இதயம் துடி துடித்துடுமா
அன்பரசி நம் நாயகி. காதல் அவ லைப்பை எப்படி எல்லாம் புரட்டி போடுதுனு சொல்லும் கதை.
அன்பு, துவாரகன் ரெண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது லவ் பண்றாங்க. அன்புக்கு துவாரகன் மேல அவ்வளவு லவ் ஆனால் சொல்லாமல் இருக்கா. 2 பேரும் போன்லேயே பேசி காதலை வளர்க்குறாங்க.
துவாரகன் கவெர்மென்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கான். அன்பு அவன் லைப்ல நடந்ததை சொல்லி பீல் பண்றா. ஒரு கட்டத்துல துவாரகன் அவளை அவாய்ட் பண்றான். காரணம் சொல்ல மறுக்குறான்.
அன்பு அவனை மறக்க முடியாமல் தற்கொலை வரைக்கும் போறா. எல்லாம் கட்டத்துலயும் துவாரகனை தேடுறா அன்பு ஆனால் அவன் அவளை தவிர்க்குறான்.
கொஞ்சம் நாள் கழிச்சு அன்புக்கு கல்யாணம் பேசுறாங்க அன்பு தன்னோட பெத்தவங்களுக்காக சம்மதிக்கிறா.
சந்திரனோட அவளுக்கு கல்யாணம் நடக்குது. அங்கேயும் அவளுக்கு மாமியார் நாத்தனார் கொடுமை நடக்குது. சந்திரன் வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி அவனோட அம்மா மிரட்டி அன்புவை கட்டாயத்துல கல்யாணம் பண்ணிக்கிறான்.
சந்திரன் அவன் லவ் பண்ண பொண்ணு இதயாவை மறக்க முடியாமல் இருக்குறான்.
அங்கேயும் அன்பு அவ்வளவு கஷ்டம் படுறா. துவாரகன் தான் காரணம்னு அவன் மேல அவ்வளவு வெறுப்பு வருது அன்புக்கு அவன் மேல.
அன்புவே சந்திரன் இதயாவை சேர்த்து வைச்சு வெளிய வந்து வேற ஊருக்கு போய் நிலாவா புது வாழ்க்கை வாழ்றா.
துவாரகன் போலீஸா அந்த ஊருக்கு வந்து அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான். கடைசியில் அன்பு லைப் என்னாச்சு. துவாரகனோட சேர்ந்தாளானு கதையில் அழகா சொல்லி இருக்காங்க.
ஒரு பொண்ணு லவ் பண்ணிட்டு அவளுக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லனா என்ன எல்லாம் பாடு படுவானு சூப்பரா சொல்லி இருக்காங்க.
துவாரகன் இவனை என்ன சொல்ல அவ மேல அவ்வளவு லவ் இருந்தும் விட்டுட்டு போய்ட்டான்.அதுக்கு சொல்ற காரணத்தை தான் ஏத்துக்கவே முடியல. அவ்வளவு கோபம் வந்துச்சு அவன் மேல.
கடைசியில் அவ பின்னாடி சுத்தும் போது பாவமா தான் இருந்துச்சு.


அன்பு நிலாவா இருக்கும் போது அவளை சுத்தி அவ்வளவு நல்ல உள்ளங்கள் அவளுக்கு சப்போர்ட்டா இருந்தது நல்லா இருந்துச்சு.
கடைசியில் அன்பு அவ்வளவு கஷ்டபட்டதுக்கு சரியான இணை கொடுத்தது நிறைவாக இருந்துச்சு.
வாழ்த்துக்கள்


