#அனலவனின்_ஆலியவள்_விமர்சனம்
ருத்ர ராவணன் ஆன்டி ஹீரோங்க இவன்.
இராவணன் ஒரு நடிகன். இவனுக்கு இருக்கும் OCD பிரச்சனையினால் இவனை யாரு திருமணம் பண்ணிப்பாங்கனு மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுது. இவனுக்கும் திருமணம் நடக்கும்னு நிருபிக்கவே விருப்பமே இல்லாத மைதிலியை பல திட்டங்கள் போட்டு கல்யாணம் பண்ண நினைக்கிறான்.
இராவணன் திருமணம் நடந்ததா? மைதிலியின் வாழ்க்கை என்ன ஆனது? மைதிலியை இந்த திருமணத்திலிருந்து காப்பாற்ற உதவும் சீதா மஹாலக்ஷ்மியின் நிலை என்ன? என்பது கதையில்.
இராவணன் பெயருக்கு ஏற்றமாதிரி வில்லன் இவன்


இவன் அப்பா இறப்புக்கு காரணமானவங்களை பழிவாங்க சீதாவை பலி ஆடு ஆக்குனது கொடுமை


சீதா மஹாலட்சுமி பாவபட்ட ஹீரோயின்


அம்மா இல்லை அப்பா யாருனே தெரியாது. மாமா வீட்டில் தான் வளர்கிறாள். இவளின் உழைப்பில் வாழும் குடும்பம். திருமணத்திற்கு முன் தான் இப்படினா திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சினைகளும் துரோகமும்


முடியலடா சாமிங்கற அளவுக்கு படுத்தி எடுத்துட்டீங்க ரைட்டரே

வித்யூத் இராவணனின் நண்பன் இவன் எப்படி இருப்பான் அப்பறம்


நண்பன் தான் உலகத்திலே ரொம்ப முக்கியம்னு காதலித்தவளை கலட்டிவிட்டுட்டான் எருமை


நல்ல நண்பன் ❤ ஆனால் நிச்சயமாக நல்ல காதலன் இல்ல.
மைதிலியும் அவளின் காதலும் நல்லா இருக்கு ❤ மைதிலி ,சீதா மற்றும் மைதிலி வெண்பா ராகவி பாண்டிங் நல்லா இருக்கு ❤ சீதாவின் கபடமற்ற அன்பிற்கு இராவணன் செய்த துரோகம் ரொம்ப கஷ்டமா இருந்தது
இன்னுமே இராவணன் கொஞ்சம் வலியை அனுபவித்திருக்கலாம்னு தோணுச்சு

ஆனால் காதல் எப்படி இருந்தவனை எவ்வளவு மென்மையா மாத்திடுச்சுனு நல்லா சொல்லீருக்கீங்க ❤
நல்ல கதை ❤ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
