ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 7- உனக்கென பிறந்தவள் நானே

#உனக்கென_பிறந்தவள்_நானே
#கௌரிஸ்ரிவ்யூ

“ Racial discrimination “ முன்னாடி கல்யாண சந்தையில் பெண்களை இப்படி சொல்லி தட்டி கழிச்சிட்டு இருந்தாங்க…..

ஆன இப்ப ஆண்களும் அந்த நிலைக்கு வந்துட்டாங்க….அவங்களையும் இப்படி சொல்லி நிராகரிக்க தான் செய்யறாங்க…..

அவங்க எவளோ படித்தவர்கள், பணம் படைத்தவர்கள், நேர்மையான குணம் கொண்டவர்கள்….அப்படினு இருந்தாலும்…..

அது எல்லாம் இங்கு பார்க்க படுவது இல்லை….

இந்த பாகுபாட்டால் நிறைய பாதிக்க பட்டவன் தான் நம்ம முகில்…..

அவனுக்காகவே, அவனை நேசிக்கவே வந்தவள் தான் சுமி….

இவங்க கல்யாணம், அதன் பின்னான வாழ்க்கை எல்லாம் தான் மீதி கதை…..

முகில்….. ப்பா….இவனிடம் முதலில் வியந்த விசயம்…இவனின் சுயக்கட்டுபாடு….

உணர்வுகளை தனக்குள்ளே வெச்சி இவன் படும் கஷ்டத்தை பார்க்கும் போது…. ஏண்டா நீ இப்படி இருக்க அப்படினு தான் தோணும்…..

தனக்கென வந்தவள் தேவதை போல இருக்க….அதிலும் எப்படி இவளால் தன்னை நேசிக்க முடியும்னு?????

பெரும் சந்தேகம் அவனுள்….

சுமி….தனக்கு பிடித்தவர்களுக்கு sudden surprise செய்து அலற விடுவது இவளின் விருப்பம்……

அவர்களின் பெரும் சந்தோஷம், இவளின் சந்தோஷமாக இருக்க….

தன்னவனை மட்டும் எப்படி விட்டு வைப்பா????

அவனுக்கு கொடுத்த “sudden surprise” “shocking surprise” ஆனது தான் இங்க கொடுமையே…..

இதுவும், அவளால் எப்படி தன்னை நேசிக்க முடியும் அப்படிக்கறதும் சேர்ந்து அழகாக போக வேண்டிய வாழ்க்கையை குழப்பி விற்றுச்சிங்க ரெண்டும்…..

அதியன், ஆரா, செல்வம், சுதா, குழலி, மூர்த்தி, அனிதா, சுபிதா, திலக், ஆதவ் & நிலவன் குட்டி…..எல்லாமே சோ ஸ்வீட்….

இதுங்களே அவங்க வாழ்க்கையை குழப்பிக்க போதும் என்பதால் தனியா வில்லி/வில்லன் இல்ல இந்த கதையில்…..

ஆ அப்பறம் குமார்….நீங்க சஸ்பென்ஸ் ஓடவே சுத்துங்க……

எப்பவும் போல infaa sis…..u nailed it♥️♥️♥️♥️♥️

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் Infaa Alocious sis💐💐💐💐💐💐
 
உனக்கென பிறந்தவள் நானே....கண்ணனின் கார்முகிலனவனே கதையின் நாயகன் அகத்தில் கருமையையும் மனத்தில் பால் வெண்மையையும் கொண்ட நம் நாயகனை நிறத்தை கொண்டு திருமணம் செய்து கொள்ள பெண்கள் ஒதுக்குகின்றனர்...‌அவன் தன்னம்பிக்கையுடன் தொழிலில் வெற்றி பெற்று முன்னேறி வரும் விதம் பிடித்து நம் நாயகியின் தந்தை மாப்பிள்ளை கேட்க்கிறார்.
சுமாரான பெண்களே ஒதுக்கும் காலநிலையில் சூப்பர் அழகியான நம் சுமித்ரா வை ஏற்றுக்கொள்ள சுய கழிவிரக்கம் கொள்ளும் நாயகன் .. நாயகியின் முயற்சியால் திருமணம் நடந்தும் சின்ன புரிதல் இல்லாமல் விலகி நிற்க்கும் நாயகன்.நாயகனுக்கு தன்னை நாயகி புரிய வைத்து நாயகன் நாயகி வாழ்வில் இணைந்தார்களா என்பதே கதையின் கரு.....முகிலை சுமி நன்றாகவே புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள் கதையின் கரு மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் 💐 💐 ❤️ 🧡 🧡
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்.
AP Verses
APV7
Infaa Alocious அவர்களின் எழுத்தில்
"உனக்கென பிறந்தவள் நானே"
கார்முகில் வண்ணன்... பெயரை போலவே கார்முகில் நிறத்தை ஒற்று இருக்கிறான். அவனுக்கு அந்தக் கவலை இல்லை என்றாலும் சுற்றி இருப்பவர்களின் கேலி பேச்சு அவனுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. திருமணத்திற்காக பார்க்கும் பெண்கள் எல்லாம் இவன் நிறத்தைக் கொண்டு நிராகரிக்கிறார்கள். அது இவனுக்கு வருத்தம் இல்லை என்றாலும் பெற்றோர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.
இவன் பெற்றோரின் வருத்தத்தை போகவே தேவதை என வருகிறாள் பெண்ணொருத்தி.
சுமித்ரா.. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அதிகமான அன்பைப் பொழிபவள்.
தற்செயலாக கார்முகிலை பார்ப்பவளுக்கு அவன் நல்லுள்ளம் தெரிந்து அவனின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அதுவே அவனை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் அவளை எடுக்க வைக்கிறது. பெற்றோரின் சம்மதத்துடன்.
பெண் அவளுக்கு ஒரு பழக்கம் தன்னை சுற்றி உள்ளவர்களை சர்ப்ரைஸ் செய்து அவர்களின் எதிர்பாராத மகிழ்வில் இவள் மகிழ்வது. இவளின் இந்த பழக்கம் இவள் திருமண வாழ்வில் பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
அதை எப்படி சரி செய்து வாழ்வை வளமாக்கிக் கொண்டாள் என்பது கதையில்.
கார்முகிலின் கேரக்டரைசேஷன் வெகு அருமை 🥰❤️
அவளின் குண நலன்களும், தைரியமும், தன்னம்பிக்கையும் சூப்பர் 🥰
சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰🌹
Good luck 🥰❤️
 
உனக்கென பிறந்தவள் நானே விமர்சனம்

கருப்பா இருக்க பொண்ணை கட்டிக்க யோசிக்கிற ஆண்கள் போயி இப்போ கருப்பா இருக்கற பசங்கள கல்யாணம் பண்ண விரும்பாத பெண்கள் வரமாதிரி தான், நாயகன் கார்முகில் வண்ணணுக்கும் திருமணத்திற்கு பெண் அமையவே மாட்டுது..அதற்கு காரணம் அவன் பெயருக்கேற்றபோலவே கார்முகிலின் நிறத்தைக் கொண்டு‌பிறந்ததனால்..🖤அவன் கார்முகிலின் நிறத்தை கொண்டிருந்தாலும் அவனின் உள்ளமோ அதற்கு எதிர்பதமாக உள்ள வெண்மேகத்தினை போன்றது....🤍 திருமணத்திற்காக பல பெண்பார்க்கும் படலங்கள் நடக்க அவனின் நிறத்தை காரணம்காட்டியே சந்தித்த பெண்கள் விலகிவிட , அவனை மட்டுமே விரும்பி திருமண செய்ய நினைக்கும் நாயகி சுமித்ரா ❤️ இவளின் நிறத்தை கொண்டு திருமணத்தை பயந்து விலகும் முகிலனை விரும்பியே திருமணம் செய்யும் நாயகி அவள் விளையாட்டாய் செய்த விஷயம் அவனுக்கு விபரீதம் ஆகிப்போனதில் இவர்களுகுள் பிரிவு ஏற்பட காரணமாகிறது...


நிறத்தின் அடிப்படையில் இரு வேறுபட்டவர்களாக இருப்பவர்கள் தங்கள் கசடுகளை விடுத்து மீண்டும் எப்படி இணைந்தார்கள்‌ அப்படின்னு கதை..❣️.


கார்முகில்வண்ணண்..பெயரைப்போலவே நம்ம விஷால்போல கருப்பு கட்டழகன்.. ஆள் அழகா லட்சணமா இருப்பாப்ல ..தன் கருமை நிறத்தைக்கொண்டு மத்தவங்க இவனை குறைவா பேசும்போது இவன் அதனை எடுத்துக்கொள்ளும் விதம் அவனின் தன்னம்பிக்கையை காட்டுது (என்னை கவர்ந்தது.)..சுமித்ரா இவனை திருமணம் செய்ய சம்மதம் சொன்னதற்கு இவனின் பரிதவிப்பு இவனின் வலியை நமக்கு உணர்த்தியது..ஆனாலும் இந்த அழகி எனக்கே எனக்கானவள்னு அவன் சந்தோசப்பட்ட விசயம் அழகா இருந்தது..😍 இவர்கள் திருமணத்தின் போது எழுந்த சில பல விமர்சனங்களை இவர்கள் கடந்தது சூப்பர்...இவனின் கோவம் நியாயமாகவே பட்டாலும் அந்த டைம் பாவமா தெரிஞ்சது போகப்போக ரொம்பதான் அப்படின்னு தோணிச்சு..அவனின் தவறை சரிசெய்ய முயலும் முகிலன் 👍👍👍 காலம் கடக்க இவர்கள் இருவரின் புரிதல்களும் அதனை தொடர்ந்து வரும் இவர்களின் நெருக்கமும் அழகு 😍😍


சுமித்ரா நம் நாயகி , சிறு வயதில் இருந்தே தன் தாயின் அறிவுரைக்கேற்ப மத்தவங்களை சடன் சர்ப்ரைஸ் செய்து அவங்க மகிழ்வின் இரட்டிப்புத்தன்மையை கொண்டு தானும் மகிழ்பவள்..❣️அவள் அக்கா சுபிதாவின் குழந்தைக்கு இவள் செய்த சர்ப்ரைஸ் செம்ம 😍😍 ..அக்கா தங்கை பாசமாகட்டும் தன் (வளர்ப்பு ) அம்மா அப்பாவின் மேல் கொண்ட பாசமாகட்டும் செமயோ செம‌... பேரழகியான இவள் முகிலின் குணத்தில் ஈர்க்கப்பட்டு அவனை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் .. இவர்களின் திருமணம் நடக்க , எல்லா நேரமும் ஒரே போல் இருக்காது சில சமயங்களில் விளையாட்டும் விபரீதமாகும் என்பதுபோல இவள் தன் கணவனை சர்ப்ரைஸ் செய்ய நினைத்த விடயம் தோல்வியில் முடிய அவளின் விளையாட்டுத்தனத்தால் முகிழ்கிறது முகிலின் கோவம்...தன் தவறை சரிசெய்ய இவள் முயல அவனோ விடாக்கண்டனாக இருக்கான் 😒😒 அவனின் ஆதங்க வார்த்தைகளினால் இவளும் பாதிப்படைய இவளின் பாராமுகத்தால் அவனும் பாதிப்படையன்னு இதுங்க ரெண்டுமே இதுங்க வாழ்க்கைக்கு எதிரியா இருக்குங்க🫡..


அதியன் நல்ல நட்பு முகிலனுக்கு, இவர்கள் இருவரின் நட்பும் நல்லா இருந்தது படிக்க...அவனுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் தோள் கொடுத்து நின்றான் 👬 இவனுக்கும் ஆராதனாக்கும் ஜோடி சேர்த்தாச்சு 👍


சுமித்ராவின் பெற்றோரும் சரி முகிலனின் பெற்றோரும் சரி நம்மளை கவர்ந்துட்டாங்கப்பா..😍😍


குழலி மற்ற நாத்தனார்களை போல இல்லாமல் தன் அண்ணிக்கு நல்ல சப்போர்ட் ஆ இருந்தா...குடும்பத்துல நல்லவங்க இருந்தாலும் குதர்க்கமா யோசிக்க ஒருத்தவங்களாவது இருப்பாங்க அது போலவே குழலியின் கணவன் குமாரும் 😬😬😬இதுங்களையெல்லாம் கணக்குல எடுத்துக்கப்படாது😂குழலி நல்லா டீல் பண்ணா இவனை...


புவனாவுக்காக உதவி செய்ய நினைக்கிற சுமித்ராவும் , சுமித்ராவுக்காக அந்த குடும்பத்துக்கு உதவ நினைக்கும் முகிலும்❤️


சண்டை போட்டு சமரசம் ஆன பின்ன இதுங்க பண்ணுற ரொமான்ஸ் 🙈🙈🙈


நிறைய இடங்கள் நேர்மறையான எண்ணங்கள் நிறைந்ததாகவே இருந்தது கதை...


ஏலியன் செல்லம் பேரும் ஆப்ரிக்கா க*தை செல்ல பேரும் 😂😂😂😂


புரிதலான காதலுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் நிறம் ஒரு பொருட்டல்ல .. அதேசமயம் விளையாட்டும் சில நேரங்களில் விபரீதமாகி நம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் பாதிக்கும்ன்றதை கதை மூலமா சொல்லிருக்காங்க ரைட்டர்...👍👍


கதை நல்லா இருந்தது படிக்க..முகிலிற்காகவே பிறந்த சுமித்ரா போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
உனக்கென பிறந்தவள் நானே


கார்மூகில்

சுமித்ரா


பெரும்பாலான நேரம் நம் நிறமே நம் வாழ்க்கையின் போக்கை வழிநடத்தி திசைதிருப்பி விடுகிறது.



அன்பான பெற்றோர் …அருமை உடன்பிறப்பு அமைந்தால், அதிலிருந்து கொஞாசம் தன்னம்பிக்கையோடு வலம் வரலாம்.



ஆனால் இந்த சமுகம்…அதுவும் திருமண பந்தத்தில், தோற்றமும் நிறமும் தானே முன்நிற்கிறது.



அதே போல் பல வலிகளையும் ,நிராகரிப்புகளையும் , சந்திப்பவன் தன் பெரிதாக மனமுடையாவிட்டாலும், ஒரு பெண் தன்னை விரும்பவது அத்தனை எளிதல்ல என ஆழமாக நம்புகிறான்.

அதனால் திருமணத்தை பற்றிய பெரிய கற்பனைகளோ எதிர்பார்ப்புகளையோ வளர்த்துகொள்ளாமல் அதன் போக்கில் வாழ பழகுகிறான்.




இந்நிலையில் சமித்திரா அவனை திருமணம்‌செய்ய ஒத்துகொள்ள, அவள்‌ தோற்ற‌பொலிவு , அவள் வார்த்தைகளின் மீது நம்பிக்கை ஏற்பட‌மறுக்கிறது.




சும்த்திரா வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்படுவதால் ,கட்டாயத்தின் பேரில் இந்த திருமணத்திற்கு சம்மத்திருப்பாளோ என சந்தோகம் எழுகிறது.



ஆனால் சுமத்திரா அவனை எப்படியோ பிடித்து தான் திருமணம்‌ செய்கிறேன் என அவனை சமாதானம் செய்து, ஒருவாறு இருவரும் திருமண பந்தத்இல் நுழைகின்றனர்.



சிறு வயதிலிருந்து சுமத்திராவிடம்‌ இருக்கும் பழக்கம், இருவருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தி அவனது நம்பிக்கையின்மையை உறுதிப்படுத்துகிறது.


அவளது விளையாட்டுதனம், முகிலின் மனதின் காயத்தை கீறிவிடுகிறது.


இருவருக்கிடையே பிடித்தம் இருந்தும், ஏனோ இடைவெளியை மட்டும் குறைக்க இயலாமல் அல்லாடுகின்றனர்.



அவள் இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்க, அது பேரதிர்ச்சியா மாறி,முகில மலையேற வைக்குது.



எப்படியே அவ இவன மல எறக்கி பயபுள்ள பங்கு அது பங்குனு ஒன்னு பண்ணி வைச்சி ,ரெண்டும் ரெண்டு மோட்டு வலைய பார்த்துட்டு நிக்குது..இவர்களின் எப்படி சரியாகுது னு கதையின் உடே பயணித்து தெரிந்து கொள்ளவும்.



அன்பான அரவணைப்பான,சரியான வழிகாட்டுதலுடன் தாங்கும் உறவும் நட்பும் கிடைத்தால் , எல்லா தருணங்களையும் இனிமையாய் இதமான பொக்கிஷ தருணமாய் மாறிவிடும் என்பதை அழகாக கூறியுள்ளார் .



உனக்காகவே பிறந்தவள் நான்..உறவு பாலம்


வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖
 
Top