ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 1- வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வாங்கப்பட்டு வந்த வாசமலரே
நாயகன்: கந்தன்❤️❤️❤️
நாயகி: தெய்வானை
நம்ம நாயகனுக்கு அம்மா நளினி அப்பா அக்காக்கள் சந்தியா மீனா அவங்க கணவர்கள் என பொண்ணு பார்க்க சந்தோஷமா போறாங்க....🤍🤍🤍🤍🤍
பெண் பார்க்கும் படலத்தில் பார்த்த உடனே தெய்வயானயிடம் ஃப்ளாட் ஆகிறார் நம்ம கந்தக்கடவுள்..🧡🧡🧡
நாயகிக்கு போன் பண்ணி பேசிப்பேசியே நாயகியும் கந்தனிடம் ஃப்ளாட்...❤️❤️❤️
நம்ம நாயகன் இயல்பிலேயே ரொம்ப கலகலப்பான பேர்வழி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிற ஆள்....
சுமூகமாக உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க எதுக்குடா இங்கே இருக்கோம்னு அவங்க அக்காக்கள் நளினி அம்மா மனசை கலைக்கிறாங்க..😡😡😡😡. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுண்னுகறிவேப்பிலை கொத்து கணக்கா பெத்த ஆம்பிளை பிள்ளையை பொண்டாட்டி வந்து முந்தானையை முடிஞ்சிடுவாலோ அப்படின்னு அம்மாவுக்கு பயம்....ஏன்னா அவங்க பாசத்தை பாயாசமா தந்து வளத்துட்டாங்களாம் அப்ப நம்மலுக்கெல்லாம்...
விடுவான் நம்ம கந்தன் காட்டுனா தெய்வானை இல்லையா ஆண்டியா பழனி இல்லைன்னா திண்டுக்கல் மலையில் சார்ட்ஸ்ஸோட நின்னுருவேன்னு மிரட்டல் (திண்டுக்கல் தலைப்பாக்கட்டி எனக்கு பிடிக்கும் அதான்) இவன்லா கோவணம்கட்டி நின்னா கண்ணு அவிஞ்சி போகும்ல...😆😆😆😆
அப்பறம் ஒரே ஆர்ப்பாட்டமும் கும்மாளமும் குதூகலமுமாக ஒருவழியாக கல்யாணம் முடிஞ்சு. ஸ்ஸப்பாடா..🧘🧘🧘🧘🧘🧘.. மூச்சு விடாதிங்க இனிதான் விஷயமே
நல்லா ஜாலியா கெஞ்சி கொஞ்சி அவமிஞ்சின்னு ஒன்லி டச்சிங் டச்சிங்குனு முதல்ல காதலிப்போம் அப்புறம் கணவனாவோம்னு இருந்தா ...💚💚💚💚💚💚💚..
மறுபடியும் வருவோம்ல நாத்தம் புடிச்ச நாத்தனாரா நளினி அம்மா மண்டையை கழுவி சண்டையை மூட்டி விடு....😡😡😡😡
உங்கள் சண்டைல கடைசியில் எங்க கந்தனையும் அழுக வச்சிட்டிங்களே டாவ்வ்
தெய்வானைக்கு சின்ன புள்ளைத்தனமா உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு எல்லாம் கோவம் சண்டையில்லா தாம்பத்யம் சுவாரசியம் இல்லா சீரிஸ் பார்க்குற ஃபீல் வந்துடுமே. 💖💖💖💖💖💖 தெய்வா கேயிங் டூ பாதர் அவுஸ் உடனே நம்ம கந்து போய் கம்முனா கம்மு கம்முனாட்டி கோ னு சொன்ன உடனே தெய்வா ஸ்லோ மோஷன் கம்மிங் நம்ம ஆளு கம்முனு புடுச்சிட்டு அப்படியே அப்பீட்டு கோயிங் இன் புல் ஹனிமூன்
நம்ம கந்தன் கடைசியில் வச்சார் பாரு ட்விஸ்ட் புள்ளைக் குட்டியோடதான்டா வீட்டுவாசல்லை மிதிப்பேன் 🤣🤣🤣🤣🤣 எதார்த்தமான பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து திருமண வாழ்வில் உரசல் உறவுகளுக்குள் சண்டை சச்சரவு என நடைமுறை வாழ்க்கையை கந்தன் தெய்வா காதல் கலந்து நகைச்சுவையாக சொல்லி உள்ளீர்கள்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
 
Last edited:
வாக்கப்பட்டு வந்த வாச மலரே

குறும்பு கார கந்தன் தெய்வானையோட கலாட்டா கல்யாணம் தான் ஸ்டோரி..

குடும்ப அரசியல் கலந்து அழகா சொல்லி இருக்கீங்க.

கதை முழுக்க கந்தனோட லொள்ளு செமயா இருந்துச்சு.

தெய்வானையை நினைத்து உருகுறது, அம்மா நளினியை சமாளிக்குறதுனு கந்தனை ரொம்பவே பிடிச்சது.

தெய்வானையை ரொம்பவே பிடிச்சிது. ஆனால் கந்தனா வீட்டுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் கோபம் வந்துச்சு. 😒😒😒

அந்த 2 நாத்தனார் மாதிரி நிறைய பேரு இருக்காங்க சரியான வில்லிங்க😬😬😬😬.

ஸ்டோரி எந்த ட்விஸ்ட் எதுவும் இல்லாம ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
விமர்சனம்:

கந்தன்- தெய்வானை பெயர் பொருத்தத்தில் அவர்களின் மனப்பொருத்தத்தின் விகிதத்தை குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர்.💕

பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கும் கந்தன்- தெய்வானையின் காதல் படகு பல்வேறு காலகட்டங்களான காதல், காத்திருப்பு, ஊடல், எதிர்பார்ப்பு, குடும்பங்களின் புரிதல், என அனைத்தையும் கடந்து இல்லறம் எனும் கரை சேர்ந்ததே கதையின் மையம்.

நிஜ உலகில் எட்டாக்கனியாய் கிடைக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் காதலையும் கற்பனை உலகில் திகட்ட திகட்ட தெய்வானைக்கு அள்ளித்தரும் காதல் கணவனாக கந்தனை " வாக்கப்பட்டு வந்த வாசமலர்" இல் எழுத்தாளர் இயல்பாகவும் அழகாகவும் தொடுத்துள்ளார்.💕

வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐
 
#வாக்கப்பட்டு_வந்த_வாசமலரே

#கௌரிஸ்ரிவ்யூ

பீல் குட் & சிரிச்சிட்டே படிக்கலாம்…..

கந்தன் - தெய்வானை…ரெண்டு பேருக்கும் பெற்றோர் பார்த்து வெச்ச கல்யாணம், அதை தொடர்ந்து எப்படி அவங்க வாழ்க்கை அழகா போச்சி அப்படிக்கறது தான் கதை…..

கந்தன்…. யோவ்…என்னயா உனக்கு ஒரு சண்டை கூட போட வரல…

பொண்டாட்டி கூட சண்டை போடாதா புருஷன் எல்லாம் புருஷனா????

ஆன இவன் புருஷனா இல்லாம காதலனா தான் இருக்கான் எப்பவும்…..

சோ ஸ்வீட்….அதுவும் இவனும் இவன் அம்மாவும் வர சீன் எல்லாம்😂😂😂😂😂

தெய்வானை…முன்னாடி காதல் சரி இல்லைனாலும்….கந்தன் அவளை அவன் காதலாலே திணற வைக்கிறான்…..

சின்ன சின்ன சண்டைகள் நாத்திகள் கொளுத்தி போட…மாமியாரும் அதுக்கு தக்க ஆட….

கலவரமா போக வேண்டிய இடத்தில் எல்லாம் நான் இருக்கிறேன் அப்படினு கந்தன் நிற்பது மாஸ்🔥🔥🔥🔥🔥🔥

“”””கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கோழி என்ன கொடியையும் நட்டலாம்”””

அது இங்க ரொம்ப சரி….

கதை ரொம்பவே பிடிச்சது எனக்கு ரைட்டர் ஜி 👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐

இது AP verses அப்படினு play store la போய் search பண்ண வரும்…..

அந்த app la இருக்கு….

Free தான் படிக்கலாம்….
 
Top