைச்சு வாழ ஆரம்பி..” என்ற நிரோவை விரக்தியாக பார்த்தவள், எதுவுமே பேசாமல் குளியலறைக்குச் சென்று விட்டாள்..

அவள் உள்ளே செல்லவும், வீட்டு வாசலில் காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது..

கதவை திறந்தது என்னவோ நிரோஷா தான்..

எதிரில் இருப்பவனை புரியாமல் பார்த்தாள் நிரோஷா..

“நீதான் பிருந்தாவா?..” என அதிகாரமாக கேட்ட குரலில் சட்டென்று புருவத்தை உயர்த்தினாள் நிரோஷா..

பிருந்தாவை யாரென்று தெரியாமலே, இவ்வளவு அதிகாரமாக கேட்கும் இவன் யார்? என்ற எண்ணம் தான் அவளுக்கு..

“நீதான் பிருந்தாவான்னு கேட்டேன்.. காது கேட்காதா?..” என தன் காதில் கை வைத்து, கேட்காதா என்பதை போல் கையசைத்தவனைக் கண்டு பற்றிக் கொண்டு வந்தது நிரோஷாவிற்கு..

“உனக்கு கண்ணு தெரியுமா?..” என்றவளை அதிர்ந்து பார்த்தான் மிதுன்..

“வாட்.. வாட் யூ சே..” என அதிர்ச்சியில் கேட்டவனை, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்..

“பின்னே பிருந்தாவை தேடி வந்திருக்கீயே?.. அவ கர்ப்பமா இருக்கிறதையும் தெரிஞ்சிட்டுத் தானே வந்திருப்ப.. என்னைப் பார்த்தா உனக்கு, ஏழு மாச கர்ப்பிணி மாதிரியா இருக்கு?..” என்றவளை கோபத்துடன் முறைத்தவனின் கண்களோ அவளின் வயிற்றில் தான் பதிந்தது..

வற்றிய வயிறாய் ஸீரோ சைஸ் உடம்புடன் நின்றிருந்தவள், வேலை செல்வதற்காக, கருப்பு நிற மேல் கோட் ஒன்று அணிந்திருந்தாள்..

“யாரு நிரோ?..” என்ற குரல் கேட்க, இருவரும் ஒன்று சேர திரும்பினார்கள்.. அப்பொழுது தான் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் பிருந்தாள்..

சற்று மேடிட்ட வயிற்றுடன், நடக்க முடியாமல் நடந்து வந்தவளை பார்த்த மிதுன் வேகமாக உள்ளே சென்றான்..

நடுவில் ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கில்லை..

“நீதான் பிருந்தாவா?..” என அலட்சியமான பார்வையை அவள் மீது செலுத்தியபடி கேட்டவனைக் கண்டு, “ம்ம்” என தலையை மட்டும் அசைத்தாள் பிருந்தா..

“நான் அவ்வியக்தன் ப்ரண்ட்.” என்றதும் ஒர நொடி திடுக்கிட்டுப் போனாள் பிருந்தா..

“அதுக்கு இப்போ என்ன பண்ணணும்?” என்ற கேள்வி நிரோவிடம் இருந்து வந்தது..

வாசலில் கைகளை கட்டியபடி அலட்சியத்தை கண்ணில் அதிகாரமாக கேட்டாள் நிரோ..

அவளின் தோரணையே பிடிக்கவில்லை என்பதை போல் முகத்தை சுழித்தான் மிதுன்..

“அதுக்கு இப்போ என்னவா?.. குழந்தை பிறந்ததும் அதை நாங்க எடுத்திட்டுப் போய்டுவோம்.. உனக்கு வேணும்னா இன்னும் காசு வாங்கித் தர்றேன்..” என மளிகைக்கடையில் பொருள் வாங்கி பேரம் பேசுவதைப் போல் பேசுபவனைக் கண்டு எரிச்சலாகி பெண்கள் இருவரும்..

“மிஸ்டர்..” என இழுத்த, நிரோவைக் கண்டு ஏனோ எரிச்சலாகியது மிதுனிற்கு..

“இங்கே பாரு, நீ எதுக்கு எங்களுக்கு நடுவுல பேசுற?..” என சொல்லி முடிப்பதற்கு முன்பாக,

“அவ என் ப்ரண்ட்.. எனக்காகத் தான் அவ பேசுறா.. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் அவ சொல்லுவா?.. அது மட்டுமில்லை.. அவ தான் என்னோட லாயர்.. சோ நீங்க அவக்கிட்ட தாராளமா பேசலாம்” என்ற பிருந்தாவை பார்த்து அதிர்ந்தான் மிதுன்..

பிருந்தாவை மிரட்டி அடி பணிய வைத்து விடலாம் என வந்த மிதுனுக்கு, அவளின் நிமிர்வான பார்வை, தைரியமான பேச்சு ரெண்டுமே ரசிக்க விடவில்லை..



_63fe1618-23af-4d2a-917d-aadbf837e748.jpeg
 

Madhusha

Well-known member
Wonderland writer
_bd638354-a616-4d51-8edf-4e3a413b8834.jpeg

அத்தியாயம் 5

அவளின் நேர்கொண்ட பார்வையை பார்த்து சற்று தடுமாறித்தான் போனான் மிதுன்..

பார்த்தீபனை போட்டு அடித்திருக்கிறாள் என அவ்வியக்தன் சொல்லும் போது கூட, அதீத ஆத்திரத்தில் பெண்களுக்கு வரும் இயல்பான கோபம் தான் அவளை அடிக்கும் அளவிற்கு தூண்டியிருக்கும் என நினைத்தான்..

ஆனால் இந்த நிமிர்வான பார்வை, பேச்சு எதுவுமே அவனுக்குப் பிடிக்கவில்லை.. பிருந்தாவை விட, அவள் அருகில் அசராமல் நின்றுக் கொண்டிருந்த நிரோஷாவை சுத்தமாக பிடிக்கவில்லை அவனுக்கு..

அவ்வியக்தன் மதுவின் போதையில் மயங்கி விழுந்ததுமே, மிதுன் பார்த்தீபனை பற்றியும், அவன் மனைவி பிருந்தாவைப் பற்றியும் அவனுக்குத் தேவையான அத்தனை தகவலையும் வாங்கியிருந்தான்.. காலையிலேயே போலீஸ் ஸ்டேஷன் சென்று, பார்த்தீபனையும் பார்த்து விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறான்..

இந்த அட்ரெஸை கொடுத்தது கூட பார்த்தீபன் தான்..

இங்கு வந்து இவளை மிரட்டிக் குழந்தை பிறந்ததும் குழந்தையை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நப்பாசையில் தான் மிரட்டி விட்டுப் போகலாம் என வந்திருந்தான்..

ஆனால் இங்கு.. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக அல்லவா அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

“இங்கே பாருங்க பிருந்தா..”

“வந்ததுல இருந்து உங்களைத்தான் பார்த்துட்டு இருக்கோம்” என நக்கலாக பதில் சொன்னாள் நிரோஷா..

“உன்கிட்ட நான் கேட்டேனா.. வாயை மூடு” என்பதை போல் சைகை செய்தான்..

“சார் நீங்க என்ன எதுக்காக தேடி வந்தீங்களோ, அந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க சார்.. நான் ஹாஸ்பிட்டல் வரைக்கும் போக வேண்டியதிருக்கு..” என்ற பிருந்தாவைக் கண்டு பதறி விட்டான் மிதுன்..

“என்னாச்சி பிருந்தா?. ஏதாவது ஹெல்த் இஸ்யூ வா.. என் கூட வாங்க. **** ஹாஸ்பிட்டல் போகலாம்” என பிரபலமான மருத்துவமனையின் பேரை சொல்லி அழைத்தான்..

அதிர்ச்சியில் வாயை பிளந்தாள் நிரோஷா..

அவன் சொன்ன மருத்துவமனையின் வாசல் அருகே சென்றால் கூட அதற்கு தனியாக பணம் கட்ட வேண்டும்.

“இருங்க நான் கைனகாலஜி இருக்காங்களான்னு கேட்கிறேன்..” என போனை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தான்..

அவனின் பதட்டம், இருவருக்குமே சற்று வித்தியாசமாகப் பட்டது..

“இங்கே பாருங்க..” என இழுத்தவளுக்குத் தான் எதிரில் இருப்பவனின் பேர் கூட தெரியாதே..

“ஒரு நிமிஷம் பிருந்தா..” என அவள் பெயர் சொல்லி அப்பாயின்ட்மெண்ட் புக் செய்து விட்டுத்தான் போனை வைத்தான்..

“என்னடா ரோதனை இது?” என்று தான் நினைத்தனர் பெணகள் இருவரும்..

பிருந்தாவிற்கு இது அதிகபட்சம் என்றே தோணிச்சு..

“சொல்லு பிருந்தா நான் மிதுன்..” என தன் பெயரை சொன்னான்.

“மிதுன்..” என பிருந்தா அழுத்தமாக அழைத்தாள்..

அவளின் அழுத்தமான அழைப்பில் தான் சற்று நிதானமாகினான் மிதுன்..

“எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க?.. நான் ஹாஸ்பிட்டல் போறது நார்மலான செக்கப்க்குத் தான்..” என்றவளின் ஆறுதல் வார்த்தைகள் அவன் காதுகளில் விழவேயில்லை..

“பரவாயில்லை பிருந்தா.. குழந்தையோட ஹெல்த் ரொம்ப முக்கியமில்லை.. அதுனால ப்ளீஸ்.. ஒரு டைம் என் கூட வாங்க..” என இறைஞ்சும் குரலில் கேட்டவனைக் கண்டு கண்களை சுருக்கினாள்..

‘வரும் பொழுது இருந்த தோரணை என்ன? இப்பொழுது கெஞ்சிக் கொண்டிருக்கும் தோரணை என்ன?’ என்று தான் நிரோஷா நினைத்தாள் மனதுக்குள்..

“சார் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?.. வீட்டுக்குள்ள வரும் போது அந்நியன் மாதிரி வந்துட்டு, இப்போ அம்பி மாதிரி பேசிட்டு இருக்கீங்க?.” என நக்கலாக கேட்ட நிரோஷாவை பார்த்து முறைத்துக் கொண்டே பிருந்தாவின் முன்பாக வந்து நின்றான் மிதுன்..

“உங்கக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்?.. பேசலாமா?..” என்றவனை சற்று அதிர்வுடன் தான் பார்த்தனர் பெண்கள் இருவரும்..

என்னதான பிருந்தா நெருங்கிய தோழி என்றாலும், அவளுக்கென்று பெர்சனல் என்பதை உணர்ந்த நிரோஷா ஹாலில் இருந்து தன்னறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டாள்..

அவள் கதவை மூடியதை உணர்ந்த மிதுன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்..

அவனுக்கு நேர் எதிரில் இருந்த சோபாவில் அமரந்தாள் பிருந்தா..

“நீங்க ஏன் பிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?..” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் பிருந்தா..

அவள் இன்னும் பார்த்தீபன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வரவில்லை..

அதற்குள் இன்னொரு திருமணமா? திருமணம் என்கின்ற வார்த்தையே அவளுக்கு கசந்துப் போய்விட்டது..

இவன் என்ன தான் சொல்ல வருகிறான் என்பதை போல் பார்த்தாள் பிருந்தா..

“பிருந்தா.. பார்த்தீபன் கூட இனி மேல் நீங்க வாழுவீங்கன்னு எனக்கு தோணலை.. டிவோர்ஸ் அப்ளை பண்ணியிருக்கீங்கன்னா, அந்தளவுக்கு அவனை வெறுக்குறீங்கன்னு புரியுது..” என்றவன் அலைப்புறும் பிருந்தாவின் விழிகளைப் பார்த்துக் கொண்டே, தான் அடுத்த சொல்ல நினைத்ததை சொல்ல ஆரம்பித்தான்..

“நீங்க இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிக்கிறீங்க தானே..” என்ற மிதுன், மெல்ல பிருந்தாவின் மனதைக் கலைக்க பார்த்தான்..

அவனை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா, “சரி மிதுன் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என பிருந்தா சொன்னதும் தான் தாமதம், சோபாவில் இருந்து துள்ளிக் குதித்தெழுந்தான் மிதுன்..

“தாங்க்யூ.. தாங்க்யூ சோ மச் பிருந்தா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க, உங்களுக்கு இன்னொரு கல்யாணத்தை ஒரு அண்ணனா நானே பண்ணி வைக்கிறேன்.. கல்யாணத்துக்கு உண்டான எல்லா செலவையும் நானே பார்த்துக்கிறேன்”

“ஓஹ்.. நீங்களே செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க?” என கேட்டவளின் உதடோ இகழ்வாக புன்னகைத்தது அவனைப் பார்த்து..

“அப்படி நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா, உங்களுக்கு என்ன யூஸ்?” என சாதாரணமாக கேட்டாள் பிருந்தா..

“என்ன யூஸா?.. என்ன பிருந்தா நீங்க?. நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிப் போயிட்டீங்கன்னா, உங்க வயித்துல இருக்கிற குழந்தையை நாங்க வாங்கிப்போம்..” என கூலாக மிதுன் சொல்லி முடிப்பதற்குள்..

“வெளியே போடாஆஆ நாயே..” என எட்டுத்திக்கும் கேட்கும் அளவிற்கு கத்தியிருந்தாள் பிருந்தா..

அவளின் சத்தத்தில் அறைக்குள் இருந்த நிரோஷா வேகமாக ஓடி வந்தாள்..

“பிருந்தா ஆர் யூ ஓகே.. ஏன் இப்படி கத்துற?..” என்றவள் மிதுனை முறைக்கவும் தவறவில்லை..

“ஏய்ய்ய்.. அறிவில்லை.. உனக்கு நான் எப்படியொரு ஆஃபர் கொடுத்திருக்கேன்.” என்ற மிதுனை அறைவதற்காக கையை ஓங்கி விட்டாள் பிருந்தா..

தன்னை அடிக்க ஒரு சிறு பெண் வருகிறாளா? என மிதுன் அதிர்ந்து நின்றான்..

ஆனால் ஓங்கிய பிருந்தாவின் கைகள், அவன் கன்னத்தை தழுவவில்லை..

“நீ அண்ணான்னு சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை தடுத்து நிப்பாட்டி வச்சிருக்கு.. நான் பத்து எண்றதுக்குள்ள நீ ஓடிப்போயிடு. இல்லை கண்டிப்பா நான் அடிச்சிருவேன்.. போடாஆஆஆ” என்றவளை முறைத்துக் கொண்டே வெளியேறினான் மிதுன்..

அவனால் இந்த அவமானத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை

“எல்லாத்துக்கும் உங்களை சேர்த்து பார்த்துக்கிறேன்.” என்றவன் போகும் போக்கில், நிரோஷாவை முறைத்து விட்டுச் செல்லவும் மறக்கவில்லை.

மிதுன் வீட்டை விட்டு வெளியேறவும், வாய் விட்டு கதறியழுதாள் பிருந்தா..

அவளின் நிலையறிந்து, ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் நிரோஷா..

“இப்படியே அழுதா எல்லாம் சரியாப் போகுமா? பிருந்தா… தெளிவான முடிவெடு.. இந்த மாதிரி கழிசடைங்க எல்லாம் இனி வீட்டுப் படியேற முடியாத அளவுக்கு நான் பார்த்துக்கிறேன்.”

“ம்ம்ம்.. நிரோஷா எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?..”

“என்னால முடிஞ்சதுன்னா கண்டிப்பா பண்ணுவேன்..”

“என்னோட ப்ளாட்டை அவ்வியக்தன் பேர்ல மாத்தணும் டா..”

“வாட்ட்ட்..” என பலமாக அதிர்ந்தாள் நிரோஷா..

“ஏன்டி.. அது உன் ப்ளாட் தானே?..” என்ற நிரோஷாவைப் பார்த்து இல்லை எனும் விதமாக தலையாட்டியவள்,

“அது என் ப்ளாட் இல்லை.. அவரோட ப்ளாட் தான்.. அவர் கொடுத்த காசுல தான் அந்த ப்ளாட் வாங்குனோம்.”

“எப்படியிருந்தாலும், ப்ளாட்டை திருப்பிக் கொடுக்கணுமா?..” என்ற நிரோஷாவை பார்த்து விரக்தியாக சிரித்தாள்..

“அந்த ப்ளாட் எனக்கு ஞாபகப்படுத்துறது எல்லாம் துரோகம் தான் நிரோ.. கண்டிப்பா எனக்கு அந்த ப்ளாட் வேண்டாம்.. நீ அதுக்கு உண்டான ஏற்பாடு மட்டும் பண்ண முடியுமா?..” என்றவளை பார்த்து தலையை மட்டும் ஆட்டினாள் நிரோ..

“சரி” என்றவள், இரண்டு மணி நேரத்தில்.. பிருந்தாவின் பேரில் இருந்த ப்ளாட்டை அவ்வியக்தன் பேரில் மாற்றியிருந்தாள்..

அவ்வியக்தனுக்கு சொந்தமான ஹோட்டலில் அவனை சந்திப்பதற்காக வந்திருந்தாள் பிருந்தா..

அங்கிருந்த மேனேஜரிடம், “பார்த்தீபன் ஒய்ஃப் பிருந்தா வந்திருக்கேன்னு சொல்லுங்க..” என்று மட்டும் தான் சொல்லி அனுப்பினாள்..

பார்த்தீபன் ஜெயிலுக்குப் போன விஷயம் மட்டுமே அவருக்கு தெரியும் என்பதால், ஹெல்ப் கேட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்து அவ்வியக்தனுக்கு அழைத்துச் சொல்லியிருந்தார்..

பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு டேபிளில் மட்டுமே இருவர் அமர்ந்திருந்தனர்.. ப்ளாக் கலர் பேன்ட், பளாக் கலர் சட்டை, கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தவனின் ஒட்டுமொத்த பார்வையும், தன் டேபிளில் இருந்த போனில் தான் நிலைத்தது..

ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வைரலாகப் பரவிக் கொண்டிருக்கும் வீடியோ தான்..

கர்ப்பிணி பெண் தன் கணவனை நடுரோட்டில் செருப்பால் அடிக்கும் காட்சி தான்..

நேற்று போட்ட வீடியோ 24 மணி நேரத்தில் பிரபலமாகி விட்டது..

அந்தக் கர்ப்பிணி பெண் வேறு யாருமல்ல பிருந்தா தான்.

தன் கணவனை ஓடவிட்டு நடுரோட்டில் செருப்பால் அடித்திருந்தாள்..

போனில் இருந்து விழிகளை உயர்த்தி, தன் எதிரில் எந்த வித சலனமும் இன்றி சூப் அருந்திக் கொண்டிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான் அவ்வியக்தன்..

“உன் புருஷனை இப்படி நடுரோட்டுல அடிக்கிறீயே உனக்கு வெட்கமா இல்லை?..”

“என்னை கூ*டிக் கொடுத்து, 3 கோடி லக்சரி அப்பார்ட்மெண்ட் வாங்குனானே, அப்போ அவனுக்கு வெட்கமா இல்லை..” என வெடுக்கென கேட்டவளின் வார்த்தைகளில் தான் வலி இருந்தது.. அவள் முகத்தில் கடுகளவும் வலியில்லை..

கோபமும், அளவு கடந்த ஆத்திரம் மட்டுமே இருந்தது.. தன் நம்பிக்கையை ஒருவன் உடைத்தெறிந்து விட்டானே என்கின்ற ஆத்திரம் தான் அது..

“என்னை ஏன் பார்க்கணும்னு சொன்ன?..” என்றவனின் முன்பாக ஒரு பத்திரத்தை நீட்டினாள்..

அதை வாங்கிப் படித்தவனின் முகம், நொடியில் இறுகியது..

“என்ன வாங்குன பணத்தை திரும்பக் கொடுத்துட்டா, உன்னை அப்படியே விட்டுருவேன்னு நினைக்கிறீயா?.. அதெல்லாம் முடியாது.. என் குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு நீ எங்க வேணா போ.. எவனை வேணும்னாலும் செருப்பால அடி..” என்றவனை விழிகளை உயர்த்தி ஒரு பார்வை பார்த்தவள்,

“குழந்தையை தரமுடியாதுன்னா என்ன பண்ணுவ?..”

“கோர்ட்டுக்குப் போவேன்..” என்றவனின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தேன்.

“போ.. தாராளமா போ.. ஆனா என் கூட என் குழந்தையும் ஜெயிலுக்குள்ள தான் வளரும்.. பரவாயில்லையா?”

“எல்லாம் மூணு மாசம் வரைக்கும் தானே.. அப்புறம் குழந்தை பிறந்தா, அதை நான் தூக்கிட்டுப் போயிடுவேன்.. பார்ன் வித் கோல்ட் ஸ்பூன் மாதிரி வளர்ப்பேன் என் குழந்தையை” என்றவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தாள்.

“ஆமா டா.. இது” என வயிற்றை சுட்டிக் காட்டியவள், “ஆயா சுட்ட வடை பாரு.. நீ தூக்கிட்டு ஓடிப்போறதுக்கு..”

“இங்கே பாரு.. வெள்ளை சாக்பீஸூ..” என்றவளை அதிர்ந்து பார்த்தான்..

“என்னது வெள்ளை சாக்பீஸா..”

“ஆமா.. அதான் வெள்ளையா இருக்கல்ல.. மூணு மாசத்துல பிள்ளையை தூக்கிட்டு ஓடிரலாம்.. என்னை அழ வச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே.. ஏன்னா அதெல்லாம் உன்னால முடியவே முடியாது.. என்னைப் பத்தி உனக்கு தெரியாது.. எனக்கு ஒரு கண்ணு போனா, என் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு நினைக்கிற ஆள் நான்.. என்கிட்ட விலகியே இரு.. அதான் நீ கொடுத்த 3 கோடியை கொடுத்துட்டேனே.. வேற எவளையாவது வாடகைத்தாயா புடிச்சி, புள்ள பெத்துக்க..” என்றவள் தான் குடித்த சூப்பிற்கு காசை எடுத்து டேபிளின் மேல் வைத்தாள்..

“நாங்க நொந்துப் பிள்ளையை பெத்துப்போமா?.. இவரு நோகாம வந்து இன்ஷியல் கொடுப்பாராம்.. போடா.. டேய்ய்ய்ய்ய..” என பேசிவிட்டு சென்ற திசையை தான் அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவ்வியக்தன்..

அவள் அவனை திட்டிக் கொண்டே செல்வதை பார்த்தவனுக்கு எரிச்சல் தான் வந்தது..

“என் குழந்தையை வச்சே என்னை ப்ளாக் மெயில் பண்றல்ல.. இருடி குழந்தை வயித்துக்குள்ள இருக்கிற வரைக்கும் உன் ஆட்டம். அப்புறம் அந்தக் குழந்தையை நான் தூக்கிட்டுப் போயிடுவேன்..” என மனதுக்குள் கருவியபடி அமர்ந்திருந்தான் அவ்வியக்தன்..

அந்த சம்பவங்கள் நடந்து இரண்டு மாதங்களை கடந்து விட்டது..

இப்பொழுது நிறை மாத கர்ப்பிணியாக இருந்தாள் பிருந்தா..

இந்த நொடியா? அடுத்த நொடியா? என்பதை போல் வயிற்றைத் தள்ளிக் கொண்டு இருந்தவளை பார்த்த நிரோஷாவிற்கு திக் திக்கென்று இருந்தது..

அவளுக்கு என்ன செய்ய வேண்டுமென்று கூட தெரியவில்லை.. குழந்தை பிறந்தால் என்ன வேண்டும் என்று கூட அறியாப் பிள்ளையாக இருந்தனர் இருவரும்..

அன்று சோபாவில் சாய்வாக அமர்ந்திருந்த நிரோஷாவை கண்களை சுருக்கிப் பார்த்தாள் பிருந்தா..

“என்னடி நீ? அப்படியே உட்கார்ந்திருக்க?..”

“வேறென்ன பண்ணச் சொல்லுற?.. தலைகீழா வேணும்னா உட்காரவா?..” என்றவளை சிறு சிரிப்புடன் பார்த்தாள் பிருந்தா..

“இன்னைக்கு உனக்கு கேஸ் ஹியரிங் இருக்குல்ல..” என பிருந்தா சொல்லி முடிப்பதற்குள்,

“இல்லை பிருந்தா நான் கோர்ட்டுக்கு போகலை.. என் ஜூனியரை பார்த்துக்கச் சொல்லிட்டேன்.. இன்னும் இரண்டு நாள்ல உனக்கு டேட் சொல்லியிருக்காங்க. உனக்கு எந்த நேரம் வேணா வலி வரலாம்.. சோ நான் உன் கூட தான் இருப்பேன்..” என்றவளின் தோள்வளைவில் சாய்ந்து அமர்ந்தாள் பிருந்தா..

இவள் மட்டும் தானே இன்னும் தான் உயிர்ப்புடன் வாழ காரணம்?.. இவள் இல்லையென்றால் கண்டிப்பாக இந்நேரம் பிருந்தா வேறொரு முடிவினைத் தேடி போயிருப்பாள்.. அவ்வளவு விரக்தியின் உச்சத்தில் அல்லவா இருந்தாள்..

எல்லாம் நன்றாகத் தான் சென்றுக் கொண்டிருந்தது.. சரியாக ஒரு மணி நேரம் கழித்து நிரோஷாவிற்கு ஒரு போன் கால் அடித்தது..

அதை எடுத்துக் காதில் வைத்தவளின் முகம் சட்டென்று மாறியது.. “வாட்ட்ட.” என்றவள், பலமாக நெற்றியை வருடியபடி, “சரி நான் வர்றேன் நீ வை..” என்றவள், வேகமாக பிருந்தாவை தேடி தான் சென்றாள்..

அவளின் முகத்தில் தெரிந்த பதட்டம் பிருந்தாவிற்கு நெற்றி சுருங்கியது..

“என்னாச்சி நிரோ?..”

“நான் சொன்னேன்ல என்னோட ஜூனியரை அனுப்புறேன்னு.. அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சாம்.. இப்போ நான் அவசரமாக கோர்ட்டுக்குப் போயே ஆகணும் பிருந்தா. ஒரு ரெண்டு மணி நேரம் சமாளிச்சிப்பீயா?..” என்ற நிரோவை பார்த்து சரி என தலையாட்டினாலும், உள்ளுக்குள் ஒரு வித பயப்பந்து உருண்டுக் கொண்டிருந்தது அவளுக்கு..

அவளின் பயம் நிறைந்த கண்களைப் பார்த்த நிரோவிற்கும் மனம் பாரமாகிப் போனது..

“சாரி டா எனக்கு வேற வழி தெரியலை.. இந்த கேஸ்ல மட்டும் நான் இன்னைக்கு போகலை.. அந்த கொலைகாரன் ஈசியா வெளியே வந்திடுவான்.. ப்ளீஸ்.. நான் போயிட்டு உடனே வந்திடுறேன்..” என்ற நிரோவை சிரித்தபடி வழியனுப்பி வைத்தாள் பிருந்தா..
 
Status
Not open for further replies.
Top