thangathenmozhi.a
Member
ஆசிரியர்: மகாமணிAPV 2- வித்தகனின் நர்த்தகி
நாயகன்: லலித் ஏகலைவன் மிகப்பிரபலமான டைரக்டர்
நாயகி: தேம்பாவணி நாட்டியக்கலைஞர்
நாயகன் லலித் ஏகலைவன் மிகவும் பிரபலமான டைரக்டர் அவருக்கு அவரது தாய் தமயந்தி பிரபல டைரக்டர் தேவேந்திர பிரசாத் அவர்களின் மகள் மஹதியை ஏகலைவனுக்கும் மகள் அனிதாவிற்க்கு அவரின் மகன் ஹரியையும் திருமணம் செய்து வைக்கிறார்...
ஏகலைவனுக்கு திலக் பெற்றோர் என்ற குழந்தையும் அனிதா ஹரி தம்பதியர்க்குஒரு பெண் குழந்தையும் உள்ளது..
நம்ம டைரக்டர் சாருக்கு வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் கடமைக்கு குழந்தை திலக்கிற்க்காக வாழ்க்கையை நகர்த்துகிறார்.... படப்பிடிப்பிற்க்காக ஹைதராபாத் செல்கையில் ஒரு பள்ளியின் நடன நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தும்போது நனியிதழ், நச்சினார்க்கினியன் என்ற இரட்டை குழந்தைகளின் அழகில் லயித்து அவர்களின் தாய் பாவணியிடம் சினிமா பாடல் காட்சி ஒன்றிர்க்கு நடன ஆசிரியர் ஆக இருக்க அழைக்கிறார்..
தேம்பாவணி நனியிதழ் நச்சினார்க்கினியன் என்ற இரட்டை குழந்தைகள் உடன் தாய் கலை நிலா உதவியோடு நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.....
இவ்வளவு காதல் இருந்து சில பல சூழ்ச்சி சூனியக்காரி தாய்க்கிழவியால் இவங்க பிரிந்தது ஏற்றுக்கொள்ளவே முடியலை....
காதலியை பிரிக்கலாம் கட்டுன மனைவியை பிரிக்கிற உரிமை இந்த சூனியக்கிழவிக்கு இல்லை
லலித் ஏகலைவன் வாழ்வின் ரகசியங்கள் என்ன
மஹதி பணம் இருந்தால் ஆண் என்ன பெண் என்ன சுய ஒழுக்கம் கட்டுப்பாடு இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இவள்.....
தமயந்தி தாயாக இருப்பதற்க்கு தகுதியில்லாத சுயநலத்தின் மறு உருவம்....
தேவேந்திர பிரசாத் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க தவறி எவன் இளிச்சவாயனோ அவன் தலையில் மிளகாய் அரைக்கும் ரகம்....
கலை நிலா லாபமோ நட்டமோ உன் வாழ்க்கையை நீதான் பார்த்துக்கணும் என்று சொல்லும் அம்மாக்கள் மத்தியில் தோள் கொடுத்து தாங்கிய பரிசுத்தமான தாய்
அனிதா இவ்வளவும் தெரிந்தும் எனக்கென்று இருந்துட்டு இப்ப என்ன அண்ணன் வாழ்வில் அக்கறை சக்கரை....
லலித் பேயால் பெறப்பட்டாலும் வாரி அனைக்க தேவதையே தாயா கிடைச்சிட்டாங்க
மகாமணி அவர்களின் நாயகர்கள் என்றுமே எவ்வளவு அடி உதை வாங்குனாலும் என்றும் எப்படி ஒரு சூழ்நிலையிலும் ராமனே
Last edited: