ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை- கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 10:-

அனைவரையும் அனுப்பி விட்டு, உதயச்சந்திரன், சுந்தரியை தேடி சென்றான். அவனுக்கு நன்றாக தெரியும் கண்டிப்பாக இந்நேரம் தன்னவள் என்ன பாடுபட்டு கொண்டு இருப்பாள் என்று.

வந்தவர்களின் முன் எதுவும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று விலகிச் சென்றவளை வலிய இழுத்து பிடித்து வைக்க மனமில்லை அவனுக்கு.

மேலே தங்களது அறைக்கு சென்றவன் அங்கு சுந்தரி இல்லை என்றவுடன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தான்.

ஆதரவற்ற சிறுமியை போல் அந்த பெஞ்சில் படுத்து உறங்கும் அவளை பார்த்து மனம் உருகி தான் போயிற்று அவனுக்கு.

அவள் அருகே விரைந்து சென்றவன், அவளது தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு கன்னங்களில் காய்ந்து ஓடிய கண்ணீர் தடத்தை துடைத்து விட்டான்.

அவனது மென் ஸ்பரிச தீண்டலிலே பெண்ணவள், அவனை உணர்ந்தது போல், சந்துரு என தூக்கத்தில் உலரியபடி இன்னும் வாகாக படுத்துக்கொண்டாள்.

"பேபி யூ ஆர் ரியலைசீங் மீ ஈவன் அட் யுவர் அன்கான்சியஸ்" மெல்லிய குரலில் சொன்னவன், நெற்றியில் இதழ்களை ஒத்தி எடுத்தான்.

பின் அவனும் கைகளை கட்டிக்கொண்டு கண்களை மூடியவாறு பின்னே சாய்ந்து கொண்டான்.
இருள் கவிழும் வேளையில் ஸ்ரீமதி தனது அண்ணனுக்கு அழைத்தாள்.

அலைபேசி சத்தத்தில் விழித்த இருவரின் பார்வைகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

அவனது கண்களில் எதையோ தேடினாள். இன்னும் தனக்கான நேசம் அந்த கண்களில் இருக்கிறதா, இல்லை வந்தவர்கள் ஏதேனும் சொல்லி தன் மீதான வெறுப்பை உமிழ்கிறதா பார்த்தாள்.

அவளது கண்களில் தெரிந்த அலைப்புருதலும் பரிதவிப்பும் அவனை வெகுவாக தாக்கியது.
"அச்சோ என்னமா இது இன்னும் தலை வலிக்குதா" என்ற அவனின் அக்கரையை கண்டவளுக்கு கண்கள் கரித்தன.

"அது வந்து சந்துரு" ஏதோ கேட்க வந்தவளை குறுக்கிட்டவன்,

"மணி 6:30 ஆயிடுச்சி பேபி வா ரெப்ரஷ் ஆகிட்டு டீ குடிக்க போலாம். மதியம் சரியாக சாப்பிடல நீ. நாளைக்கு ஸ்கூல் போகணும் அதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைக்கணும்". தானும் எழுந்தவன் அவளது கைப்பற்றி எழுப்பினான்.

தங்களது அறைக்கு சென்று வேறு உடை மாற்றி கீழே சென்றவர்களுக்கு தேநீர் கொடுத்தார் கௌரி.

அப்பொழுது தான் அவளுக்கு நவீனின் தாத்தா பாட்டி நினைவு வந்தது.

அச்சோ தாத்தாவும் பாட்டியும் பதறியவள் அறைக்கு செல்ல அது வெறுமையாக காட்சியளித்தது.

பின்னால் வந்த உதய சந்திரனை கேள்வியாய் பார்த்தாள். "ஊருக்கு போய்ட்டாங்க சுந்தரி எவ்வளவு சொன்னாலும் கேட்கவே இல்லமா" வருந்தினான் அவன்.

"எனக்கு புரியுதுங்க அவங்க ஊரை விட்டு பெரும்பான்மையான வெளியில வரவே மாட்டாங்க. நமக்காக இன்னைக்கு வந்துருக்காங்க. அப்படி இருக்கும் போது நாம அவங்கள தங்க சொல்லி கட்டாயப்படுத்தறது சரியில்ல. அவங்க நவீன் இங்க வேலை செய்யும்போது கூட அவனோட தங்கறதுக்கு ரொம்ப யோசிப்பாங்க. இங்க இருந்து அவங்க கிராம கொஞ்ச தூரம் தான். நவீன் தான் கட்டாயப்படுத்தி மாசத்துல பாதி நாள் அவன் கூட வச்சுப்பான். இப்போ அவன் ஃபாரின் போனதுக்கு அப்புறம் நான் மாசத்துக்கு ஒரு தடவை போய் பார்த்துட்டு, ரெண்டு நாள் அவங்களோட இருந்துட்டு வருவேன் சந்துரு".

ஆமோதிபாய் தலையசைத்தான் உதயச்சந்திரன் "பெரியவங்க அப்படிதான்மா வாழ்ந்த இடத்தை விட்டுக் கொடுத்துக்க மாட்டாங்க. நாமளும் ஒரு நாள் போய் அவங்கள பார்த்துட்டு வருவோம்"

சிரிப்புடன் சொன்னவன், "அதுவும் கிராமத்துல வாழ்ந்தவங்க சிட்டி லைப்க்கு வாய்ப்பே இல்லை, ரெண்டு பேரும் ஆதர்ஷன தம்பதிகள் இல்ல. கியூட் கப்பல்ஸ்" சான்று அளித்தான் உதயச்சந்திரன்.

"ஆமாம் சந்துரு பார்க்க ஒருத்தருக்கு ஒருத்தர் முறைச்சுக்கிற மாதிரி தான் தெரியும் ஆனா அவங்களுக்கு இடையில இருக்க புரிதலும் அன்யோனியமும் பார்க்க அழகா இருக்கும்"

"நாமளும் அப்படி வாழ்வோம் சுந்தரி".உறுதி அளித்தான் உதயச்சந்திரன்.

திருமண பந்தத்தில் தரும் உறுதியை காப்பாற்ற ஒருவர் முயன்றால் மட்டும் போதாது. அது என்றும் இருக்கை தட்டும் ஓசையாகவே இருக்கும். இவன் தந்த உறுதியை அவளும் பற்றி அதை வழிநடத்த வேண்டும். அதற்கு நம்பிக்கையும் அன்பும் அடிப்படை தேவையாகும்.

வரவேற்பறையில் நால்வரும் அமர்ந்திருக்க. கௌரி "இன்னும் ரெண்டு நாள்ல மார்கழி மாசம் தொடங்கிடும். ஸ்ரீ காலையில எழுந்துச்சு கோலம் போடணும் மறந்துடாத" மகளிடம் கூறினார்.

"டெய்லி தானே கோலம் போடுவாங்க மார்கழி மாசம் மட்டும் என்ன விசேஷம்"

"மார்கழி மாசம் கடவுளுக்கான மாசம்ன்னு சொல்லுவாங்க அந்த மாசம் அதி காலையில எழுந்திருக்கிறது உடலுக்கு நல்லதுன்னும் சொல்லுவாங்க. அம்மாவும் ஸ்ரீயும் கலர் கோலம் போடுவாங்க" புரியாமல் பார்த்தவளிடம் விளக்கி சொன்னான் உதய்.

"அத்தை நானும் வரவா கோலம் போட" கௌரியிடம் கேட்டாள் சுந்தரி.

"அதுக்கு என்ன மா வா" புதிதாக திருமணமானவர்களை அதிகாலையில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தவர் மருமகள் கேட்கவே சரி என்றார் .

"ஆனா எனக்கு கோலம் போட தெரியாது நீங்க தான் சொல்லிக் கொடுக்கணும்" தலையைக் கவிழ்த்தபடி மெல்லிய குரலில் சொன்னவளை பார்த்த கௌரி,

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லம்மா. நானே கல்யாணத்துக்கு அப்புறம் தான் கத்துக்கிட்டேன். அதுவும் சாவித்திரி அக்காவை பார்த்து தான் கத்துக்கிட்டேன்".

பின்னர் இரவு உணவு தயாராகவே உண்டவர்கள் தங்களது அறைக்கு அறைக்கு சென்றனர்.

அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்தவள். மறுநாள் அணிந்து செல்ல உடையையும் தயார் நிலையில் இஸ்திரி போட்டு எடுத்து வைத்தாள்.

கட்டிலில் கைகளை குறுக்கே கட்டியபடி சாய்ந்து அமர்ந்தவாறு மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.

வெகு நாட்கள் கழித்து பள்ளி செல்லும் சிறுமியாய் உற்சாகத்துடன் ஒவ்வொரு பொருளாக யோசிப்பதும் எடுத்து வைப்பதுமாக இருந்தாள் பெண்.

கொலுசொலி ஜதி சொல்ல இடை தொட்ட கூந்தல் நடனமாட வலம் வந்தாள் அறை எங்கும். மனைவியை அனு அனுவாக ரசித்தான்.

சேலைக்கு பொருத்தமான கண்ணாடி வளையல்களை எடுத்து வைத்தவளை பார்த்தவனுக்கு தங்க வளையல்களை வாங்க மறந்தது நினைவில் வந்தது.

தன்னவளுக்கு கண்ணாடி வளையல்கள் மீதுள்ள பிடித்தம் தெரிந்தது அவனுக்கு, அவளது வளையல்கள் சேகரிப்புகளை பார்க்கையில்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை திரும்பி பார்த்தவள், "என்ன சந்துரு" என்றாள்.

இரு கைகளையும் விரித்தவன் வா என்ற ரீதியில் தலையசைத்தான். விரைந்து சென்று அவனது கைகளில் சரண் புகுந்தாள்.

கை அனைப்பில் வைத்துக் கொண்டவன். "இன்னைக்கு ஒரு அங்கிள் வந்தாங்கள்ள அவங்க பேரு" ஆரம்பித்தவனை,

அவசரமாக இடை புகுந்தவள்
"சந்துரு நாம அந்தமான்க்கு ஹனிமூன் போலாமா" கேட்டாள். "போகலாமே" என்றவன்,

"எப்போ போகலாம் அதையும் நீயே டிசைட் பண்ணு"

"கிறிஸ்மஸ் ஹாலிடேஸ் ஸ்கூல் லீவ் விடுவாங்க அப்போ போகலாம்"

"ம் நைஸ். ஒரு மாசம் இருக்கு கிட்டத்தட்ட. பட் பைன், நியூ இயர் செலிபிரேட் பண்ண மாதிரி ஆயிடுச்சு ஹனிமூன் கொண்டாடின மாதிரி ஆயிடுச்சு" சிரித்தபடி கூறினான் உதய்.

சுந்தரி் இப்போது இருக்கும் மனநிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாதவளாய் பேச்சை மாற்றினாள்.

சுந்தரி பேச்சை மாற்றிய விதம் உதயசந்திரனுக்கு தெரிந்து தான் இருந்தது. இருப்பினும் அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்லவே என்று எண்ணியவன் விட்டுவிட்டான்.

"இன்னும் ஏதாவது எடுத்து வைக்கணுமா இல்ல தூங்கலாமா சுந்தரி".

"அவ்வளவுதான் தூங்கலாங்க" சொன்னவள் தானே சென்று அவனது மார்பில் படர்ந்து கொண்டாள்.

அவளது செயலை விழிவிரித்து பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அணைத்துக் கொண்டான்.

சுந்தரியின் மனதில் இருந்ததெல்லாம் ஒன்றுதான். எத்தனை நாட்கள் அவனோடு வாழ போகிறோமோ அத்தனை நாட்களையும் அனுபவித்து வாழ வேண்டும் என்பதுதான் அது.

மற்ற நாட்களை விட இன்று தனது அன்னையின் நினைவு அவளை வெகுவாக தாக்கியது. அதனை கடந்து வர முடியாமல் தவித்தவள் அவனையே ஊன்றுகோலாக பற்றி கொண்டாள்.

உன்னை நான் அறிவேன் என்பது போல் அவளது முதுகை வருடி கொடுத்து தூங்க வைத்தான்.

ஆதவன் தனது நேச கரங்களை இப்புவியியை நோக்கி செலுத்தி விடியலை தொடங்கி வைத்தான்.

மெல்ல கண்விழித்த சுந்தரி குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, பால்கனியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள்.

யூடியூபில் டீ வைப்பது எப்படி என்று பார்த்தவள். கீழே சமையலறைக்கு சென்று அனைவருக்கும் தேநீர் தயாரித்தாள்.

ஸ்ரீயும் எழுந்து வரவே "குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஸ்ரீ" என்றாள் தேநீர் தந்தபடி.

இரண்டு வாய் பருகியவள் "அண்ணி ஏ1, ஃபர்ஸ்ட் கிளாஸ் போங்க" பாராட்டினாள். அவளது அண்ணி என்ற அழைப்பில் புருவம் சுருக்கி பார்த்தாள் சுந்தரி.

ஸ்ரீயோ இயல்பாக "எனக்கு எப்படி ஒரே அண்ணனோ அதே மாதிரி ஒரே அண்ணி நீங்க மட்டும் தான். சோ நீங்க அண்ணி சொல்ல வேணாம்னு சொன்னாலும் நான் சொல்லுவேன்" அழுத்தமாகவே சொன்னாள்.

அவர மாதிரியே எல்லாரும் இருக்காங்களே நினைத்துக் கொண்டவள் மெலிதாய் சிரித்தாள்.

உதயச்சந்திரனின் கண்களின் வழி இந்த உலகை கண்டாள் சுந்தரி. அதை அவள் உணர்ந்து கொண்டாலோ இல்லையோ அவளுக்கே வெளிச்சம்.

"அப்புறம் நான் உங்களை விட சின்ன பொண்ணு தானே வாங்க போங்க சொல்ல வேண்டாம். அண்ணா மாதிரி நீ வா போ ன்னு சொல்லனும் சரியா". தமையனின் மனைவிக்கு உரிமையை சொல்லி அழைக்க பாடம் எடுத்தாள் ஸ்ரீமதி.

ஸ்ரீமதியின் அலைபேசி அழைக்கவே அதனை ஏற்று குட் மார்னிங் டி சொல்லு என்ற அவளின் வார்த்தையில் அடித்துப் பிடித்து மாடிக்கு ஓடினாள்.

அங்கு, தன் முன்னே மூச்சிரைக்க நின்றவளை பார்த்த உதயின் மனமோ 'ஐயோ என்னென்வோ பண்ண தோணுதே இவள, மனுஷன ரொம்பவும் சோதிக்கிறா' மனதிற்குள் நொந்து கொள்ளவே முடிந்தது அவனால்.

கைகளை கட்டி அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தான். "சாரி சாரி சாரி சந்துரு குட் மார்னிங் சொல்லனும் இல்லனக கத்துவீங்களா நினைச்சு ஓடி வந்துட்டேன் இப்பதான் எழுந்தீங்களா" கேட்டபடி அவனை நெருங்கியவள்.

அவனது மனமோ தாறுமாறாக துடித்தது. நிஜமாவே முத்தம் கொடுத்துடுவாளோ பாக்கலாமே.

அருகில் வந்தவள் அன்று போல் இன்றும் மீசையை பற்றி இழுத்து தாடையில் முத்தமிட்டாள்.

'ஐயோடா இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா' மனதிற்குள் சலித்துக் கொண்டான்.

'இதுவே பெரிய விஷயம் டா உதய்" மனம் எடுத்துக் கூறவே ஆமாம் என்ற ரீதியில் தலையாட்டினான்.

மீண்டும் தன்னை அழுத்தமாய் நோக்கியவனை பார்த்து கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள்.

"அது வந்து சீக்கிரம் கரெக்டா குட் மார்னிங் சொல்ல பழகிக்கிறேன் சந்துரு". எங்கோ பார்த்தபடி கூறியவளை இறுக அணைத்து விடுவித்தவன்.

"குளிச்சிட்டு ரெடியாகி வா ஸ்கூலுக்கு டைம் ஆயிட போகுது" என்க

"அரைமணி நேரம் போதும் சந்துரு நான் ரெடியாக".

"கீழ வாங்களேன் நான் முதன் முதலா டீ போட்டு இருக்கேன் குடிச்சு பாருங்க".

அவள் குடும்பத்தில் ஒருவராக முனைவதும், தன்னை பொருத்திக்கொள்ள முயல்வதும், அவளது செயலில் நன்றாக புரிந்தது அவனுக்கு.
ஆயினும் "இதெல்லாம் செய்யணும்னு அவசியம் இல்ல சுந்தரி" சொல்லவே. அவனை முறைத்து பார்த்தாள்.

"இது என்னடா நம்ம வேலைய இவ செய்ற" முனுமுனுத்தவன் "கீழ போலாம் வா".

இருவரும் கீழே செல்லவே கௌரி "டீ நல்லா இருக்குமா" என்றார்.

புன்னகையுடன் தலையசைத்தவளிடம். அண்ணி உங்களுக்கும் அண்ணனுக்கும் இந்தாங்க. ஏற்கனவே அவள் பாதி குடித்து வைத்திருந்த கப்பும், உதய சந்திரனுக்கு புதிதாக ஒரு கப்பில் டீயும் கொண்டு வந்து தந்தாள்.

அவள் பருகிய கோப்பையை அவன் கையில் எடுக்கவே, சுந்தரி "அது என்னோட டீ" சொல்ல வந்தவளை உஷ்ண பார்வையால் அடக்கினான். அவள் பருகிய கோப்பையிலே அவனும் பருகினான்.

அதில் சங்கோஜபட்டவளாய் கௌரியிடம் திரும்பி "அத்தை சாம்பாருக்கு காய் கட் பண்ணி வச்சிட்டேன்" சொல்லவே,

"நானும் இட்லிக்கு ஊத்தி வச்சுட்டேன்ம்மா. சாம்பாருக்கு குக்கர் அடுப்புல வச்சுட்டேன். இதோ ஸ்ரீ சட்னி அரைச்சிடுவா நீ போய் ரெடியாகிக்கோ".

தங்களது அறைக்கு சென்று குளித்து வந்தவள் உடை மாற்றி முடிக்கவே, உதயச்சந்திரன் உள்ளே நுழைந்தான்.

தலைவாரி கொண்டிருந்தவளை பார்த்து "மத்தவங்க முன்னாடி பார்த்து பேசு சுந்தரி" சொல்ல.
அவளுக்கும் அவளது செயல் புரியவே அமைதியாக ஏற்றாள். ஸ்ரீமதியின் முன் வாய் விட போன தனது செயலை புரிந்து கொண்டாள்.

குறும்புடன் அவளது கைப்பற்றி இழுத்து, இதழை வருடியவன், "அப்புறம் முத்தத்தை ஷேர் பன்னும்போது டீ கப் மாத்தி எடுக்கிறது தப்பில்லை. என்ன டீச்சரம்மாக்கு புரியுதா". அவளது இதழ்கள் அவனது இரு விரல்களில் சிக்கிக்கொண்டன. ம்ம்ம் என்று தலையாட்டவே விட்டான்.

பின்னர் அவனும் தயாராகி வரவே இருவரும் கீழே சென்று உணவு உண்டார்கள். தானே அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.

சுந்தரியை பள்ளியில் விட்டு விட்டு தனது கடைக்கு சென்றவனை, எதிர்கொண்டாள் ஸ்ரீமதி.

தங்கையை அங்கு எதிர்பாராதவன் "என்ன ஸ்ரீமா எதுவும் வாங்கணுமா அம்மா சொன்னாங்களா" வரவேற்றவன் தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

"இல்லண்ணா நேத்து சாவித்திரி பெரியம்மாவும், மேகலாத்தையும் பேசினது நடந்துக்கிட்டது சுத்தமா பிடிக்கல அதான்" ஆரம்பித்தவள் திருமணத்தன்று அவர்கள் பேசியதை மொத்தமாக சொல்லி முடித்தாள்.

அன்றே சொல்லவில்லை என்ற கோபப்படுவானோ. பயத்துடனே ஏறிட்டாள் தனது அண்ணனை.

"நீ அன்னைக்கே ஏன் இதை சொல்லல" முறைத்தபடி கேட்டவன்.

"நல்லவேளை சௌந்தர்யா இன்டர்ன்ஷிப்ல இருக்கிற இந்த நேரத்துல கல்யாணத்தை முடிச்சோம். இல்ல இந்த மேகலா அத்தை ரகளை பன்னி, சௌந்தர்யாவ ஏதாவது செஞ்சி கல்யாணத்தை பண்ணி முடிச்சுருப்பாங்க" பெருமூச்சுடன் சொன்னான்.


பின்னர் "உன் அண்ணிக்கு இன்னும் நிறைய விஷயம் புரியலம்மா நாமதான் அவளை பாத்துக்கணும்". ஆமோதிப்பாய் தலையை அசைத்தாள் ஸ்ரீமதி.
 
அத்தியாயம் 11:-

பள்ளியில் உணவு இடைவேளை.

ஹாஸ்டலில் இருக்கும் பொழுது காலையில் டிபன் பாக்ஸை வைத்து விட்டால் அவர்களை ஏதாவது ஒரு கலவை சாதம் செய்து கட்டிக்கொடுத்து விடுவார்கள். காலையிலேயே மதியத்திற்கும் எடுத்து வந்து விடுவாள்.

காலையில் கௌரியிடம் கேட்க கூச்சப்பட்டு கொண்டு மதிய உணவை பற்றி வாயை திறக்கவில்லை.

ஒருவேளை உணவிற்காக கையேந்தி அவள் பட்ட அவமானங்கள் தான் நிறைய உள்ளதே. பசியை கட்டுப்படுத்தி பழகியவளுக்கு பட்டினி ஒன்றும் புதிதல்லவே.


உணவை வெளியில் வாங்கி வர சொல்லலாம் என்றால் திருமணமான பெண் வெளியில் உணவு வாங்கி உண்பதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லையே.

தண்ணீரைக் குடித்து பசியை அடக்கி கொண்டிருந்தவளிடம், சுந்தரியம்மா என்று அழைத்தபடி காவலாளி வந்தார்.
அவளிடம் ஒரு பையை கொடுத்து "இதுல உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாங்கம்மா" உரைக்கவே எனக்கா வியப்பாய் கேள்வி கேட்டவளிடம் "ஆமாம்மா ஒருத்தர் வந்து கொடுத்திட்டு போனாங்க".

உதயசந்திரனாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டாள். "சோ ஸ்வீட் சந்துரு நீங்க" மனதோடு கொஞ்சினாள் தன்னவனை.

உடனே உதய சந்திரனுக்கு 'நான் சாப்பிட்டு விட்டேன்' என்று செய்தி அனுப்பி விட்டாள்.

பையை பிரித்தவள் பார்த்தது, அவளுக்கு பிடித்த பிரிஞ்சி சாதமும் முட்டை மிளகு வறுவலும் தான்.

'வாவ் சந்துரு நமக்கு பிடிச்சத சொல்லி செஞ்சு அனுப்பி இருக்காங்க போல' மனதோடு பாராட்டிக் கொண்டாள்.

வயிறு நிறைய திருப்தியாக உண்டவள் தனது மதிய வகுப்பிற்கு சென்றாள்.

நேரம் போனதே தெரியவில்லை. உதயச்சந்திரன் வெளியில் காத்திருக்கிறேன் என்று அழைத்துச் சொல்லவே பெண்ணவளுக்கு பள்ளி முடிந்த பின்னும் தான் அமர்ந்து இருப்பது புரிந்தது.

"ஐயோ சுந்தரி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு நல்லா பதிய வச்சுக்கோ நீ பாட்டுக்கு மறந்துட்டு இங்கேயே உட்கார்ந்திருக்க" தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

பழக்கதோஷத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவள் உதயச்சந்திரன் அழைத்த பிறகே எழுந்து சென்றாள்.

காரில் வந்து அமர்ந்தவளை பார்த்த உதயசந்திரன், "இன்னிக்கு நாள் எப்படி போச்சு சுந்தரி" கேட்கவே "சூப்பரா போச்சு சந்துரு" உற்சாகமாக பதில் அளித்தாள்.

வீட்டிற்கு வந்தவர்களை எதிர்கொண்ட கௌரி, சாப்பாட்டு பையை வாங்கியபடி, "சுந்தரிம்மா சாப்டியா. சாப்பாடு நல்லா இருந்துச்சா. உனக்கு பிடிச்ச பிரிஞ்சி ரைஸ்சும் முட்டை வறுவல் வச்சிருந்தேன். உங்க ஸ்கூலுக்கு வந்தேன் லஞ்ச் குடுக்க".

சொன்னவரை பாய்ந்து சென்று அனைத்துக் கொண்டாள் திரிபுரசுந்தரி.

அவளது செயலை எதிர்பாராதவர் தடுமாறி விழ போக இருவரையும் தாங்கிக் கொண்டான் உதயச்சந்திரன்.

"அத்தை சாப்பாடு நீங்க...நீங்களா கொடுத்து அனுப்பினீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அத்தை" தேம்பியபடி கூறினாள்.

என்னடா உதய் இது என்பது போல் பார்த்தவரை பார்த்து மெல்ல கண்கள் மூடி திறந்தான்.

அவளது முதுகை வருடியவர் "என்ன சுந்தரிம்மா இது ஒரு பெரிய விஷயமா இதுக்கு யாராவது அழுவாங்களா" ஆற்றுப்படுத்த முயன்றார்.

அதில் இன்னமும் அவள் அழுகை கூடியது "சாப்பாடு ரொம்ப பெரிய விஷயம் அத்தை. நான் காலையில கேட்க கூச்சப்பட்டுக்கிட்டு அப்படியே போயிட்டேன். ஆனா நீங்க என் பசியறிஞ்சு சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கீங்க.
என் அம்மாக்கு கூட எனக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரியாது. ஆனால் நீங்க.... தேங்க்ஸ் அத்தை" புறங்கையால் கண்களை துடைத்த படி கூறினாள்.

தன்னையறியாமல் தன் உணர்வுகளை வெளிபடுத்தினாள் சுந்தரி.

அவளது பேச்சைக் கேட்டு உதயசந்திரனுக்கும் கௌரிக்கும் கண்கள் கலங்கின.

தன்னை முதலில் சமாளித்துக் கொண்ட கௌரி "டேய் முதல்ல மேல கூட்டிட்டு போடா. சின்னப் பிள்ளையாட்டம் அழுதுட்டு போம்மா" கண்களை சேலையில் ஒற்றிய படி கூறினார்.

உயிரினங்களுக்கு, அதுவும் மனித பிறவிக்கு உணவு, உடை, உறைவிடம், இந்த மூன்று அத்தியாவசிய தேவைகளும் சரிசமமாய் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

ஏற்றத்தாழ்வு மிக்க இந்த உலகில், உயிர் வாழ உணவு கிடைக்காத சூழலில் வாழ்ந்த, வளர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒருவேளை உணவும் ஏன் ஒரு பருக்கை உணவும் பெரிதாய் தெரியும். தற்போது சுந்தரியின் நிலையம் அவ்வாறே.

மாடியில் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளை விட்டு விட்டு விரைந்து குளியல் அறைக்குச் சென்று முதலில் தன்னை சமன்படுத்திக் கொண்டான். முகத்தை நன்றாக தண்ணீரை அடித்து கழுவியவன், வெளியில் வந்து பார்த்தது மேஜையில் கவிழ்ந்து படுத்திருந்த சுந்தரியை தான்.

ஒரு பெருமூச்சுடன் அருகில் சென்று தலையை வருடவே, நிமிர்ந்தவள் அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.

"ஜ லவ் கௌரிம்மா சந்துரு" வயிற்றில் முகத்தை புரட்டியவள், அன்னாந்து பார்த்து சொல்ல.

'அய்யோ அடிவயித்துல கிச்சு கிச்சு மூட்டுறாளே' நினைத்தவன். "பேபி லவ் எல்லாம் எனக்கு மட்டும் தான் வேற யாருக்கும் கிடையாது சொல்லிட்டேன்"
"பொறாமையா சந்துரு" சிரித்தாள்.

"லைட்டா" இரு கைகளையும் அகல விரித்து சொன்னான். அவனது பாவனையில் கிண்கிணியாய் நகைத்தாள் நங்கை.

அறையை நிறைத்த அவளது சிரிப்பை ஆதுரமாய் பார்த்தவன். "எதையும் நினைச்சு கவலைப்படாத பேபி. உனக்கு எப்போதும் நான் இருக்கேன்டா".

பின்னர் குளியலறை சென்று முகம் கழுவி வந்தவள். "நான் கோலம் போட்டு பழகபோறேன் சந்துரு" என்றபடி மொட்டை மாடி சென்றாள்.

வரும் வழியில் உதய சந்திரனிடம் கூறி கோலமாவு மற்றும் கலர் பொடியும் கோலம் போடத் தேவையான சில உபகரணங்களும் வாங்கி வந்திருந்தாள் சுந்தரி.

அதனை எடுத்துச் சென்று மொட்டை மாடியில் யூடியூப் பார்த்து கோலம் போட்டு பழகிக் கொண்டிருந்தாள். சிறு பிள்ளைகளின் எழுத்தை போல கோடுகள் நெளி நெளியாய் வந்தது.

அங்கு வந்த கௌரி அதனைப் பார்த்துவிட்டு "முதலில் சிறு சிறு கோலங்கள் புள்ளி வைத்து போட பழகு சுந்தரிம்மா" என்றார். புள்ளிகளுடன் கோடுகள் இணைக்க பெரிதாக சிரமப்பட வேண்டாம் அல்லவா.

பிளாஸ்கில் டீயும், தட்டுகளில் பக்கோடாவும், தண்ணீர் மற்றும் கப் சகிதம் வந்தனர் உதயும் ஸ்ரீமதியும்.

"அம்மா நைட்டுக்கு சென்னா கிரேவி பண்ணிட்டேன். அண்ணா சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வச்சுட்டாங்க. போட்டு எடுத்துட்டா வேலை முடிஞ்சுது".

ஸ்ரீமதி சொல்லவே ஆச்சரியப்பட்டாள் சுந்தரி.

"நானும் அம்மா கூட வாழ்ந்திருந்தா இதே மாதிரி தானே சமையல் கத்து தந்திருப்பாங்க" மனதில் நினைத்ததை வாய் உதிர்த்த பிறகு தெளிந்தவள், தான் ஏதோ தவறு செய்து விட்ட சிறுமியாக வெட்கி தலை குனிந்தாள்.

அவளது மனம் எப்பொழுதும் கட்டுப்பாடுடனே இருக்கும். ஆனால் தனது உணர்வுகள் இன்று ஏன் வெடித்து சிதறுகிறது என்று தெரியவில்லையே கலங்கிப் போனாள். மெல்ல நடந்து கைப்பிடி சுவரை பற்றி கொண்டு தொடுவானத்தை வெறித்தாள்.

அவளது அருகில் சென்றவன் அமைதியாய் நின்று கொண்டான். மெல்ல நகர்ந்து அவனது கை இடுக்கில் கரங்களை கோர்த்து தோல் சாய்ந்து கொண்டாள் தொகைவள்.

"ஏன் சந்துரு எனக்கு மட்டும் இப்படி நடந்துருச்சு" விடையில்லா கேள்விக்கு அவன் மட்டும் எப்படி விடை சொல்ல.

"பேபி" ஏதோ சொல்ல ஆரம்பித்தவனை பார்த்து "எனக்கு அம்மா வேணும் சந்துரு" யாசிப்பவளாய் கண்கள் கலங்கினாள்.

அதில் எலும்புகள் நொறுங்க அணைத்துக் கொண்டவன், என்ன சொல்வதென்று தெரியாமல் "நான் இருக்கேன் சுந்தரிம்மா உனக்கு" கரகரத்த குரலில் கூறியவாறு தலையை வருடிவிட்டான்.

"கடவுள் ஏன் சந்துரு எல்லாம் சொந்தங்களையும் கொடுத்து அதை பாதியில் எடுத்துக்கிட்டு அம்மா கூட சேர்ந்து வாழ முடியாத துர்பாக்கியவதியா என்ன படைச்சான்".

"உங்களுக்கு தெரியுமா சந்துரு அம்மா அப்பான்னு குடும்பமா இருக்கவங்க கிட்ட நான் நெருங்கி பழகாமல் இருப்பேன் எப்போதுமே. ஏன்னா அவங்க அம்மா அப்பா தங்கச்சி அக்கா தம்பி அண்ணான்னு இப்படி ஏதாவது சொல்லும்போது அது என்ன ரொம்பவே தாக்கும். அதனால பெரும்பாலும் யார்கிட்டயும் பேச மாட்டேன் பழக மாட்டேன். ஹோம்ல இருந்த வரைக்கும் எனக்கும் ஒன்னுமே தெரியல இப்ப ஹாஸ்டல்ல இருந்தப்பகூட கூட இருக்கவங்க யாராவது அவங்க வீட்டு ஆளுங்க கிட்ட பேசினா அவ்வளவு ஒரு ஏக்கமா இருக்கும். போன்ல கூப்பிட்டு பேசக்கூட எனக்கு யாரும் இல்லையே சந்துரு".

தனது மனதை கட்டவிழ்த்து கொட்டினாள் அவனிடம்.

"ஸ்கூல் முடிஞ்சு ஹாஸ்டல் போறதுக்கு கூட அவ்ளோ தயக்கமா இருக்கும். ஹாஸ்டல்ல கூட இருக்குறவங்க, சில நேரம் நான் ஒதுங்கி போறதால என்னவோ தெரியல வேனும்னே ரொம்பவும் சீண்டி பாப்பாங்க சந்துரு".

அவள் பேச பேச உதயச்சந்திரன் தனக்குள் உடைந்து போனான். தன்னவளின் காயங்கள் இன்னும் எத்தனையோ.
மொத்தமாய் அவள் வெடித்து சிதறும் போது அவனது நிலை அவளை விட மோசமாக இருக்குமோ.

வளர்ந்த பின்னும் இப்பொழுது கூட இவ்வளவு உணர்வுக்குவியலாய் வேதனைப் படுபவளது, குழந்தை பருவம் எப்படி இருந்திருக்கும் நினைக்கையில் நடுங்கித்தான் போனான் அந்த ஆறடி மனிதன்.

ஆறு வயது சிறுமி ஒருத்தி அந்த 24 வயது பெண்ணின் உணர்வுகளில் முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறாள் என்று தெரியவில்லை அவனுக்கு, ஏன் அவளுக்குமே தான்.

"என்ன முழுசா ஏத்துக்கிட்டது நவீன் ஒருத்தன் தான். என் நண்பன்". கர்வமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.
அந்த நவீனின் மீது அத்தனை பொறாமையாய் இருந்தது உதய்க்கு. ஆயினும் தன்னவளது கடந்த காலத்தில் வசந்தகாலமாக அவனது நட்பு என்று புரிந்து கொண்டான்.

'நானும் தான்டி' சொல்ல நினைத்தான். 'என்றேனும் ஒரு நாள் தான் அவளுக்கு இன்றியமையாதவனாய் மாற வேண்டும்' என்ற எண்ணம் அவனை வெகுவாக தாக்கியது.

"குடும்பம் என்ற கட்டமைப்புக்குள்ள நான் பொருந்தி போவேனான்னு தெரியல சந்துரு. இது எனக்கு எப்போதுமே சந்தேகமாக இருக்கும். நீங்க கல்யாணம் பண்ணிக்க கெட்டப்ப நான் ரொம்ப யோசிச்சது இது தான் சந்துரு. நான் உங்களுக்கு பொருத்தமானவளா உங்க குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பேனா இந்த விஷயம் தான் என்ன யோசிக்க வச்சுது.

'குடும்பம் என்ற கட்டமைப்புக்கு தனியே தகுதிகள் என்று எதுவும் கிடையாது அன்பு ஒன்றே பிரதானமானது அங்கு. அவள் மட்டுமே தனக்கு பொருத்தமானவள்' என்று வாய் வார்த்தையாக கூறுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறந்தது என்று நினைத்தவன்.


அவளது கடந்த காலத்தில் ஒரு சதவீதத்தை கூட தன்னால் மாற்ற இயலாது மாறாக நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வசந்தமாக தரவே எண்ணினான்.

"அப்புறம் எப்படி பேபி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட" பேச்சை மாற்றினான்.

தனது அன்னை தானே இதற்கு முழு காரணம் அதை எப்படி சொல்ல.

"எனக்கு உங்கள பிடிச்சிருக்கு சந்துரு"

"என்ன பிடிச்சிருக்காம் இந்த சந்துரு கிட்ட சொல்லுங்க மேடம்" கிண்டலாக கேட்க.

"எல்லாமே தான் பிடிச்சிருக்கு. என்கிட்ட ரொம்ப கேரிங்கா அன்பா இருக்கிற இந்த சந்துருவ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு'.

"ஹலோ மேடம் நான் கோவக்காரனாக்கும்"
அவனது கூற்றில் அப்படி ஒரு சிரிப்பு வந்தது அவளுக்கு.

"அது மத்தவங்களுக்கு தான் சார் எனக்கு இல்ல" அவளும் கிண்டலாக சொன்னாள்.

"சரி வேற"
இன்னும் அவனுக்கு, தன் மீது உள்ள அவளது பிடித்ததை தெரிந்து கொள்ள மனம் விரும்பியது.

"கண்ண உருட்டி உருட்டி என்ன மிரட்டுவீங்களே அது பிடிக்கும், இதோ இப்படி மனசுக்கு வலிக்காம கிண்டலா பேசுவீங்களே அது பிடிக்கும். என்னை எப்பொழுதும் தோல்ல சாய்ச்சுகிறீர்கள்ள பிடிக்கும். சுந்தரிம்மா, பேபின்னு சொல்றது ரொம்ப பிடிக்கும். நைட் என்ன உங்க கைக்குள்ளேயே வச்சுக்கிட்டு தூங்க வைக்கிறது, உங்களோட இந்த புசுபுசு முடி, அப்புறம் அந்த குட் மார்னிங் கிஸ்". அவனது முகம் பாராமல் ஒருவாறு சொல்லி முடித்து விட்டாள்.

"பேபி" விழி விரித்தவன் "நீ எப்போ குட் மார்னிங் கிஸ் தருவ ஈகர்லி வெயிட்டிங் டா" ரகசியம் பேசினான்.

"யார் தந்தா என்ன" முணுமுணுத்தவளது வார்த்தைகள் அவனது காதில் விழுந்தது போல்,

ஒற்றை விரலால் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தியவன். இரு கரங்களில் கன்னங்களை ஏந்தி இதழ்களைப் பார்த்தான்.

அவனது பார்வையின் வீச்சு தாளாமல், அவளது கரங்கள் உயர்ந்து அவனது மணிக்கட்டை இறுக பற்றிக் கொண்டன.

மெல்ல அவளை நோக்கி குனிந்தவன், இதழ்களை கொள்ளையிட்டான்.

நீண்ட நேரம் நீடித்த அந்த இதழ்களின் சங்கமத்தில், அவளது கடந்த கால நினைவுகளை, கசப்புகளை போக்குபவனாக இன்னும் இன்னும் ஆழ்ந்து போனான்.

அலைபேசி தனது இருப்பை சொல்லி அவர்களை பிரித்தது. எடுத்து பார்த்தவன் "சௌந்தர்யா கூப்பிடுறா" சொல்லவே

சுந்தரிக்கு அந்த முத்தத்தின் தித்திப்பு மறந்து போனது போலானது.

மெல்லிய பொறாமை உணர்வு காதலில் மிக அழகானது தானே அதை சுந்தரியும் உணர்கிறாளோ என்னவோ.

"சந்துரு மேகலாம்மா அவங்களோட பொண்ணு சௌந்தர்யா தானே" கேட்டவளது விழிகள் என்ன சொன்னதோ அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டவன்.

"சொல்லு சௌந்தர்யா" என்றான்.

"மாமா அழைத்தவள்

"இன்னும் ஒரு வாரத்துல இன்டெர்ன்ஷிப் முடிஞ்சுரும் மாமா அப்புறம் அது பத்தின டாக்குமெண்டேஷன் சப்மிட் பண்ணனும். அப்புறம் கிறிஸ்மஸ் ஹாலிடேஸ்க்கும் வர முடியாது. ஒரு கம்பெனியில் ட்ரைனிங்க்கு கேட்டு இருந்தேன் அது கிடைச்சிருச்சு. சோ அதுவும் முடிச்சுட்டு பொங்கலுக்கு தான் வருவேன்" சோகமாக சொன்னாள்.

"நீ படிப்ப பாரு சௌந்தர்யா. ஒன்னும் பிரச்சனை இல்ல. பொங்களுக்கே வா".

"மாமா உங்க வைஃப் எப்படி இருக்காங்க" கேட்க

"அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க"

"என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டீங்க போல"

"என்னாலதான் கல்யாணத்துக்கு வர முடியவில்லை" சொன்னவள்

"இந்த ஸ்ரீமதியை பாருங்க மாமா கல்யாண போட்டோஸ் எல்லாம் அனுப்ப சொன்னேன் அனுப்பவே இல்ல. நான் போன் பண்ணாலும் எடுக்கல"

"அவளுக்கும் இது ப்ராஜெக்ட் டைம் இல்ல அதனால பிஸியா இருந்திருப்பா" தங்கைக்காக பேசினான்.

"அதானே அவள நீங்க எப்ப விட்டுக் கொடுத்து இருக்கீங்க"

அதில் வாய்விட்டு சிரித்தவன் "பொங்கலுக்கு வழக்கம் போல நம்ம ஊருக்கு போய் கொண்டாடலாம் அப்ப வந்து எல்லாத்தையும் பாரு"

"ஆமாமாம் நேர்ல வந்து உங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்" மிரட்டுவது போல் சொல்லி வைத்து விட்டாள்.

ஒன்றும் சொல்லாதவன் அவளை கீழே அழைத்துச் சென்றான்.

அவனைப் பொறுத்தவரையில் சில விஷயங்கள் வாழ்ந்து பார்க்கும் பொழுது தான் புரியும்.
முக்கியமாக நம்பிக்கை சார்ந்த விஷயம் வாய் வார்த்தையாக அல்லாமல், வாழ்தலில் புரிந்து கொள்ள வேண்டிய உணர்வு என்று நினைத்து நினைப்பவன்.

ஆனால் அவளோ மனிதர்களிடம் அவ்வளவாக பழக்கப்படாதவள். அப்படி இருக்கையில் இந்த நுண்ணிய உணர்வுகள் அவளுக்கு பிடிப்படுமா என்ன.

காதலும் நம்பிக்கையும் சொல்லி புரிய வைக்க முடியாது அதனை மனதால் உணர வேண்டும். எப்பொழுது உணர்வாள் திரிபுரசுந்தரி.

அவர்கள் கீழே செல்ல.
கௌரியும் ஸ்ரீமதியும் சுந்தரியின் முகத்தையே பார்த்தனர்.

அதனை கண்ட உதய் அவர்களை பார்வையால் எச்சரித்தான் எதுவும் கேட்காதீர்கள் என்று.

பின் கௌரி உணவு உண்ண அழைத்தார். "மணி எத்தனை ஆயிடுச்சா" என்றபடி சாப்பிட உட்கார்ந்தான்.

அனைவரும் உணவு உண்கையில், "ஸ்ரீமதி சூப்பரா சமைக்கிறீங்க" பாராட்டினாள் சுந்தரி.

"தேங்க்ஸ் அண்ணி" என்றவள்.

"என் பிரண்ட்ஸ் எல்லாம் டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்ஸா வலம் வராங்க. நான் இப்படி இருக்கிறதுக்கு என்ன கிண்டல் பண்ணுவாங்க" சிரித்தாள்.

ககௌரியோ "அது என்ன டாடிஸ் லிட்டில் பிரின்சஸ். சாப்பிட்டா சமைக்கவும் கத்துக்கணும் தானே இல்ல அட்லீஸ்ட் சமைக்கிறதுக்கு ஹெல்ப் ஆவது பண்ணனும். ஒண்ணுமே செய்யாம ஒப்பேத்தறதுக்கு இந்த பேரா" கௌரி பதிலாக சொன்னார்.

அவர்களது பேச்சில் சுந்தரி இயல்பானாள்.

உதயசந்திரன் சௌந்தர்யா பொங்கலுக்கு வருவதை பற்றி கூறினான்.

உதயும் சுந்தரியும் சாப்பிட்டவற்றை எடுத்து வைத்து விட்டு வர, அனைவரும் உறங்கச் சென்றனர்.

சுந்தரி உதய சந்திரனின் கைகளுக்குள் உறங்க. பாவம் அவனுக்கு தான் உறக்கம் பறிபோனது அவளை எண்ணி.

அம்மா வேணும் சந்துரு என்ற வார்த்தையில் சிதறிவிட்டான்.

அவள் நன்றாக உறங்கவே தனது அலைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

"டேய் பிரணவ் நான் கேட்ட விஷயம் என்ன ஆச்சுடா" ரகசியமாய் கேட்டான்.

"அவ்வளவு ஈஸியா மத்தவங்க விஷயம் தெரிஞ்சுக்க முடியாதுடா. போலீஸா இருந்தாலும் நான் வேற டிஸ்ட்ரிக்ட். எனக்கு த்ரீ டேஸ் டைம் கொடு நான் முழு டீடைல் சொல்றேன். என் வைஃப் டெலிவரி நாலாவது குழந்தை பிறக்கப் போகுது" என்க

"கங்கிராஜுலேசன் டா மச்சி யூ மேட் இட்" உற்சாகத்தில் கூவினான்.

அவனது கத்தலில் விழித்துக் கொண்ட சுந்தரி "தூங்குங்க சந்துரு" முனகியவாறு அவனது வெற்று மார்பில் முத்தமிட்டாள்.

சர்வமும் ஒடுங்கியவனாய் உறைந்துப் போனான் கிள்ளையவளின் ஈர முத்தத்தில்.

 
அத்தியாயம் 12:-

விடியலில் முதலில் கண்விழித்தான் உதயச்சந்திரன். தன் மீது மொத்தமாய் கவிழ்ந்து கிடக்கும் மனைவியை பார்த்தவனுக்கு மோகம் துளிர்விட்டது.

கையையும் காலையும் தன் மீது போட்டுக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்து தூங்கும் அவளது ஸ்பரிசம் அவனுக்கு போதை ஏற்றியது.

இரவு அவளது ஈர முத்தத்தில் கிறங்கியவன், அவளது தளிர்க் கரங்களை எடுத்து தன் நெஞ்சை நீவி விட்டவாறு தூங்கிப் போயிருந்தான்.

இப்பொழுது விடியலிலும் அவளது இந்த செயலில் மேலும் அவஸ்தையுற்றான் என்றே சொல்ல வேண்டும்.

நன்றாக அவளை கட்டிலில் கிடத்தியவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வெகுவாக சிரமப்பட்டான்.

மெல்ல எழுந்தவன் குளிர் காற்று முகத்தில் மோதும்படி பால்கனியில் கைகட்டி நின்று உதிக்கும் சூரியனை பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த நிமிடமே அவளுடன் இரண்டற கலந்து விட பேராவல் எழுந்தாலும் ஏதோ ஒன்று அவனை தடுத்தது தனது முத்தத்தில் லையித்து போகும் அவள், பதிலுக்கு ஒருமுறையேணும் தனது அந்த செயலையை அவள் கையில் எடுத்தால் என்ன என்று தோன்றியது.

சுந்தரி போன்ற பெண்கள், பெரும்பான்மையாக தனித்து இருக்கவே விரும்பும் தனிமை விரும்பிகள்.

அவர்களது மனதிற்குள்ளும் தனிமைக்குள்ளும் அவ்வளவு எளிதாக சென்று விட முடியாது.
அத்தகைய அவளது தனிமையின் தாழ் திறந்து மனதில் ஊடுருவவே நினைத்தான்.

தன்னை பிறரிடம் அடையாளப்படுத்திக் கொள்ளவே தயங்கும் சுந்தரியின் மனதிற்கு நெருக்கமானவனாக மாறவே விருப்பம் முதலில் அவனுக்கு.
அவள் வளர்ந்த விதமும் அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அப்படிப்பட்டது.

அவளது தனிமையில் தான் முழுவதுமாக நிறைந்திருந்தால் அதுவே தனது காதல் பூரணத்துவம் பெற்றது போலாகும். அப்போது அவனுக்கு அவளை எடுத்துக் கொள்ள, எந்தவித தயக்கமும் இருக்காது.

இவற்றையெல்லாம் எண்ணியவாறு நின்றருந்தவனை தொட்டது சில்லென்ற அவளது பூங்கரங்கள்.

அவள் புறமாக திரும்பியவன் "குட் மார்னிங் பேபி" என்றான்.

திடுக்கிட்டவள் என்ன குட் மார்னிங் இப்படி சொல்றாரு நினைத்த படி திரு திருவென விழித்தாள்.

"குட் மார்னிங் சந்துரு" சொன்னவள் அடுத்து என்ன என்பது போல் பார்க்க.

அவன் அறையின் உள்ளே நுழைந்து கட்டிலில் அமர்ந்தவாறு அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்ன பேபி எதுவும் வேண்டுமா" அவன் அருகில் அவள் வரவே கேட்டான்.

"ஒன்னுமில்ல சந்துரு குட் மார்னிங் சொன்னேன்" என்றாள் மீண்டும்.

தன்னவளை தெரியாதவனா அவன். நாவிடுக்கில் சிரிப்பை மறைத்து கொண்டு "அதான் அப்பவே சொல்லிட்டேனே பேபி குட் மார்னிங். ரெப்பிரஷ் ஆகிட்டு வா கீழே போய் டீ சாப்பிடலாம்".

"இல்ல அது வந்து" வார்த்தைகள் வராது தடுமாறினாள்.

அலைபேசியை காதில் வைத்து அவளை கவணிக்காதவன் போல யாருடனோ பேச ஆரம்பித்தான்.

சில நொடிகள் அவனைப் பார்த்தவள், விலகி செல்ல எத்தனிக்கும் வேளை அவனது கரங்களுக்குள் சிறைப்பட்டாள்.

"ஹே பேபி ஒரு முத்தத்துக்கு எதுக்கு இவ்வளவு சீன் நீ தரலாமில்ல" காதோரம் சொல்ல

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே" என்றாள் சின்ன குரலில்.

"பேபி நான் உன்னோட கணவன் தானே என்கிட்ட எந்த கூச்சமும் தயக்கமும் வேண்டாம் டா. அதுவும் இந்த விஷயத்தில உன்னோட விருப்பம் தான் எனக்கு முக்கியம்"

அவளை தன்னை விட்டு விலகியவன் மஞ்சத்தில் கிடத்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது கண்களில் தெரிந்த மையலில் காதோரம் சிவந்து போனாள்.

அவளது முகத்தை அணு அணுவாக ரசித்தவன் அவளது கழுத்தில் புறங்கையால் வருட கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளை நோக்கி குனிந்தவன் கழுத்தை சுற்றி முத்தாரமாய் முத்தங்கள் பதித்தான்.

எப்பொழுதுமே ஒற்றை முத்தத்தில் விலகுபவன் இன்று தொடர் முத்தங்களால் ஆக்கிரமிக்க மயக்க நிலைக்கே சென்றாள்.

பெண்ணவளது நுண் உணர்வுகளை தட்டி எழுப்பினான் உதயச்சந்திரன்.

அவனால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உணர்வுகளை கையாள தெரியாமல், எதிர்வினை ஆற்ற முடியாது திண்டாடினாள்.

அவன் மட்டும் என்னவாம் அவளது மென் ஸ்பரிசத்தில் பித்தாகி இன்னும்கூட தொலைந்து போனான்.

ஸ்ரீமதி கதவை தட்டவே இருவரும் தன்னிலைக்கு வந்தனர்.

தன்னைப் பார்க்க சங்கோஜப்பட்டு முகத்தை திருப்பிக் கொண்டவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவசரமாக இதழில் இதழ் பதித்து விலகினான்.

"நான் என்னன்னு பார்க்கிறேன் பேபி" விலகவே சட்டென எழுந்து குளியல் அறைக்குள் மறைந்தாள்.

கதவை திறக்கவே ஸ்ரீமதி "அண்ணா அண்ணியை பார்க்க மதர் வந்திருக்காங்க" என்றாள்.

அங்கு வரவேற்பு அறையில் சந்தன நிற சேலையில் தீட்சண்யமான கண்களுடன் கருணையே உருவாக அமர்ந்திருந்தார் மதர் ஜெனிதா மேரி.

மதர் அழைத்தபடி ஓடியவள் மண்டியிட்டு அவரது கால் அருகினில் அமர்ந்தாள்.

தன்னிடம் வந்த நாள் முதலாய் அவளது சிறு பிராயத்தில் இருந்து அவள் செய்யும் இந்த செயலை பார்த்தவர், இதழ் பிரித்து சிரித்து, நெற்றியில் சிலுவை குறியீட்டு "காட் பிளஸ் யூ மை சைல்ட்" ஆசீர்வதித்தார்.

"எப்படிம்மா இருக்க"

"நல்லா இருக்கேன் மதர்" சொன்னவள் "மதர் டீ போட்டு தரேன் நீங்க கண்டிப்பா குடிக்கணும் இதோ வரேன்" துள்ளி ஓடினாள்.

உதய சந்திரனின் புறம் திரும்பி "இப்போ அவளோட முகத்தில் ஒரு தெளிவு பாக்குறேன் உதய். முன்பு இருந்த வெறுமை இப்ப முகத்தில் இல்ல. சதா எதையாவது யோசிச்சிட்டு இருக்குற அந்த பாவனை அவகிட்ட இல்ல. பன்னிரண்டு வயசு சிறுமியா நான் பார்த்த சுந்தரி ரொம்பவும் அமைதி அழுத்தம். உங்ககிட்ட வந்ததுக்கப்புறம் அவளோட சிறகுகள் விரிய ஆரம்பிச்சிருக்கு உதய். எனக்கு இந்த வேறுபாடு நல்லா தெரியுது" சொன்னார் மதர்.

ஆமோதிபாய் தலையை அசைத்தான் உதயச்சந்திரன்.

"அம்மா உங்கள நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சுந்தரி உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கிட்டிங்க. அவள ரொம்ப அன்பா கவனிச்சிக்கிறீங்க. தெரியாததை சொல்லி தறீங்க. சுந்தரி ரொம்பவே கொடுத்து வெச்ச பொண்ணு இந்த விஷயத்துல" சொன்னார் கௌரிடம்.

கௌரி ஒரு புன்னகையை சிந்தினார்.

சுந்தரி டீ எடுத்து வரவே அதைப் பருகியவர் "அருமையா இருக்கு சுந்தரிம்மா. நீ ரொம்பவே மாறிட்ட உன்னை இப்படி பார்க்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் மை சைல்ட்". அவளது தலையில் தன் வல கரத்தை வைத்து வாழ்த்தினார்.

"மதர் அத்த எனக்கு சமைக்க எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க" பூரிப்பாய் சொல்ல

"ஒரு நாள் கண்டிப்பா உன்னுடைய சமையல நான் சாப்பிடவேன் சுந்தரி. கோவா போறேன் தேவாலயங்களை தரிசிக்க. திரும்பி வர கொஞ்ச நாள் ஆகும் சுந்தரி". கொண்டு வந்திருந்த பரிசை தம்பதிகளுக்கு கொடுத்தார்.

தன்னை வழியனுப்ப வந்தவர்களை பார்த்து "உதய் சுந்தரிக்கு எதுவும் தெரியலன பக்குவமா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா" சொன்னவர்

சுந்தரியை பார்த்து "மை சைல்ட் உதய் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை. அவர பரிபூரணமா நம்பலாம் நல்லபடியா வாழனும் சரியாம்மா" அறிவுறுத்தி விடைபெற்று சென்றார்.

அவரைப் பார்த்த படியே நின்றிருந்த சுந்தரி உதயின் கரத்தை இறுக பற்றி

"மதர் மட்டும் என் லைஃப்ல வரலைன்னா என்னோட வாழ்க்கை என்னவாகிருக்கும்ன்னு தெரியல சந்துரு. தலைக்கு மேல கூரையும் சாப்பாடும் படிப்பும் மதர் எனக்கு கொடுத்தது". பார்வையை கண்ணீர் மறைத்தது.

"ஒரு நாள் ரொம்ப துவண்டு போய் சாகுற அளவுக்கு யோசிச்சிட்டேன் சந்துரு".

அவளது வார்த்தைகளில் 'என்ன வார்த்தை பேசுரா இவ' அவளையே வெறித்துப் பார்த்தான்.

அவனது பார்வையை உணர்ந்தார் போல் தலையை ஆமென்று ஆட்டியபடி "நீங்க எல்லாம் ரொம்பவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கீங்க. ஆனால் நாங்க அப்படி இல்ல".

மேலும் அன்றைய தினத்திற்கு மீண்டும் சென்றது போல் அவள் பற்றிய கையின் இறுக்கம் கூடியது.

"அன்னிக்கு நான் பார்த்த உலகம் ரொம்ப மோசமானது சந்துரு. என்னை நிர்வாணமா நிக்க வச்சது போல அவமானமாவும் அருவருப்பாவும் உணர்ந்தேன்".
தன்னை மறந்து சொல்லலானாள்.

'என்ன சொல்றா இவ' நடுங்கிதான் போனான். பேசாம நவீனுக்கு போன் போட்டு கேட்கலாமா இந்த எண்ணம் தோன்றவே.

என் பொண்டாட்டி என் கிட்ட சொல்லாத நான் அவன் கிட்ட கேட்டேன்னா எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே சோர்ந்து போனான் உதயச்சந்திரன்.

நேரமாகவும் தயாராகி உணவு உண்டு தங்களது அலுவலை பார்க்க கிளம்பினர் சுந்தரியும் உதயச்சந்திரனும்.

தினமும் காலையில் எழுவதும் உதய் அவளுக்கு குட் மார்னிங் சொல்லுவதும் வாடிக்கையானது.

இப்பொழுது எல்லாம் அவனது குட்மார்னிங் இல்லாமல் இவளுக்கு நாள் விடிவதில்லை என்றே சொல்ல வேண்டும்.

அவனைவிட அந்த குட் மார்னிங் கிஸ்ஸை அவளே பெரிதும் விரும்பினாள்.

சில நேரங்களில் அவனது முத்தத்திற்கு இசைந்து கொடுப்பவளை கண்டு பித்து கொள்வான் உதயச்சந்திரன்.

புன்னகையுடன் குட் மார்னிங் சொல்லி தன் அருகில் நிற்பவளை கண்டு மோகத்தை விட காதலே பெருகிற்று அவனுக்கு.

அந்த குட் மார்னிங் கிஸை பலவிதங்களில் அவளுக்கு பயிற்றுவித்தான்.

அடுத்த நிலை என்ன என்ற கேள்வி அவளது கண்களில் தொக்கி நிற்கும் போதெல்லாம் அவளை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு கதைபேசி சிரிக்க வைப்பான்.

பேசவா இவ்வுலகில் சங்கதிகள் இல்லை. சுருங்க சொன்னால் காதலிக்க கற்றுக் கொடுத்தான்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அனைவரும் இல்லத்திற்கு உணவளிக்க சென்றார்கள். மேகலாவும் சாவித்திரியும் கூட வந்திருந்தனர்.

வண்டியில் கொண்டு வந்திருந்த உணவு வகைகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் உணவு கூடத்தில் அனைவரும் ஒன்று கூட சாப்பாடு பரிமாறினார்கள், இல்லத்து ஆட்கள். உதயசந்திரன் சுந்தரியும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

மேகலாவும் சாவித்திரியும் இதனை ஒருவித அலட்சிய பாவனை உடன் கண்டனர்.

தன் அருகில் எதேச்சையாக அந்த நன்றி சிறுவர் சிறுமிகளை கூட விரட்டினார்கள்.

அந்த பக்கம் வந்த சுந்தரி அதனை கண்டு கடுப்பானாள்.
அவர்களின் அருகில் சென்று அருவருப்பாய் பார்த்தவள் "நீங்க எல்லாம் என்ன பெரிய மனுஷங்க இவ்வளவு கேவலமா நடந்துக்குறீங்க" திட்டினாள்.

பின்னர் நவீன் அழைக்கவே சற்று தள்ளி அந்த மரத்தின் நிழலில் நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.

அப்பொழுது அங்கு வந்தான் ஒருவன் சுந்தரியை புருவம் சுருக்கி பார்த்தவன்,

"ஏய் நீயா" என்றபடி அருகில் சென்று

"அன்றைக்கு பார்த்ததை விட இப்போ சும்மா தள தளனு தான் இருக்கே. ரொம்ப வருஷம் ஆனாலும் உன்னை அவ்வளவு ஈசியா மறக்க முடியல. ரெட்ட ஜடை போட்டுட்டு யாராச்சும் பொண்ணுங்கள பாத்தா உன் நினைப்புதான் எனக்கு ஜவ்வுனு ஏறும். அன்னைக்கு மட்டும் நீ ஒத்துக்கிட்டு இருந்திருந்தால் உன்னை நான் சுகபோகமா வச்சுட்டு இருந்திருப்பேன். நீதான் கைய கடிச்சுட்டு ஓடிட்டே" பேசிக்கொண்டே போனான் தன் பின்னே நிழல் ஆடுவதை உணராமல்.

மேலும் "கல்யாணம் வேற பண்ணிக்கிட்ட போல அந்த விஷயம் எல்லாம் எப்படி நல்லா கவனிக்கிறானா உன் புருஷன். இல்லன்னா சொல்லு நான் வரேன்" சொல்லி முடிக்கவில்லை காலில் கிடந்ததை எடுத்து அறைந்துவிட்டாள்.

திரிபுரசுந்தரி பார்வையில் எரித்துவிடுவது போல் உக்ரமாய் நின்று இருந்தாள்.

பின்னால் நின்றிருந்த உதயசந்திரன் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சுந்தரியின் சென்று கையில் இருந்த செருப்பை வாங்கி கீழே போட்டு அணிய வைத்தான்.

"சந்துரு" அழைத்தவளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க

"இவன் வலது கை இடது கால் இருக்க கூடாது" தீவிரமான குரலில் சொல்லவே ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான்.

பின்பு "அவ்வளவு தானே" என்றவன் தனது காரியதரிசியை அழைத்து அந்த பொறுக்கியை பிடித்து தந்தான்.

சுந்தரியிடம் எந்த விவரமும் கேட்கவில்லை அவளது மனநிலையும் சூழ்நிலையும் கருதி.

தன்னவனின் அனுசரணையான செயலில் மேலும் மேலும் அவன் மீது காதல் பெருகிற்று அவளுக்கு.

உண்டு முடித்துவிட்ட சிறுவர்களுடன் சிறிது நேரம் விளையாடினார்கள் அதில் மனம் சற்று மட்டுபட்டது சுந்தரிக்கு.

எது எப்படி இருந்தாலும் அன்றைய தினம் நிறைவாகவே சென்றது உதயசந்திரன் குடும்பத்தினருக்கு.

இப்பொழுதெல்லாம் காலை உணவு பெரும்பாலும் சுந்தரியே செய்வாள் சமையலில் கொஞ்சம் முன்னேறி இருக்கிறாள்.


சுந்தரியின் நாட்கள் அவனது முத்தத்தில் தொடங்கி அவனது அனைப்பில் நிறைவுற்றது.
 
Last edited:
அத்தியாயம் 13:-

சுந்தரிக்கு நாட்கள் அழகாக சென்றது. காலையில் எழுபவள் ஸ்ரீ மற்றும் கௌரியுடன் சேர்ந்து கோலம் போடுவாள். கோலம் நன்றாக வந்ததோ என்னவோ அவர்களது உறவு நன்றாக இருந்தது. அந்த சிறு கூட்டில் தானும் ஒரு குயிலாய் பாடி திரிந்தாள்.

அன்று மாலை வரவேற்பு அறையில் அமர்ந்து அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேளை.

"வைகுண்ட ஏகாதேசி வரப்போகுது உதய், ஸ்ரீரங்கம் போகணும். உங்க அப்பா இருந்தப்ப போனது" என்க

"அதுக்கு என்னம்மா போயிட்டு வரலாம்" என்றவனின் பார்வை பேச்சு கௌரியுடன் இருந்தாலும் பார்வை தன்னவளையே நோட்டம் விட்டது.

மடியில் கைகளை கோர்த்து சுவரை வெறித்தப்படி பார்த்திருந்தவளது கண்களில் அவ்வளவு வலி.

ஏதோ தோன்ற அங்கு சுவரில் மாட்டி வைத்திருந்த காலண்டரை பார்த்து விட்டு கண்களை இறுக மூடி கொண்டவளது எண்ணங்களில் ஏதேதோ பிம்பங்கள் கலங்களாக கண்டாள் சுந்தரி.

ஒரு பெருமூச்சுடன் அதனை கண்டவன் "சுந்தரிம்மா தண்ணி எடுத்துட்டு வா" அவளை அவளது எண்ணங்களில் இருந்து விடுவித்தான்.

மெல்ல நடந்தால் உணவு மேஜையை நோக்கி. "உதய் சுந்தரி வருவா தானேப்பா" கௌரி கேட்கவே,

"வருவா மா.அவளுக்கு வேற வழி இல்ல வரமாட்டேன்னு சொன்னா என்னன்னு கேட்போம் பிறகு அவளது கடந்த காலத்து சொல்லனும் தானே. மேடம் அவ்ளோ சீக்கிரம் இறங்கி வர மாட்டாங்களே" ஒளிவு மறைவின்றி பேசாத தன்னவளது செயலை அறவே வெறுத்தான்.

தண்ணீர் எடுத்து வந்தவளை கண்டு "ரூமுக்கு போய்ட்டாமா" என்ற கௌரியிடம் தலையசைத்து அறைக்குச் சென்றாள்.

பால்கனியில் அமர்ந்திருந்த அவனிடம் தண்ணீரை கொடுத்துவிட்டு கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள் சுந்தரி.

அவளைப் பார்த்தவன் கைப்பற்றி அருகில் அமர்த்தி "நீ ஸ்ரீரங்கம் போய் இருக்கியா சுந்தரி. அம்மாக்கு ரொம்ப பிடிச்ச கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். ஒவ்வொரு வைகுண்ட ஏகாதேசிக்கும் எப்படியாவது போயிடுவோம். குடும்பமா போனது அப்பா இருந்தப்ப. அதான் இப்ப திரும்ப போகணும்னு அம்மா ஆசைப்படுறாங்க" என்றவன்

அவளது கண்களுக்குள் ஊடுருவி "உனக்கு ஏதாவது சொல்லனுமா பேபி" முன்னர் ஒருமுறை கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டான் உதய்.

"சேச்சே எனக்கு ஸ்ரீரங்கம் தெரியாது சந்துரு நான் இங்கே தானே வளர்ந்தேன்" என்றாள் அவசரமாக.

பேபி எப்போ தாண்டி எல்லாத்தையும் சொல்லுவ மனதோடு கூறிக் கொண்டான்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க அன்று உதயச்சந்திரன் வீட்டிற்கு வரும் பொழுது கௌரி கோவிலுக்கும், ஸ்ரீமதி தோழியை பார்க்கவும் சென்று இருந்தனர்.

தாழிடாத கதவை திறக்க, உடலைக் குறுக்கியபடி தரையில் படுத்து இருந்தாள் சுந்தரி.

உறங்கவில்லை என்று தெரிந்திருந்தாலும் கண்களை இறுக மூடி இருந்தாள்.

வலியை அடக்கி கொண்டிருப்பது உதடுகளை அழுத்த பற்றி கொண்டிருந்த பற்களை பார்த்து தெரிந்தது.

"சுந்தரிம்மா" விரைந்து அவள் அருகில் சென்று அமர்ந்தான். பதறி எழும்பினவளை தூக்கி தோளில் சாய்த்துக் கொண்டு காய்ச்சலோ புறங்கையை வைத்து பரிசோதித்தான்.

அவளோ அவனை விட்டு விலகி தள்ளி அமர்ந்து கொண்டாள்.

"பீரியட்ஸ்" என்று சொன்னாள். உதடு அழுகையில் பிதுங்கின.

"ஹே என்னம்மா இதெல்லாம். அதுக்காக அழாதடா. ரொம்ப வயிறு வலிக்குதா கண்ணம்மா"

"ஆமாம் சந்துரு" உதடு துடிக்க கூறினாள். "அதுக்கு ஏன் கீழ படுத்து இருக்கேன் பெட்ல படுக்கலாம்லடா"

"இல்ல சந்துரு முதுகு சில நேரம் வலிக்கும். இதுதான் எனக்கு வசதி" சொன்னவளை விட்டு விலகியவன் சமையலறை சென்று முருங்கை இலைகளை கொண்டு சூப் தயாரித்து எடுத்து வந்து அவளிடம் தந்தான்.

கேள்வியாக பார்த்தவளிடம் அம்மா "ஸ்ரீக்கு செஞ்சு தருவாங்க பேபி இந்த மாதிரி வலியெல்லாம் சரியாகும்டா".
கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

அவன் துடைத்த நெற்றியில் முத்தமிட

"முதல் முறையா இந்த மாதிரி ஆகும்போது சாகப் போறேன்னு பயந்துட்டேன் சந்துரு. பிளட் வரவும் வயித்துல கேன்சர் போல நினைச்சு நமக்கு காய்ச்சல் வந்தாலே பார்க்க ஆள் இல்ல இது வேறயான்னு தான் தோணுச்சு. வலி இல்லாம சாகனும் கடவுளின் வேண்டிக்கிட்டேன்"

அவள் பேசவே இவனுக்கு என்னவோ செய்தது.

"அப்புறம் தான் ஹோம்ல இருக்க ஒரு அக்கா தான் பாத்துட்டு மதர் கிட்ட சொன்னாங்க. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு நவீன் பாட்டிக்கு தெரிஞ்ச ஒரே திட்டு ஏன் சொல்லலைன்னு. நவீன் கிட்ட எப்படி சொல்லச் சந்துரு"

"எனக்கு நாப்கின் யூஸ் பண்றது கூட தெரியாது காலேஜ் வந்த அப்புறம் ஒரு பொண்ணு சொல்லி தான் தெரியும் எப்படி வளர்ந்து இருக்கிறேன் பாத்தீங்களா சந்துரு. இப்ப நெனச்சா சிரிப்பு தான் வருது".

அவள் என்னவோ சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். ஆனால் அவனுக்கு தான் வலித்தது.

சூப் குடித்த கிண்ணங்களை எடுத்துச் சென்றவன் மனதில் ஸ்ரீமதி பெரியவள் ஆனபோது நடந்த விசேஷங்களும் அளிக்கப்பட்ட உணவுகளும் மனதிற்கு வந்து போனது.

ஏன் இப்போது கூட வீட்டில் இருக்கும் நாட்களில் ஸ்ரீமதிக்கு முழு ஓய்வும் முழுக்க சத்தான ஆகாரமும் தரும் அன்னையை நினைத்துக் கொண்டான்.

அதே நேரம் தன்னவளது தாயின் மேல் அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஒரு நொடி நிதானித்திருந்தால் சுந்தரிக்கு இந்த வாழ்வு அவசியமற்றதன்றோ நினைத்து, நினைத்து மாய்ந்து போனான்.

அதுவும் மூன்றாம் மனிதரிடம் இது பற்றி பேச அந்த வயதில் அவளுக்கு எவ்வளவு சங்கடமாய் இருந்திருக்கும்.

அவனுக்கு தெரியும் கண்டிப்பாக இந்த மாதிரி நேரங்களில் அன்னையின் மடிசாய ஏங்குவார்கள் தானே. அதுவும் முதல் முறை என்கையில் தன்னவளது பரிதவிப்பும் ஏக்கமும் அவனுக்கு சொல்லாமலே புரிந்தது.

திருமணத்தின் தாத்பரியமே மனதால் மற்றவரை உணர்வது தானே உதயசந்திரனும் உணர்ந்து கொண்டான் தன் மனையாளை.

மீண்டும் அறைக்கு வந்தவன் கண்டது நீர்சலனமாய் உறங்கும் மனைவியை தான்.

ஒரு பெருமூச்சுடன் அவளுக்கு போர்த்தியவன் குளியல் அறைக்கு சென்றான்.
அங்கு சுந்தரி பள்ளிக்கு அணிந்து சென்றிருந்த துணிகள் கீழே கிடந்தன அதனைத் துவைத்து கொடியில் உலர்த்தியவன் இரவு உணவு தயாரிக்க சென்றான்.

சட்னிக்கு தாளித்துக் கொட்டியவனின் வயிற்றை சுற்றி தன் கரங்களால் கட்டிக் கொண்டாள் நங்கை.

"என்னடா எழுந்துட்டியா" லேசாக உடலை வளைத்து அவளது தலையுடன் தன் தலையை வைத்து முட்டியவன் கேட்டான்.

"சந்துரு சாரி" என்க.

அடுப்பை அணைத்து அவள்புறம் திரும்பியவன் கைகட்டி கூர்மையாக பார்த்தான். ம் சொல்லு என்பது போல் இருந்தது.

அதில் பார்வையை திருப்பியவள் "என் டிரஸ் துவச்சதுக்கு" என்றாள்.

"ஓகே" என்றவனின் கண்கள் கோவத்தில் சிவந்தன.

"இல்ல சந்துரு அது வந்து டிரஸ்ல' மேலும் சொல்ல வந்தவளை இதழில் கை வைத்து தடுத்தவன்
"அங்க போய் உட்காருங்க மேடம்" சிடுசிடுத்தபடி உணவு மேஜையை கை காட்டினான்.

"உரிமையா ஒன்னு செஞ்சா அனுபவிக்கணும் அத விட்டுட்டு வந்துட்டா சாரி பூரினுட்டு" சத்தமாகவே முணுமுணுத்தான்.

அதனைக் கேட்ட அவளது கண்கள் கலங்கினாலும் இதழ்கள் புன்னகையை சிந்தின. தன்னவனது தன்னிகரற்ற நேசத்தை பிரதிபலித்தன அவளது இதழ்கள் பெருமிதத்தில்.

அமர்ந்திருந்த அவளின் முன் சிகப்பு அரிசி கஞ்சியும் நறுக்கிய பழங்களும் வைக்கப்பட்டன.

அந்த நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தனர் கௌரியும் ஸ்ரீமதியும்.

சுந்தரி கஞ்சி குடிப்பதை கண்டு கேட்டவரிடம் விஷயத்தை கூற "போன் பண்ணி சொல்லிருக்கலாமேடா சீக்கிரம் வந்திருப்பேனே"
சுந்தரியின் தலையை வருடியவர் "இன்னும் வயிறு வலிக்குதா சுந்தரிம்மா" கேட்டார்.

"இல்ல அத்தை வலி நல்லாவே குறைஞ்சிடுச்சு அவரு சூப் வைத்து தந்தார்" காதல் பார்வை ஒன்றே வீசினால் கணவனை நோக்கி.

அவளது விழி மொழியில் அசந்து போனான். 'அச்சோ அம்மாவும் ஸ்ரீவும் இருக்கும்போது இப்படி பார்த்து வைக்கிறாளே' செல்லமாய் மனதிற்குள் சிணுங்கினான்.

அனைவரும் உண்டு உறங்க சென்றனர். உதயசந்திரன் சுந்தரிக்கு அருகில் படுத்துக் கொண்டான். அவள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
அடுத்து வந்த ஐந்து நாட்களும் சுந்தரியை கண்களுக்குள் வைத்து கவனித்துக் கொண்டார்கள்.

வைகுண்ட ஏகாதேசியன்று பரமபத வாசல் திறப்பு விழாவை தொலைக்காட்சியில் கண்ட மகிழ்ந்தனர் உதயச்சந்திரனின் குடும்பத்தினர்.

பத்து நாள் நிகழ்வில் மூன்றாம் நாள் கோவில் செல்ல ஏற்பாடு.
அதற்குள் உதயசந்திரன் தங்களது கோவை கிளைக்கு செல்ல வேண்டும் என்றான்.
வாரம் ஒரு முறை ஒவ்வொரு கிளைக்கும் சென்று பார்வையிடுவது அவனது வழக்கமாகும்.

விமானத்தில் சென்று இரவிற்குள் வந்துவிடுவான் பெரும்பாலும் தந்தையின் இறப்பிற்கு பிறகு அன்னையையும் தங்கையையும் தனித்திருக்க விடுவதில்லை.

அவன் வரும் வரை ஒரு செக்யூரிட்டியை கூடுதலாகவே அமர்ந்து விட்டு செல்வான். அன்றும் அவ்வாறே சென்று நள்ளிரவில் வீடு திரும்பினான்.

தங்களது அறைக்குள் நுழைந்தவன் கண்களுக்கு புதிதாய் தெரிந்தாள் மனைவி.

பின்னே அவனது சட்டையையும் ஒரு பாவடையையும் அணிந்து கொண்டு விடைத்தாளை திருத்திக் கொண்டு இருந்தாள் சுந்தரி.

அவனது அரவம் கேட்டு திரும்பியவள் "வந்துட்டீங்களா சந்துரு" கேட்டாள்.

ஒன்றும் சொல்லாமல் மேலிருந்து கீழ் அவளையே அழுத்தமாகப் பார்த்தான். ஆனால் உள்ளுக்குள் ஒரு பரவச உணர்வு.

அவனது பார்வையை முதலில் புரியாமல் பார்த்தவள் தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டாள்.

"அச்சோ அவர் டிரஸ் போட்டு இருக்கேன். அவர் வர்றதுக்குள்ள கழட்டி வைக்கணும்னு நினைச்சேன். கடவுளே!" முனகி கொண்டு தன் தலையை தட்டிக்கொண்டாள்.

"பேபி" மோகமாய் பிதற்றியவன் அவளை இறுக தழுவி கொண்டான்.

தனது ஆடை மீது தானே கோபம் கொண்டானோ என்னவோ ஆடையை தாண்டி அவளை தீண்ட விரல் சென்றது.

அவனது வேகத்தை தாளாதவள் "சந்துரு ப்ளீஸ்" சத்தம் வரவில்லை வார்த்தைகளில்.

இன்னும் இன்னும் அவளில் மூழ்கி திளைத்திட முனைந்தான்.

அவளுக்கு எப்படி அவனை கையால என்று தெரியவில்லை.

அவனது சிகைக்குள் கையை நுழைத்த தன்னிடம் இருந்து பிரித்தவள் "எனக்கு என்ன பண்ணனும் தெரியல சந்துரு" பாவமாய் சொன்னாள்.

"அச்சோ பேபி ஒன்னும் இல்லடா" என்றவன். 'டேய் அவளை படுத்தி எடுக்காதடா' தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, "நான் பிரஷ் ஆயிட்டு வரேன் பேபி" குளியல் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

வெளியே வந்தவனுக்கு சூடாக பால் கொண்டு வந்தாள் சுந்தரி. அவனது கண்களை பார்த்தவளுக்கு அது அவன் இயல்பாக இருப்பது போல தோன்றினாலும் லேசாக சிவந்திருந்தது.

பாலை அவனிடம் தந்துவிட்டு "சந்துரு..நான்..அது..வந்து" வார்த்தைகளை தேடினாள்.

பாலை அருந்திவிட்டு "தூங்கலாமா பேபி" சோர்வாக கேட்க.

தலையை உருட்டியவள் சென்று படுத்துக் கொண்டாள். விளக்கணைத்து அவள் அருகில் படுத்தவன் அவளை கையணைவில் வைத்து தலையை வருடி தூங்க வைத்தான்.

உரிமையாக அவன் சட்டையை அணிந்து கொண்டு படுத்திருந்தவளை கண்டு மனதில் நிம்மதி வந்தது. அவள் தனிமையில் தன்னை தேடியிருக்கிறளே, அதுவே முன்னேற்றம் தானே.

ஒரு நாள் சுந்தரியை நகை வடிவமைப்பதை காண அழைத்துச் சென்றான் உதயச்சந்திரன்.

பாரம்பரிய முறையில் தங்கத்தை உருக்கி அச்சல் வார்த்து செய்யும் முறையும், இயந்திரத்தில் தங்க கட்டிகளை வைத்து செய்யும் முறையையும் பார்த்தாள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பிரமிப்பை தந்தது. மேலும் ஜொலிக்கும் தன்மை கொண்ட ஒரு உலோகத்துக்கு இத்தனை மதிப்பா என ஆச்சரியப்பட்டாள்.

வெளியுலகம் தெரியாது வளர்ந்தவளது மனநிலை இப்படி ஆகவே இருந்தது உண்மையும் அதுதானே.

திருவரங்கத்தில் ரெங்கநாதரை தரிசிக்க சென்றனர் உதயசந்திரன் குடும்பத்தினர். திருச்சியை நெருங்கவே சொல்ல முடியாத துக்கம் நெஞ்சடைத்தது. பதட்டம் சூழ் கொண்டது. ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை போல உணர்ந்தாள்.

அவளது முகத்தில் வந்து போண உணர்வுகளை படித்தவன் அவளை தன் கைவளைவிலே வைத்துக் கொண்டான்.

சுந்தரியும் இம்மியளவும் அவனை விட்டு விலகவில்லை. கணடும்காணாமல் இருந்தார் கௌரி.

காவிரியில் கால் நனைத்து, அரங்கநாதனை தரிசித்துவிட்டு, அகிலாண்டேஸ்வரி கோவிலும் சென்று வீடு திரும்பினர்.

சுந்தரிக்கு இந்த பயணம் ஒரு தெளிவு தந்தது அது தன்னை பற்றி கணவனிடம் ஆதிஅந்தமாய் சொல்லிவிட வேண்டும் என்பதே.


உதயசந்திரன் சுந்தரி யிடம் ஒரு கவரை தர அதில் அந்தமான் செல்ல பயனசீட்டு இருந்தது.
 
அத்தியாயம் 14:-

ஸ்ரீரங்கத்தில் இருந்து வீடு வந்ததும் உதய் தங்களது கடைக்கு சென்று விட்டான்.


மாடி தோட்டத்தில் நின்றிருந்தாள் திருபுரசுந்தரி.

கணவனிடம் தன்னை பற்றி எப்படி கூறுவது, எங்கிருந்து ஆரம்பிப்பது, என்பதை யோசித்துக் கொண்டிருந்தாள்.

மனதிற்குள்ளே ஒரு ஒத்திகை ஓடிக்கொண்டிருந்தது. தனது தாய் தந்தையை பற்றி சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் பொழுது அவனது முகத்தில் வரும் அருவருப்பு உணர்வு, அனாதை பெண், ஹோமில் வளர்ந்தவள் என்ற ரீதியில் தன் மீது வந்த நேசம் மாறிவிடுமோ.

அப்படி அவன் மாறினால் எங்கு செல்ல, அடுத்து என்ன செய்ய. தன் தாய் மற்றும் தங்கையிடம் சொல்லி அவமானப் படுத்துவானோ. இல்லை கழுத்தைப் பிடித்த வெளியே தள்ளி விடுவானா.

முன்புபோல் உணவிற்கு கையேந்தும் நிலை இல்லை. தலைக்கு மேல் கூரையும் உண்டு. சுய சம்பாத்தியமும் இருக்கிறது.

ஆனால் இப்பொழுது கிடைத்த இந்த குடும்பம் அது தரும் சுகம், பாதுகாப்பு உணர்வும் இனி கிடைக்காதே.

எல்லாவற்றையும் விட திருமணத்திற்கு முன்பே ஏன் சொல்லவில்லை என்றும் மேலும் தான் ஏமாற்றியதாக அவர்கள் எண்ணினால் என்ன செய்யவது.

இவற்றையெல்லாம் எண்ணியவளுக்கு தன் மனாளனின் நினைவு வர தான் அவன் மீது கொண்டு இருக்கும் காதலும் சேர்ந்து நினைவுக்கு வந்தது.

இதய நரம்பு ஒன்று அறுபடும் உணர்வு அப்படியே தளர்ந்து தரையில் அமர்ந்து கொண்டாள்.

எவ்வளவு நேரமோ கண்களில் கண்ணீர் வழிந்து கண்ணம் தொட்டது. பித்து பிடித்தவளாய் கண்களில் வலியை சுமந்து செடிகளை வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்.

பாவம் பேதைக்கு தெரியவில்லை தன்னவன் ஆதிஅந்தமாய் தன்னை பற்றி அத்தனையும் தெரிந்தவன் என்பது. இத்தகைய நிலை தனக்கு ஒருபோதும் வராது என்பதும் புரியவில்லை.

மாறாக தான் தான் அவனுக்கு பிரிவை பரிசளிக்க போகிறோம் என்பது தெரிந்தால் என்ன செய்வாளோ.

நவீன் அவளது அலைபேசிக்கு அடித்து அடித்து ஓய்ந்து போனான்.

தோட்டத்தில் வந்த அமரும் கிளிகளின் கூச்சலில் தன் நினைவை கலைத்தாள்.

பொழுது சாயும் வேளை வரவை அலைபேசி எடுத்துக்கொண்டு கீழே செல்ல வேண்டி அதனை எடுத்து பார்க்க, அதில் நவீனின் அழைப்பு வரவே அவனுக்கு அழைத்து பேசினாள். மனதிற்கு ஒரு புத்துணர்வும் வந்தது.

நவீனிடம் பேசி விட்டு வைத்த அடுத்த நொடி தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

யாரென யோசித்தபடி அதனை ஏற்று காதில் வைத்தாள்.

"அம்மாடி சுந்தரி நான்தாம்மா அன்னைக்கு வந்தேனில்ல உன்னோட" ஆரம்பித்தவரின் பேச்சை இடைவெட்டி

"எனக்கு உங்களோட பேச எதுவும் இல்ல சார். நீங்க என் கணவருக்கு நண்பர்னா அது அவரோட எனக்கு இல்ல.

எப்பவுமே நான் வெறுக்கிற சிலர்ல நீங்களும் ஒருத்தர்" என்க

"இல்லமா அது உதய்" மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவரை எதுவும் பேசவிடாமல் அவளோ

"என்ன உதய், என்ன சார் அவர்கிட்ட என்ன பத்தி சொல்லப் போறீங்களா? சொல்லுங்க...நல்லா சொல்லுங்க. ஐ டோன்ட் கேர். இன்னொரு முறை எனக்கு போன் பண்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க சார்". கடுமையாக பேசி வைத்து விட்டாள்.

மனதில் இருந்த ஆத்திரம் அவளை கண்மண் தெரியாமல் கீழே ஓட வைத்தது.

தங்களது அறைக்குள் நுழைந்தவள் அவளை தேடி அறையை வட்டு வளியே வந்த உதயச்சந்திரன் மீது மோதிக் கொண்டாள்.

தன் மீது மோதியவளின் கைப்பற்றி நிறுத்தினான்.

மூச்சு வாங்க நின்றவளை ஆற்றுப்படுத்தி நீர் அருந்த வைத்து என்னவென்று கேட்க
"சந்துரு.....அது....நான்....நீங்க.....ஸ்ரீரங்கம்.....கோவில்....அங்க....அம்மா"

எப்படி எல்லாமோ சொல்ல வேண்டும் என்று எடுத்த பயிற்சி எடுத்த அவளின் முயற்சி அத்தனையும் வீணானது.
வார்த்தைகள் தந்தி அடிக்க, உதடு துடித்து, விழி நீர் கண்ணம் தாண்டி விழ தயாரானது.

நொடியில் அவளை அணைத்துக் கொண்டான்.

கைகள் முதுகை தட்டி கொடுக்க, தலையை வருடி சமாதானம் செய்தான்.

அவனது மனமோ "இந்த கஷ்டம் உனக்கு வேணாம் கண்ணம்மா. நீ எப்பவும் எதுவும் சொல்ல வேண்டாம். நானே உனக்கு எல்லாவும்மா இருப்பேன் டா" கூறிக்கொண்டது.

மெல்ல தன்னிலை மீண்டவள் அவனைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள். அவளது விழிகளில் முத்தமிட்டவன் கைகளில் அந்த கவரை திணித்தான்.

தனது கரங்களில் கவரை தந்தவனை ஏறிட்டுப் பார்த்தாள் சுந்தரி.

"பிரிச்சு பாரு"
அவள் பிரிக்க அதிலிருந்தது அந்தமான் செல்ல பயணச்சீட்டு.

அதில் விழி விரித்தவள் "நான் சும்மா அன்னைக்கு சொன்னேன் சந்துரு" என்றால் தடுமாறியபடி.

'அதுதான் எனக்கு தெரியுமே' மனதோடு சொல்லிக் கொண்டவன்.

"நீ சும்மா சொன்னாலும் அந்த இடத்துக்கு தான் நம்ம போக போறோம் பேபி".

"இன்னும் இரண்டு நாளில் கிளம்பனும் எல்லாம் பேக் பண்ணி வச்சுக்கோ".

சொல்லியவன் அவளிடம் துணிகள் அடங்கிய பையை தந்தான்.

"என்கிட்ட டிரஸ் எல்லாம் இருக்கு"

"என் மனைவிக்கு நான் வாங்கி தரேன் நீங்க என்ன மேடம் சொல்றது" கோபமாய் சொல்ல. அவளது இதழ்கள் மேலும் பேசாமல் ஒட்டிக்கொண்டன.

இரண்டு நாட்கள் சடுதியில் செல்ல.

இதோ விமானம் தரையிறங்க பயணப் பொதிகளை தள்ளிக் கொண்டு வெளியில் வந்தனர் உதயச்சந்திரனும் சுந்தரியும்.

தாங்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் வரவே தங்களது தேனிலவு பயணத்தை தொடர்ந்தனர்.

தங்கும் இடம் வரவே தனது மடியில் உறங்கும் மனைவியை எழுப்பினான்.

உறக்கம் கலைந்து விழித்தவள், தலை திருப்பி பார்க்க அங்கு குடில் போன்ற கட்டிடங்கள் பேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழி நடுவே இருந்தது.

நிறைய குடில்கள் அது போல் அமைக்கப்பட்டு வளைவு நெளிவாக பாதைகள் ஒவ்வொரு குடிலையும் இனைந்து சென்றடைந்தது.

"வாவ் சந்துரு சூப்பரா இருக்கு" குதூகளித்து சிறுமியாய் ஆர்ப்பரித்தாள்.

"ஆமாம் பேபி கீழ இறங்கு போய் பாக்கலாம்". தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கி கொள்ள அங்கிருந்த ஊழியர் ஒருவர் வந்து தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த குடிலின் சாவியையும் கொடுத்து சென்றார்.

குடிலை திறந்து உள்ளே நுழைந்தார்கள். தங்களது உடைமைகளை உள்ளே வைத்துவிட்டு ஒருமுறை குடிலை சுற்றி பார்த்தனர்.

சிறிய அறை, இருவர் படுத்து உறங்க கட்டில் மெத்தை, சிறிய மின் அடுப்பு அருகிலேயே கொஞ்சம் பாத்திரங்களும் சிறிய குளிர்சாதன பெட்டியில் சமைக்க தேவையான சில அத்தியாவசியமான பொருள்களும் இருந்தது.

"பாருங்களேன் சந்துரு இங்கே சமைச்சுக்கலாம் போல" வியப்பாய் சொன்னவளை கண்டு

"இல்ல பேபி. இங்கே நாம சமைக்க வரல. ஹனிமூன் கொண்டாட வந்திருக்கோம். சோ சமையல் கிடையாது. இங்க ரூம் சர்வீஸ்க்கு சொன்னாலே என்ன வேணுமோ தருவாங்க ஓகே பேபி" அவளது கன்னத்தில் தட்டினான்.

ஒரு பக்கம் கதவை திறந்து பார்த்தால் பால்கனி இருந்தது. கடலை பார்த்தபடி இருந்த அந்த பால்கனி அவர்களுக்கு மிகவும் பிடித்தது. காலை தேநீரும் மாலை தேநீரும் அங்கேயே அமர்ந்து பருக முடிவு செய்தனர்.

மற்ற பக்கம் இருந்த குளியலறையை திறந்து பார்க்க அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குளியல் தொட்டி இருந்தது.

"ரெஃப்ரெசிங்கா ஃபீல் பண்ண இந்த மாதிரி பிளவர்ஸ் போட்டு குளிப்பாங்க பேபி"

"ஆனா ஒரு பாத்டப் தானே இருக்கு" தயக்கமாய் சொல்ல

"பின்ன ஹனிமூன் வந்து தனித்தனியா குடிச்சா எப்படி பேபி" நக்கலா கேட்டான்.

அவனது கேள்வியில் மூச்சடைத்து நின்றாள் நங்கை.
"சரி பேபி குளிக்கலாம் வா" குறும்புடன் சிரித்து கேட்டவனை புரிந்து கொண்டு, ஒற்றை விரல் காட்டி பொய்யாய் மிரட்டி,

"இந்த விளையாட்டுக்கு நான் வரல சந்துரு. ஃபர்ஸ்ட் நீங்க குளிங்க நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து, அப்புறம் குளிக்கிறேன்" சொல்லி ஓடியவள் படுக்கையில் சுருண்டு படுத்து கொண்டாள்.

மேலும் தன்னைப் போர்வையில் மூடிக் கொண்டவளை பார்த்து, வாய்விட்டு சிரித்து, தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றான்.

குளித்து வந்தவன் அவளை குளிக்க சொல்ல, குளியல் அறை சென்றவள், அந்த குளியல் தொட்டியில் மலர்கள் எல்லாம் அப்படியே இருக்க கேள்வியாய் அவனை பார்த்தாள்.

"எனக்கு அது தேவையில்லை. நான் ஷவர்ல குளிச்சிட்டேன். நீ அதுல குளிச்சிட்டு வா பேபி. நான் சாப்பாடு சொல்றேன்.

சாப்பிட்டு கொஞ்சம் வாக் போவோம்"
பாத்டப்பில் குளிக்க தெரியாதவளுக்கு செல்லி கொடுத்தான்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்.

அதுவும் தன் மனைவி ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்க வேண்டும் என்பதே அவனது என்னமாக இருந்தது.

காதலர்களாக கைகோர்த்து திரிய வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மனதால் இன்னும் நெருங்க வேண்டும். அதுவே இந்த தேனிலவின் நோக்கமாக இருந்தது உதய சந்திரனுக்கு.

சுந்தரியும் குளித்து வரவே இருவரும் ஒன்றாக உணவு உண்டு சிறிது ஓய்வு எடுத்தனர்.
சூரியன் தன் ஆரஞ்சு நிற கிரணங்களை பரப்பி அந்த நீலக்கடலை பொன்னிறமாக மாற்றும்
பொண்மாலைப்பொழுது.

சுந்தரியும் உதயச்சந்திரன் கைகோர்த்து கடல் காற்று முகத்தில் மோத நடைபயின்றனர்.

எவ்வளவு நேரம் நடந்தனரோ அங்கிருந்த பாறையில் அமர்ந்து இளைப் பாறினர்.

சட்டென சுந்தரியை விட்டு விலகியவன் அவளது மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

அவன் அவ்வாறு செய்வான் என்று எதிர்பாராதவள் திகைத்து விழித்தாள்.

"பேபி முறைக்காதே" என்றவன் அவளது இடது கரத்தை எடுத்து தலை மேல் வைத்து கோதிவிட சொன்னான்.

மெல்ல அவனது சிகைகுள் தனது கையை நுழைத்து அலைய விட்டாள். அது சுகம் தரவே பேசிக் கொண்டிருந்தவன், எப்பொழுது கண்ணாயர்ந்தான் என்று தெரியவில்லை.

இருள் கவிழும் நேரம் வரவே அவனை எழுப்ப முனைந்தாள். ஆனால் அவனோ அவள் புறம் திரும்பி இடையை கட்டிக் கொண்டு தனது தூக்கத்தை தொடர்ந்தான்.

"அச்சோ என்ன இவர் இப்படி பண்றாரு" அவஸ்தையுடன் நெளிந்தாள். அதிக நேரம் அவளை தவிக்க விடாமல் விழித்து கொண்டான் உதயச்சந்திரன்.

தான் முகம் புதைத்து இருந்த ஆலிலை வயிற்றில் முத்தமிட்டு எழுந்து அவளுக்கும் கை கொடுத்து எழுப்பினான்.

வரும் வழியிலேயே உணவு உண்டு, மீண்டும் குடிலுக்கு வந்தவர்களை வரவேற்றது அலங்கரித்து இருந்த மஞ்சம் தான்.

சுந்தரி திடுகிட்டு போய் உதயசந்திரனை பார்க்க,
அவனோ "தேனிலவு வந்திருக்கோம்ன்னு சொல்லவும் அவங்களே அரேஞ்ச் பண்ணி இருப்பாங்க போல"

சாதாரணமாக சொல்லிவிட்டு உடைமாற்றி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

"இந்த பூ எல்லாம் என்ன பண்றது சந்துரு. " ஒரு வித படபடப்புடன் கேட்டாள்.

"வை டோன்ட் வீ மேக் இட் யூஸ் புல் பேபி" அவன் சீரியஸான குரலில் கேட்டான்.

அனிச்சை செயலாக எழுந்து நின்றவளை கண்டு வாய் விட்டு சிரிக்க, ஒரு ஆசுவாச பெருமூச்சுடன் அமர்ந்து கொண்டாள்.

"அவளோ பயமா பேபி இல்லை பிடிக்கலையா" ஒரு மாதிரி குரலில் கேட்டவனை கண்டு பதறி, அவனது இதழ்களில் கை வைத்து தடுத்தாள் மேற்கொண்டு எதுவும் சொல்ல வேண்டாம் எனும் பாவனையில்.

என்ன வார்த்தை சொல்லி விட்டான் மளுக்கென கண்ணீர் வர "ஹேய் லுசு சும்மா கேட்டேன் டா" அவளை இழுத்து மார்போடு சேர்த்து கொண்டு

"இந்த நிமிஷம் உன்னை நான் எடுத்துக் கொண்டாலும் நீ ஒன்னும் சொல்ல மாட்ட, என்னை தடுக்கவும் மாட்ட, எனக்கு தெரியும் பேபி. இது விளையாட்டுக்கு கேட்டது டா"
அவளது பார்வை புரிந்து "பின்ன ஏன் இன்னும் எடுத்துக்கலன்னு கேக்குறியா"
கேட்டான்.

நான்கு புறமும் தலையசைத்தாள். அவளது தலையை பற்றி அழுத்தியவன் "உனக்கு காதலிக்க கற்றுத்தரேன் பேபி அளவுதான்" விளையாட்டாக சொல்லி முடித்தான்.
அன்றைய தினம் அப்படியே கழிய.

மறுநாள் காலையே, வெயில் வரும் முன்னரே படகு சவாரி கிளம்பினார்கள்.

நீல் ஐலேண்டில் அவர்கள் பயணித்தனர். தண்ணீரை வாரி ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்ந்தனர்.

அவர்களுடன் ஒரு தமிழ் குடும்பமும் சேர்ந்தது கொள்ள அங்கு இன்னும் மகிழ்ச்சியே.

அந்த தமிழ் குடும்பத்தினரின் குழந்தைகள் அக்கா மாமா என்று இவர்களடம் நன்கு ஒட்டி கொண்டனர்.

மதியம் ஒரு மின் பிடிக்கும் இடம் வரவே அங்கு இறங்கி இளைப்பாறினார்கள்.

மீன் உணவுகள் உண்டு, மீன்கள் சுட்டு தரவே அதை பார்த்து தாங்களும் அது போல சுட்டு உண்டனர்.

கடற்காற்று சுகமாக தழுவி கொள்ள தங்களது குடிலுக்கு திரும்பினர்.

அடுத்த நாள் அவர்கள் சென்றது என்னவோ சதுப்பு நில காடுகள் எனப்படும் மாங்குரோவ் ஃபாரஸ்ட்.

சதுப்பு நில காடுகளில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம். உள்வாங்கி இருக்கும் கடல்களே சதுப்பு நில காடுகளாக மாறி இருக்கும்.
அங்கு ஆண்டு முழுவதும் ஒரு ஈரப்பதம் நிலைத்திருக்கும்.

அந்த ஈரப்பதம் காற்றில் கலந்து தென்றலாய் வீசும் பொழுது ஒரு புத்துணர்ச்சி மலர்ந்தது மனதிற்கு இதம் சேர்க்கும்.

இரு புறங்களிலும் மரங்களுக்கு நடுவே பயணிப்பதே அலாதியானது, விதவிதமான பறவைகளை பார்த்துக் கொண்டு, அவ்வப்போது அந்த மரங்களில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு என அந்தப் பயணமே புது அனுபவமாக இருந்தது சுந்தரிக்கு.

நேற்றைய அந்த குடும்பம் இன்றும் இணைந்து கொள்ள அங்கு குதுகலத்திற்கு பஞ்சம் என்ன.

குழந்தைகளுடன் குழந்தையாய் தன்னவளும் மாறி குதுகளித்து விளையாடும் ஒவ்வொரு நொடியையும் மனதில் பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டான் உதயச்சந்திரன்.

மாலை வேளையில் ரங்கத்தில் உள்ள ஆங்குஞ்ஜ் கடற்கரை பிரபலமாக ஆமைகள் கூடு கட்டும் இடமாக அறியப்படுகிறது. நேற்று போல் இன்றும் படகு சவாரி மேற்கொண்டு அந்த இடத்தை கண்டு களித்தனர்.

வெவ்வேறு அளவிலும் வண்ணத்திலும் அழகழகான ஆமைகளை அங்கு காண முடியும். இந்த இடம் சமூக ஆர்வலர்களுக்கு கண்டு களிக்க உகந்த இடமாகும்.

மூன்றாம் நாள் அவர்கள் சென்றது என்னவோ அந்தமானில் உள்ள ராஸ் தீவு ஆகும்.

முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர்களாலும் பிறகு ஜப்பானியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.

மரங்களால் மூடப்பட்ட சில இடிபாடுகள் கூடிய கட்டிடங்களும், மேலும் தம்ரூனின் கம்போடியா நினைவுச் சின்னங்களும் அங்கு கண்டனர். அது ஒரு 80 வருட பழமையான கைவிடப்பட்ட தீவாகும்.

ஆங்கிலேயர்களின் காலத்தில் சிறை கைதிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றவும், மன்னர் காலத்தில் தேசந்திரம் அனுப்பவும் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலேயர்களின் காலனி ஆகும். கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான இடமாக விளங்கியது அந்த ராஸ் ஐலேண்ட்.

அந்த கைடு விரிவுரை தரவே தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள முனைந்தாள் திரிபுரசுந்தரி.

மனைவியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை அவதானித்தவன் மேற்கொண்டு அந்த இடத்தில் இருப்பது உசிதமாக படவில்லை.

எனவே கிளம்பிவிட்டான் அவளையும் அழைத்துக் கொண்டு

அடுத்த நாள் முழுவதும் ஷாப்பிங்கில் கழித்தனர் கணவனும் மனைவியும்.

அனைவருக்கும் பிடித்தமானதை தெரிந்து கொண்டு தேடித்தேடி அலைந்து வாங்கியவளை முதலில் தடுக்கவே செய்தான் உதயசந்திரன்.

ஆனால் அவன் மனைவியோ "நான் வாங்கி தர எனக்குன்னு சொந்தமும், குடும்பமும் இது வரை இல்லை, இப்ப கிடைச்சிருக்கு செய்ய விடுங்க சந்துரு" பதில் அளிக்க. பிறகு அவன் ஏன் தடுக்க போகிறான்.

தனக்கும் பிடித்தவற்றை கூறி அவள் வாங்கித் தந்ததை சந்தோஷமாகவே பெற்றுக் கொண்டான் நல்ல கணவனாக.

அடுத்த நாள் அவர்கள் சென்ற இடமோ பராட்டாங். இந்த ஐலாண்டில் குகைகள் மற்றும் ஆதிவாசிகள் ஜார்வா இனத்தவர்களை அங்கு காணலாம்.

அன்றைய தினம் அங்கு தான் அவர்கள் பயணம் தொடர்ந்தது அன்றும் அவர்களுடன் அந்த தமிழ் குடும்பமும் இணைந்து கொண்டனர்.

அனைவரும் கும்மாளமிட்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அந்தப் பயணத்தை இனிமையாக மாற்றினர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை ஆடிக்கொண்டே தவறி தண்ணீரில் விழ உதயச்சந்திரன் சற்றும் யோசிக்காமல் நீரில் பாய்ந்தான்.

இந்து அவனது இந்த செயலை சற்றும் எதிர்பாராத சுந்தரியோ அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.

செய்கையற்று சிலையாக உறைந்தாள் பெண். எவ்வளவு நேரம் நின்றாலோ உதயச்சந்திரன் நீர் தெளிக்கவே சிலிர்த்து நினைவுக்கு வந்தவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

அப்போதுதான் அவளது பயத்தை உணர்ந்தவனாக "பேபி பயந்துட்டியா ஒன்னும் இல்லடா. நான் உன் கூட தான் இருக்கேன் பாரு"
அவளது விசும்பலில் குலுங்கிய முதுகை வருடி கொடுத்தான்.

அதன் பின்னர் தான் குழந்தை நன்றாக இருப்பதை கண்டு பெருமூச்சு விட்டாள். சற்றுமுன் தன்னுடன் விளையாடிய குழந்தை தண்ணீரில் விழ கலங்கி போனாள் தான்.

ஆனால் அதைவிட தன் கணவனின் செயலே அவளை கதி கலங்க செய்தது. அவளுக்கென இருக்கும் ஒரே சொந்தம் அல்லவா அவன். அவனையும் தொலைத்து விட்டு அவள் எங்கு செல்ல.

அன்றைய தினம் அப்படியே அனைவரும் இருப்பிடம் திரும்பினர். வேறு எங்கும் செல்ல மனம் வரவில்லை.

குடிலுக்கு வந்தும் தன்னையே ஒட்டிக்கொண்டிருந்த மனையாளை கைஅனைவிலேயே வைத்திருந்தான் உதயசந்திரன்.

ஒரு கட்டத்தில் அவளது பயத்தை தெளிய வைக்கவே கடற்கரை சென்று இருவருமாக அங்கு நீராடி விட்டு இயல்பான நிலைக்கு மீண்டு குடிலுக்கு திரும்பினர்.

குடிலுக்கு வந்தவர்களை சந்தித்த அந்த தமிழ் குடும்பம் உதயச்சந்திரனுக்கும் சுந்தரிக்கும் தனியே பிரத்தியேகமாக டின்னர் ஒன்று ஏற்படுத்தி தந்தனர்.

அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப முடிவு செய்து இருந்தனர். ஆதலால் இந்த ஏற்பாடு நன்றி நவிலும் செயலாய்.
 
Status
Not open for further replies.
Top