மன்னவன் மயங்கும் மலரவள்...குருசேத்திரன் ஒரு சரியான சைக்கோ தொழிலதிபர் அவங்க அம்மா மணியம்மையை கூட இருந்தே பார்த்து கொள்ள நர்ஸாக நாயகன் வீட்டிற்கு நாயகி செம்பருத்தி வருகிறார்.... நாயகி மீது ஏதோ ஒரு உணர்வு நாயகனுக்கு ஏற்ப்பட்டு அதிரடியாக திருமணம் செய்து கொள்கிறார்...
நாயகி திருமணம் ஆனப்பின்பே நாயகனின் நோக்கம் தெரிந்து அவனை விலக்கி வைத்து திருமணத்திற்க்கான காரணத்தை கேட்டு ஆராய்கிறார்... அதற்கு முதலே நாயகன் செம்பா மேல் அளவில்லா காதலில் விழ அந்த காதலை வைத்து குருவை செம்பா என்ன செய்கிறாய் என்பதே கதை....செஞ்சா சொல்வதை எல்லாம் குரு செய்வது மனதிற்க்கு குளுகுளு உணர்வு மணியம்மை செம்பா காமினேஷன் மாமியார் மருமகள் இப்படி தான் இருக்கனும்....கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
AP Verses
APV6
"மன்னவன் மயங்கும் மலரவள்"
பிரதன்ய குழலி அவர்களின் எழுத்தில்
ஆன்டி ஹீரோ கதைதான்.
குருசேத்ரன்.. உயரத்தில் இருக்கும் பிசினஸ்மேன். அம்மாவின் மீது அதிகப்படியான பாசம் கொண்டு உள்ளவன். அவர் உடல் நிலையை பேணுவதில் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக இருக்கிறான். அதுவே அவரின் அம்மாவிற்கு அவனின் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது ஆனாலும் கோபத்தை தாண்டி அன்பும் அதிக அளவில் இருக்கிறது.. இவரைப் பார்த்துக் கொள்ள இவர்கள் வீட்டுக்கு நர்சாக வருகிறாள் செம்பருத்தி. ஐந்து அக்கா தங்கை ஒரு தம்பி என இவளின் குடும்பம் பெரிது. வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சனைக்காக இவர்கள் வீட்டிற்கு முழு நேர நர்சாக வேலைக்கு வருகிறாள்.
மணியம்மையை பார்த்துக் கொள்ள வரும் செம்பருத்தி மீது அவருக்கு பாசம் ஏற்படுகிறது அது அவரின் மகன் குருவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. நாட்கள் போகப்போக கோபத்தை தாண்டி அவள் மேல் பிடித்த மேற்பட திருமணம் செய்து கொள்கிறான் செம்பருத்தியை.. ஆனால் அவன் திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது கதையில்.
குருவின் தோழியாக டாக்டர் சுப்ரியா பாவம் அவனிடம் மாட்டிக் கொண்டு பாடுபடுகிறாள்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Good luck
Please read this amazing book on AP Verses. Click on the link to read the book -
Mannavan mayangum malaraval
Such an amazing story.....Guru and semba semaaaaa.....sikiram ah story mudinjuteyy nu iruku but really very close to my heart .....keep rocking sissyyy .....All the best