ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 10- அனலவனின் ஆலியவள்

#அனலவனின்_ஆலியவள்_விமர்சனம்

ருத்ர ராவணன் ஆன்டி ஹீரோங்க இவன்.

இராவணன் ஒரு நடிகன். இவனுக்கு இருக்கும் OCD பிரச்சனையினால் இவனை யாரு திருமணம் பண்ணிப்பாங்கனு மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுது. இவனுக்கும் திருமணம் நடக்கும்னு நிருபிக்கவே விருப்பமே இல்லாத மைதிலியை பல திட்டங்கள் போட்டு கல்யாணம் பண்ண நினைக்கிறான்.
இராவணன் திருமணம் நடந்ததா? மைதிலியின் வாழ்க்கை என்ன ஆனது? மைதிலியை இந்த திருமணத்திலிருந்து காப்பாற்ற உதவும் சீதா மஹாலக்ஷ்மியின் நிலை என்ன? என்பது கதையில்.

இராவணன் பெயருக்கு ஏற்றமாதிரி வில்லன் இவன் 😕😕 இவன் அப்பா இறப்புக்கு காரணமானவங்களை பழிவாங்க சீதாவை பலி ஆடு ஆக்குனது கொடுமை 😡😡😡

சீதா மஹாலட்சுமி பாவபட்ட ஹீரோயின் 🥺🥺அம்மா இல்லை அப்பா யாருனே தெரியாது. மாமா வீட்டில் தான் வளர்கிறாள். இவளின் உழைப்பில் வாழும் குடும்பம். திருமணத்திற்கு முன் தான் இப்படினா திருமணத்திற்கு பிறகும் பல பிரச்சினைகளும் துரோகமும் 😩😩 முடியலடா சாமிங்கற அளவுக்கு படுத்தி எடுத்துட்டீங்க ரைட்டரே 😅😅

வித்யூத் இராவணனின் நண்பன் இவன் எப்படி இருப்பான் அப்பறம் 😡😡 நண்பன் தான் உலகத்திலே ரொம்ப முக்கியம்னு காதலித்தவளை கலட்டிவிட்டுட்டான் எருமை😡😡 நல்ல நண்பன் ❤ ஆனால் நிச்சயமாக நல்ல காதலன் இல்ல.

மைதிலியும் அவளின் காதலும் நல்லா இருக்கு ❤ மைதிலி ,சீதா மற்றும் மைதிலி வெண்பா ராகவி பாண்டிங் நல்லா இருக்கு ❤ சீதாவின் கபடமற்ற அன்பிற்கு இராவணன் செய்த துரோகம் ரொம்ப கஷ்டமா இருந்தது 💔

இன்னுமே இராவணன் கொஞ்சம் வலியை அனுபவித்திருக்கலாம்னு தோணுச்சு 😞 ஆனால் காதல் எப்படி இருந்தவனை எவ்வளவு மென்மையா மாத்திடுச்சுனு நல்லா சொல்லீருக்கீங்க ❤
நல்ல கதை ❤ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
அனலவனின் ஆலியவள்
ஆண்டி ஹூரோ கதையுங்கோ😱😱😱.
ஹூரோ ருத்ர தேவன் கதையிலும் கதாநாயகனாக இருக்கிறார்... இவருக்கு இருக்கும் OCD பிரச்சினையால் திருமணம் நடைபெறாது என அனைவரும் கூறுகின்றனர் சினிமா துறையில் அவருக்கு நிகரான கதாநாயகி மைதிலியை மிரட்டி வற்புறுத்தி திருமணத்திற்க்கு சம்மதிக்க வைக்கிறான்...மைதிலியின் உதவியாளராக வருகிறார் நம் நாயகி சீதா மகாலெட்சுமி சாந்தஸ்வரூபினியான இவர் மாமா வீட்டில் பல கொடுமைகள் அனுபவிக்கிறார். திருமணத்தை நிறுத்தி தன் காதலனை கடைப்பிடிக்க மைதிலி சீதாவின் உதவியை நாடுகிறார்...திருமணம் நடந்ததா சீதாவின் நிலை என்ன என்பதே கதையின் முடிவு...

மைதிலி சீதா வெண்பா ராகவியிடம் பாகுபாடு இல்லாமல் தோழமையுடன் பழகும் விதம் அருமை....
அப்பாவி சீதாவை அடப்பாவி ருத்ரனோடு சேர்த்து வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது...
ருத்ரா மனம்மாறினானா சீதா❤️ ருத்ரா வாழ்க்கை எவ்வாறு சென்றது என்பதை நல்ல எமோஷனல்+ காதலுடன் சொல்லி உள்ளீர்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤️ 🧡
 
#அனலவனின்_ஆலியவள்
#கௌரிஸ்ரிவ்யூ

ஆன்டி ஹீரோ கதை🤩🤩🤩🤩🤩…..

ராவணன் ….பெரிய நடிகன்….என்ன தான் நடிகனா இருந்தாலும்….ஹீரோயின் கூட இன்டிமேட் சீன் எல்லாம் நடிக்க மாட்டான்….

அவளோ நல்லவனா அப்படினு கேட்ட அது தான் இல்ல…தலைவருக்கு OCD….

ரொம்ப சுத்தம் பார்ப்பான்….. அதுனாலையே அவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுறது கஷ்டம் அப்படினு பேச்சி அடிபட…

அதை எப்படியும் கலையனும்னு டாப் ஹீரோயினா இருக்கற மைதிலியை கல்யாணம் செய்ய நினைக்கிறான்….

ஆன அவளுக்கோ, ஆகாஷ் மேல காதல்…அவனுக்கும் தான்….

இப்படி இருக்கற காதல் ஜோடிக்களை பிரிச்சி கல்யாணம் செய்ய நினைக்கற அளவுக்கு மைதிலி மேல காதல் எல்லாம் ஒன்னும் இல்ல…

அவனுக்கு அவ ஸ்டேட்ஸ் சிம்பல் அவளோ தான்….அவ கூட வாழ எல்லாம் நினைக்கல….

இவன் இப்படி பிளான் செய்து கல்யாணம் வரை போக…

அங்க மைதிலிக்கு பதிலா இருந்தது சீதா….

சீதா….மைதிலி ஓட மேக்கப் அசிஸ்டன்ட்…..

சும்மாவே OCD….இதில் இப்படி ஒரு டுவிஸ்ட் அவனுக்கே…..

இனி?????

ராவணன்…. OCD ப்ராப்ளம், கட்டாய கல்யாணம் அப்படினு கெட்டவன் போல இருந்தாலும்…..இவன் பாஸ்ட் லைஃப் அவளோவா நல்லா இல்ல…..

டீன் ஏஜ்லா எப்படி பொண்ணுங்களுக்கு அம்மாக்கள் துணை முக்கியமோ….அதே போல பசங்களுக்கு அப்பா வேணும்…..

ஆன அந்த வயசில் அவனோட ஹீரோ போல இருந்த அப்பா இறந்து போக…..

அதில் இருந்து வெளி வரும் முன் அம்மாவின் அடுத்த கல்யாணம்…..

சிம்பில்லா சொல்லனும்னா…. அவனலா அந்த situation எல்லாம் கையாள முடியல….

அம்மாவின் மறுமணம்….அவனுக்கு துரோகமாவே பட்டது…..

பயந்த, வெகுளி சுபாவம் கொண்ட அவன் அம்மாவும் அவன் நினைப்பை மாத்தா நினைக்காது தான் இங்கே பிழையாகி போனது…..

அதுக்கும், சீதாவிடம் கடுமையா நடந்துகிட்டதுக்கு சம்பந்தம் இல்லைனாலும்….அதுவும் ஒரு காரணம் தான்….

சீதா…..அம்மா இல்ல…அப்பா யாருனு தெரியாம….அத்தையின் கொடுமையில் வாழும் பெண்ணவள்,.....

வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாக ஆனது ராவணன் ஓட அவ கல்யாணம்…..

மைதிலி….இவளோட காதலும்….சீதா கூட இவளோட பாண்டிங் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது…..

வித்யூத்….. ராவணனின் நண்பன்…..நல்லவன் தான்….இவனே ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பான்…அப்பறம் நண்பன் தான் முக்கியம் அப்படினு அவளை கழட்டி விடுவான்….அந்த அளவுக்கு நல்லவன்….

கதை நல்லா இருந்தது ரைட்டர்…..

போட்டி
யில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
அனலவனின் ஆழியவள்

ராவணன் முரட்டு ஹீரோ. இராவணன் ஒரு நடிகன். அவனுக்கு எந்த பொண்ணையும் தொட்டு நடிக்க பிடிக்கல. அருவருப்பா பீல் பண்ணுறான். எல்லாரும் அவனை கேலி பேசுறாங்க. அதுக்காக மைதிலியை கட்டிக்க நினைக்குறான்.

மைதிலி அவளும் ஒரு ஹீரோயின் ஆனால் அவ ஆகாஷ்ஷை லவ் பண்றா. இராவணன் மைதிலி அப்பாவை ஒரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு வந்து கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்குறான். மைதிலியும் ஆகாஷ்ஷும் மேரேஜ் ஸ்டாப் பண்ண ஏதாவது வழி கிடைக்குமானு பார்த்துட்டு இருக்காங்க.

மைதிலிக்கு அசிஸ்டன்ட்டா சீதா மஹாலக்ஷ்மி வேலைக்கு வரா. அவ மாமா வீட்ல இருந்து வேலைக்கு வரா. அவளை அவ அத்தை ரொம்பவே கொடுமை படுத்துறாங்க. மைதிலி மேரேஜ்க்கு சீதா வரா. அங்க மைதிலி சீதா கிட்ட ஹெல்ப் கேட்குறா மேரேஜ் ஸ்டாப் பண்ண. ஒரு சந்தர்ப்பத்துல பொண்ணு மாறி இராவணன் அவனுக்கே தெரியாமல் சீதா கழுத்துல தாலி கட்டிடுறான்.

அதுக்கு அப்புறம் அவன் இராவணன் சீதாவை ஏத்துக்கிட்டானா. அவங்க லைப் என்னாச்சுனு ஸ்டோரியில் தெரிஞ்சுக்கலாம்.

சீதா ரொம்ப பாவம் அவ மாமா குடும்பமே அவளை கொடுமை படுத்துறாங்க.இராவணன் அவளை ஏத்துகிட்டு வாழலாம்னு இருக்கும் போது அவளோட அப்பா யாருனு தெரிஞ்சு அவளை அங்க விட்டுட்டு வரும் போது சீதா ரொம்பவே பாவம்.

இராவணன் யாருக்கும் அடங்காதவன். சீதாவை பார்த்ததும் லவ் பண்ணி அதை ஒத்துக்க முடியாமல் அவளையே போட்டு படுத்துறது அவ மேல தப்பே இல்லாம யாரையோ பழி வாங்க இவளை அவளோட அப்பா கிட்ட விட்டுட்டு வந்து அதுக்கு அப்புறம் பீல் பண்ணி அவ பின்னாடி சுத்தும் போது அவன் மேல கொலை வெறி வருது 😡😡😡

கடைசியில் சீதா அவனை புரிஞ்சுக்கிட்டு அவனை மாத்தி ட்வின்ஸ்ஸோட முடிச்சது நிறைவாக இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top