ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 24- இதயம் துடி...துடித்திடுமா !

pommu

Administrator
Staff member
APV 24- இதயம் துடி...துடித்திடுமா !
 
#இதயம்_துடி_துடித்திடுமா!!!!
#கௌரிஸ்ரிவ்யூ….

அன்பின் வாழ்க்கையை சொல்லும் கதை…..

தலைப்புக்கு ஏத்த மாறியே…. படிக்கறவங்க இதயம் அப்ப அப்ப நின்னு துடிக்குது 😕😕😕😕…..

துவா - அன்பு ஓட சந்திப்பு மோதலில் ஆரமிச்சி ஈர்ப்பில் இருந்து…

காதலின் உச்ச நிலையை அடைந்த அன்பை விட்டு போகிறான் துவா😬😬😬😬😬…..

அன்பு அவன் மேல் பித்து நிலையில் இருக்க….அவன் பிரிந்து போக சொன்ன காரணம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️…..

அவன் சென்ற பிறகு நடைபினமா இருந்தவளை ஒரு வாரு தேற்றி கல்யாணம் செய்து வைக்க…..

அந்த கல்யாணமோ 🤷🤷🤷🤷🤷….

தான் தேடின காதல் தான் கிடைக்கல…

கிடைத்த வாழ்க்கையை வாழலாம்னு நினைக்கும் போது கட்டியவனும் உண்மையா இல்ல…..

இனி அன்புவின் வாழ்க்கையில்??????

துவா விட்டு போக காரணம்?????

இது தான் மீதி கதை…..

அன்பு….சராசரி பெண்…தன்னவனிடம் தனக்கு ஒரு துயரம் என சொன்னால்…. எல்லா பெண்களும் எதிர்பார்ப்பது ஆறுதலா சில வார்த்தைகள் தான்…..

அதுக்கே பஞ்சம் ஆகி போனால்?????

சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உறவு எவளோ நாள் நீடிக்கும்????.....

அன்பின் கடந்த கால வலிகளை கதை கேட்கும் மனோ பாவத்தில் கேட்டது தான் துவா செய்த மிக பெரிய தவறு…..

அங்கே ஆரமிச்சது அன்பின் துயர் காலம்…..

ஹீரோவா இருந்த அப்பாவின் நிலை?????

வீட்டில் இருக்கும் பிரச்சனைகள்….

இப்படி பலத்தையும் துவாவிடம் பகிர்ந்து ஆறுதல் கொள்ள பெண் துடிக்க…..

அவனோ….என்னிடம் காதல் பேச்சுகள் பேசு….இது எல்லாம் தனக்கு பொருட்டல்ல….என்பது போல இருக்கும் மனோ பாவம்????

அந்த நிலையை அறிந்து….அனைத்தையும் தனக்குள் வைத்து இயல்பு போல் பேச….

அதுவும் முடியவில்லை அவளால்….

Climax ....நல்ல முடிவு தான்…..

அன்பு இனியாவது அவளா இருக்கட்டுமே….

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐
💐 💐 💐

ரைட்டர் தெரியல….plz tag her/ his admin ji….
 
இதயம் துடி துடித்திடுமா
ஆசிரியர்: டெவில்
நாயகன்: துவாரகன்
நாயகி: அன்பரசி
நினைத்து வாழ்க்கை கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வாழ்கையை விரும்பி ஏற்றுக்கொள் என்று நாம் கூறிவிட்டு சென்று விடுகின்றோம் அதன் வலியானது அந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்கள் உனக்கு மட்டும் தான் தெரியும்..
மிக மிக ஆழமாக அழகாக நேசித்து அதே வேகத்தில் விட்டு சென்ற காதல்......

நம் நாயகி சிறுவயதில் உறவினர் மாதவன் என்ற சொறிநாயால் வண்புணர்வுக்கு ஆட்பட்டிருப்பார் அது போல பல குடும்ப சொத்து பிரச்சினைகளால் ஆண்கள் மீது தேவையற்ற வெறுப்பில் இருப்பார்....
நாயகன் நாயகி ஒரே கல்லூரியில் கல்வி பயில்கின்றனர் ஆண்கள் மீதான வெறுப்பிற்க்கு விதி விலக்காக நாயகன் மீது நாயகி காதல் கொண்டு காதலர்கள் காதல் காலத்தை இனிமையான தருணமாக அனுபவிக்கின்றனர்....
இந்நிலையில் என்ன காரணம் என்று கூறாமலே நாயகன் நாயகியை விலகிச்செல்கின்றார்...காதல் தோல்வியால் துவண்டு போன நாயகியை பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் சந்திரனை மணக்கிறார்.... கிடைத்த வாழ்கையை ஏற்று வாழ நினைக்கையில் தன் கணவன் வேறோரு பெண்ணை அணைத்து முத்தமிடும் காட்சியை காண நேர்கிறது.... சந்திரன் இனியா வை விரும்புவது தெரிந்து அவர்களை சேர்த்து வைத்து விட்டு கணவனின் வாழ்வில் இருந்து வெளியேறி விடுகிறாள்.....
ஊரைவிட்டு வெளியேறி தன் பெயரை நிலா என்று மாற்றி கொண்டு பியூட்டி பார்லரில் வேலை செய்து அங்கே சில நட்புக்களை சம்பாதிக்கிறார்.... ஜாஸ்மின், ருத்ரன் தென்றல் ராகா சுருளி....
அந்த ஊரின் எஸ் பி யாக மீண்டும் அதிரடியாக அன்பரசி யின் வாழ்வில் தருவார்கள் நுழைகிறான்...
நாயகன் நாயகியை ஏன் விட்டு சென்றார்...அன்புவின் சொத்து பிரச்சினை தீர்ந்ததா அன்பரசி துவாரகனை ஏற்றுக்கொண்டாலா என்பதை எழுத்தாளர் அருமையான முறையில் சொல்லி உள்ளார் 👏 💐 ❤️ 🧡 🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 ❤️
 
இதயம் துடி துடித்துடுமா

அன்பரசி நம் நாயகி. காதல் அவ லைப்பை எப்படி எல்லாம் புரட்டி போடுதுனு சொல்லும் கதை.

அன்பு, துவாரகன் ரெண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது லவ் பண்றாங்க. அன்புக்கு துவாரகன் மேல அவ்வளவு லவ் ஆனால் சொல்லாமல் இருக்கா. 2 பேரும் போன்லேயே பேசி காதலை வளர்க்குறாங்க.

துவாரகன் கவெர்மென்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கான். அன்பு அவன் லைப்ல நடந்ததை சொல்லி பீல் பண்றா. ஒரு கட்டத்துல துவாரகன் அவளை அவாய்ட் பண்றான். காரணம் சொல்ல மறுக்குறான்.

அன்பு அவனை மறக்க முடியாமல் தற்கொலை வரைக்கும் போறா. எல்லாம் கட்டத்துலயும் துவாரகனை தேடுறா அன்பு ஆனால் அவன் அவளை தவிர்க்குறான்.

கொஞ்சம் நாள் கழிச்சு அன்புக்கு கல்யாணம் பேசுறாங்க அன்பு தன்னோட பெத்தவங்களுக்காக சம்மதிக்கிறா.

சந்திரனோட அவளுக்கு கல்யாணம் நடக்குது. அங்கேயும் அவளுக்கு மாமியார் நாத்தனார் கொடுமை நடக்குது. சந்திரன் வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி அவனோட அம்மா மிரட்டி அன்புவை கட்டாயத்துல கல்யாணம் பண்ணிக்கிறான்.
சந்திரன் அவன் லவ் பண்ண பொண்ணு இதயாவை மறக்க முடியாமல் இருக்குறான்.

அங்கேயும் அன்பு அவ்வளவு கஷ்டம் படுறா. துவாரகன் தான் காரணம்னு அவன் மேல அவ்வளவு வெறுப்பு வருது அன்புக்கு அவன் மேல.

அன்புவே சந்திரன் இதயாவை சேர்த்து வைச்சு வெளிய வந்து வேற ஊருக்கு போய் நிலாவா புது வாழ்க்கை வாழ்றா.

துவாரகன் போலீஸா அந்த ஊருக்கு வந்து அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான். கடைசியில் அன்பு லைப் என்னாச்சு. துவாரகனோட சேர்ந்தாளானு கதையில் அழகா சொல்லி இருக்காங்க.

ஒரு பொண்ணு லவ் பண்ணிட்டு அவளுக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லனா என்ன எல்லாம் பாடு படுவானு சூப்பரா சொல்லி இருக்காங்க.

துவாரகன் இவனை என்ன சொல்ல அவ மேல அவ்வளவு லவ் இருந்தும் விட்டுட்டு போய்ட்டான்.அதுக்கு சொல்ற காரணத்தை தான் ஏத்துக்கவே முடியல. அவ்வளவு கோபம் வந்துச்சு அவன் மேல.

கடைசியில் அவ பின்னாடி சுத்தும் போது பாவமா தான் இருந்துச்சு. 😏😏😏

அன்பு நிலாவா இருக்கும் போது அவளை சுத்தி அவ்வளவு நல்ல உள்ளங்கள் அவளுக்கு சப்போர்ட்டா இருந்தது நல்லா இருந்துச்சு.

கடைசியில் அன்பு அவ்வளவு கஷ்டபட்டதுக்கு சரியான இணை கொடுத்தது நிறைவாக இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
அன்பரசி என்கின்ற பெண்ணை மையப்படுத்துன கதை ❤


ஒரே ஒரு காதல் அதை பண்ணீட்டு அதை விட்டு போகவும் முடியாமல்,இழுத்து பிடிக்கவும் முடியாமல் அன்பு படும்பாடுதான்💔 கதை


அன்பு கதாபாத்திரம் அருமை 👏 சின்ன பெண்ணு மனசுல காதலை விதைத்து காரணம் தெரியமால் விட்டுச் செல்லும் காதலன் துருபதன். 😰


அன்பு எதிர்க்கொள்ளும் வலி, என்ன பண்ணாலும் அவளைவிட்டு நீங்காத அவனின் நினைவுகள், அவளின் மன்றாடல், தலையணையை நனைக்கும் அவளின் கண்ணீர், நினைவுகளுடன் வாழப் பழகுவது, அவளின் ஆசைகளை வரைபடங்களில் வெளிபடுத்துவது, இன்னும் நிறைய நிறைய அன்புவின் காதலின் ஆழத்தை பறைசாற்றுகிறது❣️❣️


அங்கங்கே இந்த சமூகம் ஆணையும் பெண்ணையும் எப்படி பாகுபாடோ பார்க்குதுனு சொன்னது , ஒரு பொண்ணு காதல் தோல்வினு கல்யாணம் பண்ணாமல் இருக்கவிட்டுறுமா என்ன இந்த சமூகம் 😏😏 , சரினு கல்யாணம் பண்ணி எல்லாம் கடந்து வருவானு பார்த்தா எப்படி எல்லாம் கொடுமை படுத்துராங்க மாமியாரும் நாத்தனாரும் 😡😡😡 இப்படியான பெரிய பெரிய விஷயங்களை ரொம்பவே நல்லா சொல்லீருக்கீங்க.


துருபதன் வயது வேகத்தில் காதல் பண்ணியாச்சு இப்போ எயதார்த்ததில் வரும் குடும்பப் பிரச்சினைகளை எதிர்க்கொள்ள தெரியாமல் காதலை விட்டுவிடுவது .அவனின் காதலுக்கு அவன் இளைக்கும் துரோகம் 😰😰 சுயநலவாதி இவன் 😡😡


திருமணத்திற்கு பிறகு அன்பு படும்பாடு கண்ணீர் வர வைக்கிறது 😭😭 நிலாவா அன்பிற்கு கிடைக்கும் நல்ல உள்ளங்களின் நட்பு அருமை 👌👌


எழுத்துல ஒரு அவசரம் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளிவான எழுத்து நடையும் ,காட்சிப்படுத்துதலும் இருந்திருந்தா கதை இன்னுமே சிறப்பாக அமைந்திருக்கும் ❤


அருமையான கதை ❤ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
Top